கொடைக்கானல் குணா குகையை விடுங்க.. மேகமலை எவ்வளவு அழகு தெரியுமா? மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ

Subscribe to Oneindia Tamil

தேனி: மஞ்சுமெல் பாய்ஸ் படம் பார்த்துவிட்டு எல்லாருமே கொடைக்கானல் குணா குகையை பார்க்க ஆர்வம் காட்டுகிறார்கள். அப்படி கொடைக்கானல் போகிறவர்கள், அப்படி இறங்கும் போது தேனி வழியாக இறங்கினால் மேகமலை என்கிற அற்புதமான சுற்றுலா தலத்திற்கு போகலாம்.. மேகமலையின் அழகான தோற்றம் குறித்த வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் 3 பக்கமும் மலையாலும் ஒருபக்கம் சமவெளியையும் எல்லையாக கொண்ட மாவட்டம் என்றால் அது தேனி மாவட்டம் தான். தமிழ்நாட்டில் முப்போகம் விளைச்சல் உள்ள ஊர். திரும்பிய பக்கம் எல்லாம் அருவிகள்.. எங்கு பார்த்தாலும் பச்சை பலேலென நெல் வயல்கள், கரும்பு தோட்டங்கள், திராட்சை தோட்டங்கள், மனிதர்களின் காலடியே படாத பல அற்புதமான தண்ணீர் தேசங்கள் நிறைந்த பகுதி தேனி மாவட்டம்.

Go to Meghamalai instead of Kodaikanal Guna Cave Do you know how beautiful it is Fascinating video

தேனி மாவட்டம் அதனை ஒட்டியுள்ள சுற்றுலா தளங்களை பட்டியல் இட்டால் தலையே சுற்றும் அந்த அளவிற்கு லிஸ்ட் பெரியது. முதல் இடமே இப்போது அதிகம் பேர் செல்லும் கொடைக்கானல் தான். தேனி மாவட்டத்திற்கு வந்துதான் கொடைக்கானலே போக முடியும். அதேபோல் மூணாறு , வாகமன், தேக்கடி, சோத்துப்பாறை, கும்பக்கரை, வீரப்ப அய்யனார் கோவில், வீரபாண்டி கௌமாரியம்மன், குச்சனூர் சனீஸ்வரன் கோவில், உத்தமபாளையம் ராகு கோவில், இடுக்கி அணை, ராமக்கல் மேடு, போடி மெட்டு, 18ம் கல்வாய் தொட்டிப்பாலம், குரங்கணி, டாப் ஸ்டேசன், கொழுக்குமலை, மேகமலை, சுருளி அருவி, சின்ன சுருளி, வைகை அணை, என லிஸ்ட் உண்மையில் மிகப்பெரியது.

Go to Meghamalai instead of Kodaikanal Guna Cave Do you know how beautiful it is Fascinating video

இதில் நாம் பார்க்க போது மேகலை பற்றித்தான்.. காரணம் மேகமலைக்கு சுற்றுலா செல்ல இப்போது உகந்த நாட்கள் ஆகும்.குடும்பத்தோடு கொடைக்கானல் போகிறவர்கள் அப்படியே மேகமலைக்கும் போய் வரலாம். தேனி மாவட்டம் சின்னமனூர் நகரத்திலிருந்து 34 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள மேகமலை இயற்கை காதலர்களுக்கு மிகவும் பிடித்த இடம். இயற்கை இயற்கையாக அப்படியே உள்ள மேகமலை மேகங்கள் தவழும் மலை என்பதால் இதனை மேகமலை என்று அழைக்கிறார்கள். இதை வெறும் சுற்றுலா தளம் என்று சொல்லி விடவே முடியாது. பெரிய மரங்கள், பசுமையான நிலப்பரப்புடன், மிக அழகான சாய்ந்த நிலப்பரப்பில் உள்ள தேயிலை, காபி பயிர்த் தோட்டங்கள் வசீகரிக்கும். உயர்ந்த மலைகளுக்கு நடுவில் மிக ஆழமான பள்ளத்தில், அழகிய ஏரிப்பகுதியுடன் மேகமலை இருக்கிறது.

Go to Meghamalai instead of Kodaikanal Guna Cave Do you know how beautiful it is Fascinating video

மேகமலையில் ஹைவேவிஸ் மேலணை, கீழணை, தூவாணம் அணை, மணலாறு அணை, வெள்ளியாறு அணை, இரவங்கலாறு அணை என ஏராளமான அணைகள் உள்ளன. உட்பிரையர் என்ற தனியார் நிறுவனத்தாரின் தேயிலைத் தோட்டங்கள் மேகமலையில் பெரும்பாலும் இருக்கின்றன. . அவர்களின் தேயிலைத் தொழிற்சாலைக்குச் சென்று டீ தூள் தயாரிக்கும் முறை பற்றி நீங்கள் அறியலாம். அதற்கு தனிக் கட்டணம் வசூலிக்கிறார்கள்.

Go to Meghamalai instead of Kodaikanal Guna Cave Do you know how beautiful it is Fascinating video

மேகமலையில் ஹைவேவிஸ் அணையைக் கடந்து சென்றால் இறைச்சல் பாறை என்ற அழகான அருவி இருக்கும். இந்த அருவியில் ஆண்டின் பெரும்பாலான நாட்கள் தண்ணீர் பாய்ந்தோடும். மேகமலையில் கோடைக்காலத்தில் திடீரென மேகங்கள் ஒன்று கூடி மலை பெய்யும். பெரும்பாலும் மாலைநேரங்களில் இந்த சம்பவம் நடக்கம். மேகங்கள் மழை பெய்யும் முன்பு உங்களை தழுவி செல்லும் அழகு மிகவும் பிடிக்கும்

Go to Meghamalai instead of Kodaikanal Guna Cave Do you know how beautiful it is Fascinating video

மேகமலைக்குச் செல்ல சின்னமனூரிலிருந்து காலை, மாலை இரு நேரங்களில் பேருந்து வசதி உள்ளது. அதேநேரம் சுற்றிபார்க்க பேருந்துகளில் செல்வது வசதியாக இருக்காது. இருசக்கர வாகனத்தில் போகலாம். இல்லை என்றால் கார் உள்ளிட்ட சொந்த வாகனத்தில் அல்லது வாடகை வாகனத்தில் செல்லலாம். மேகமலை அடிவாரப் பகுதியான தென்பழஞ்சியில் அமைந்துள்ள வனத்துறையின் சோதனைச் சாவடியில் காலை 6 மணிக்கு மேல் மற்றும் மாலை 6 மணிக்குள் மட்டுமே சோதனைச் சாவடியை கடந்து செல்ல அனுமதிப்பார்கள். மேகமலையில் தனியார் தங்கும் விடுதிகள் மிக குறைவாகவே இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+