Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவில் தானே இருக்கு என இஷ்டத்துக்கு போகமுடியாது! அனுமதி இல்லாமல் என்ட்ரி ஆக முடியாத "7 இடங்கள்"

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நம் நாட்டிலேயே இருக்கும் சில மாநிலங்கள் மற்றும் சில இடங்களுக்கு செல்ல உள் நுழைவு சீட்டு எனும் அனுமதி பெற்ற பிறகே செல்ல வேண்டும் என்ற விதி உள்ளது. இந்தியாவில் எந்தெந்த இடங்களுக்கு எல்லாம் இத்தகைய அனுமதி பெற வெண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.

இந்தியாவிற்குள் இருக்கும் சில இடங்களுக்கே செல்வதற்கு மாநில அரசின் அனுமதி பெற வேண்டியது கட்டாயம் என்றால் உங்களுக்கு சற்று வியப்பாக இருக்கலாம். ஆனால், இந்தியாவின் சில மாநிலங்களில் உள்ள இடங்களுக்கு முன்கூட்டியே சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் இருந்து உள்நுழைவு அனுமதி சீட்டு (ILP) கிட்டத்தட்ட விசா போன்று அனுமதி வாங்கியே செல்ல முடியும்.

Do You Know These 7 places in India require travel permits even for Indian Citizens

நமது நாட்டில்தானே இருக்கிறது ஏன் இந்த கெடுபிடிகள் என நீங்கள் நினைக்கலாம். இந்த பகுதிகள் எல்லாம் சர்வதேச எல்லைகள் மற்றும் சென்சிட்டிவ் ஆன இடங்களில் அமைந்துள்ளன. அத்தகைய சில முக்கியமான இடங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

அருணாச்சல பிரதேசம்: மியான்மர், பூடான், சீனா ஆகிய நாடுகளுடன் எல்லையை பகிர்ந்துள்ள அருணாச்சல பிரதேச மாநிலத்திற்குள் செல்ல உள்நுழைவு சீட்டு பெறுவது அவசியம். மூன்று நாடுகளுடன் எல்லையை பகிர்வதால், அருணாச்சல பிரதேசம் மிகவும் சென்சிட்டிவ் ஆன பகுதியாக உள்ளது. டெல்லி, ஷில்லங், கொல்கத்தா, கவுகாத்தி உள்ளிட்ட இடங்களில் உள்ள குடியிருப்பு அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும்.

Do You Know These 7 places in India require travel permits even for Indian Citizens

மேகாலயா: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று மேகாலயா. வங்காளதேசத்துடன் பெருமளவு இந்த மாநிலம் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. அருணாச்சல பிரதேசம், மிசோரம் ஆகிய இந்திய மாநிலங்களும் இந்த மாநிலத்துடன் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. எனவே, மிசோரம் மாநிலத்தில் 24 மணி நேரத்திற்கு மேல் தங்கும் எண்ணத்துடன் சென்றால் கட்டாயம் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து அனுமதியை பெறுவது கட்டாயம் ஆகும்.

Do You Know These 7 places in India require travel permits even for Indian Citizens

நாகாலாந்து: இந்த வரிசையில் அமைந்து இருக்கும் மற்றொரு இந்திய மாநிலம் நாகாலாந்து. மாறுபட்ட கலாசாரம், பழக்க வழக்கங்களை கொண்டது நாகலாந்து மாநிலம். பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் இந்த இடத்தில், விசிட்டர்கள் உள்நுழைவு சீட்டு பெறுவது அவசியம். திம்பூர், கோஹிகா, டெல்லி, ஷில்லாங், மோகோஷங் மற்றும் கொல்கத்தா அல்லது ஆன்லைன் மூலமாக ஆணையர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளிடம் இருந்து அனுமதி பெற்ற பிறகே நாகாலாந்து செல்ல முடியும்.

Do You Know These 7 places in India require travel permits even for Indian Citizens

மிசோரம்: மியான்மர் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளுடன் பகிரும் இந்திய மாநிலம் மிசோரம். இந்த மாநிலத்திலும் பல்வேறு வகையான பழங்குடியின மக்கள் வசிக்கிறார்கள். இங்கு வெளி மாநில மக்கள் செல்ல உள்நுழைவு சீட்டு பெற வேண்டும். மிசோரம் அரசு அதிகாரியிடம் இருந்து அனுமதியை விண்ணப்பித்து பெற வேண்டும்.

Do You Know These 7 places in India require travel permits even for Indian Citizens

கவுகாத்தி, சில்ஷார், கொல்கத்தா, ஷில்லாங் மற்றும் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் இதற்கான அனுமதியை பெறலாம். விமானம் மூலமாக வருபவர்கள் லெங்குபி, ஐஸ்வால் விமான நிலையத்தில் அனுமதி பெறலாம். 15 நாட்கள் (தற்காலிக) வழக்கமான அனுமதி (6 மாதங்கள்) என அனுமதி பெறலாம்.

சிக்கிம் மாநிலத்தின் சில இடங்கள்: சிக்கிம் மாநிலத்தில் ஊரக பகுதிகளான சோம்கோ - பாம்பா மந்திர், நதுலா பாஸ், ஸோங்கிரி டிரெக், ஷிங்கலிலா டிரெக், யுமெசடாங், குருதோங்க்மர் லேக், ஜீரோ பாயிண்ட், யும்தாங் மற்றும் தங்கு சோப்டா பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளுக்கு செல்ல அனுமதி பெற வேண்டும். அந்த மாநிலத்தில் சுற்றுலாத்துறையிடம் இந்த அனுமதியை பெற முடியும். டிராவல் ஏஜெண்ட்கள், டூர் ஆபரேட்டர்கள் மூலமாகவும் இந்த அனுமதியை பெறலாம்.

Do You Know These 7 places in India require travel permits even for Indian Citizens

லட்சத்தீவு: இந்திய யூனியன் பிரதேசமான லட்சத்தீவு தீவுகளின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு சுற்றுலா செல்ல விரும்பும் பயணிகள் அனைவரும் உரிய அனுமதியை பெற வேண்டும். உள்ளூர் போலீசாரிடம் தடையில்லா சான்றிதழும் பெற வேண்டும். அடையாள ஆவணங்களை சமர்பித்து ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

Do You Know These 7 places in India require travel permits even for Indian Citizens
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+