ஹனிமூன் போகணுமா? பிளைட், ரயில், பஸ் எதுல போனால் கட்டணம் குறைவு.. தெரிஞ்சிக்க சூப்பர் app இருக்கே

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு இடத்திற்கு பிளைட்டில் பயணம் செய்தால் எவ்வளவு ரூபாய், அதே இடத்திற்கு ரயிலில் பயணம் செய்தால் எவ்வளவு என்பதை உட்கார்ந்த இடத்திலிருந்தே தெரிந்து கொள்ளலாமே!

கோடை காலம் வந்தாச்சு! பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் திருமணங்கள் செய்ய சுப முகூர்த்த தினங்கள் வருகின்றன. கோடையை கழிக்க செல்வோரும் ஹனிமூன் செல்ல முயல்வோரும் எந்த இடத்திற்கு செல்லலாம் என யோசிப்பதுண்டு.

Do you know an app which is useful to know the transportation cost

எல்லாவற்றையும் விட எவ்வளவு செலவு ஆகும், விமானத்தில் செல்லலாமா, ரயிலில் சென்றால் விலை குறையுமா, பஸ்ஸில் சென்றால் சவுகரியமாக இருக்குமா, காரில் சென்றால் கட்டுப்படியாகுமா என்றெல்லாம் யோசிப்பதுண்டு.

மேலும் அந்த இடத்திற்கு சென்றால் எங்கு தங்கலாம் போன்ற கேள்விகள் எல்லாம் மனதிற்குள் எழும். அதற்குள் கோடை விடுமுறையே முடிந்துவிடும். ஒரு புள்ளையே உருவாகிவிடும். இப்படி மண்டையை பிய்த்துக் கொள்ளாமல் இருக்க என்ன செய்யலாம். உட்கார்ந்த இடத்திலிருந்தே இந்த தகவல்களை எப்படி பெறுவது என தெரிந்து கொள்ளலாம்.

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது Rome2rio என்ற செயலியை பிளேஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும். https://play.google.com/store/apps/details?id=com.rome2rio.www.rome2rio

இதன் பிறகு எங்கிருந்து எங்கே செல்ல விரும்புகிறீர்கள் என கேட்கும். அதற்கு நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை கொடுத்தால் போதும். உதாரணமாக சென்னையிலிருந்து கொச்சிக்கு செல்ல விரும்புகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள்.

உடனே அந்த இடத்தை கொடுக்க வேண்டும். பின்னர் search பட்டனை அழுத்தினால் போதும். அம்புட்டு தகவல்களும் வந்து கொட்டோ கொட்டுனு கொட்டும். சென்னையில் இருந்து 4 வழிகளில் நீங்கள் கொச்சிக்கு செல்லலாம் என வரும்.

Do you know an app which is useful to know the transportation cost

அத்துடன் விமானத்தில் 2 மணி நேரம் 21 நிமிடங்கள் ஆகும். இதற்கு கனடா நாட்டு டாலர்களில் விலை இருக்கும். நீங்கள் அதை இந்திய நாட்டு விலைக்கு மாற்றி தெரிந்து கொள்ளலாம். அதாவது சென்னை டூ கொச்சி செல்ல 3860 ரூபாய் முதல் 12,200 ரூபாய் வரை விமான கட்டணம் இருக்கும்.

இதே ரயிலில் செல்ல வேண்டும் என்றால் 12 மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகும். இதற்கு கட்டணம் ரொம்ப சீப். ரூ 305 முதல் 1655 வரை வசூலிக்கப்படும். அதாவது நீங்கள் தேர்வு செய்யும் பெட்டியை பொருத்தது. ஏசி பெட்டியாஸ டீலக்ஸ்ஸா, ஸ்லீப்பரா, சிட்டிங்கா என்பதை பொருத்து ரேட் மாறும்.

ஒரு வேளை ரயிலும், விமானமும் வேண்டாம், பேருந்தில் செல்லலாம் என முடிவு செய்தால் சென்னை டூ கொச்சிக்கு 12 மணி நேரம் 36 நிமிடங்கள் ஆகும். ரூ 1409 ரூபாய் முதல் 2021 ரூபாய் வரை வசூலிக்கப்படும். அட போங்க! உங்க ஃபிளைட்டும் வேண்டாம், ரயிலும் வேண்டாம், பஸ்ஸு்ம வேண்டாம். எங்ககிட்ட சொந்த"கார்" இருக்கே என நீங்கள் சொல்லலாம்.

அந்த சொந்த காரில் செல்லவும் எவ்வளவு செலவு ஆகும் என்பதையும் இந்த ஆப் சொல்லிவிடும். அதாவது காரில் செல்ல 695 கி.மீ. தூரம் ஆகும். காரில் கொச்சி செல்ல 9 மணி நேரம் 40 நிமிடங்கள் ஆகும். இதற்கு பெட்ரோல் செலவாக ரூ 6800 முதல் 9802 ரூபாய் வரை செலவாகும். அது கொச்சியில் நாம் தங்குவதற்கு என்னென்ன ஹோட்டல்கள் இருக்கின்றன அங்கு ஒரு இரவு தங்குவதற்கான கட்டணங்கள் எவ்வளவு என்பது குறித்தும் தெரிவிக்கிறது. எனவே இந்த செயலியின் உதவியுடன் டூர் செல்ல தோராயமாக போக்குவரத்துக்கும் ஹோட்டலுக்கும் இவ்வளவு பணம் வேண்டும் என்ற ஒரு ஐடியா வந்துவிடும். பிறகு சாப்பாட்டு செலவுதானே! அது என்ன ஆகிவிட போகிறது? என்ன ரெடியா, கைஸ்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+