குற்றாலத்திற்கு டூர் போறீங்களா? ஜில்லுன்னு படகு சவாரி போகலாம்.. இந்த இடத்தை மிஸ் பண்ணிடாதீங்க
தென்காசி: குற்றாலத்திற்கு அருகே உள்ள குண்டாறு அணை தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தென் மாவட்டங்களிலும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும்நிலையில், குண்டாறு அணை நிரம்பியுள்ளது. இதனால் அங்கு படகு சவாரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டத்தில் உள்ள மிக முக்கிய சுற்றுலாத் தலமாக குற்றாலம் உள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்து இருக்கும் குற்றாலத்தில் மூன்று அருவிகள் உள்ளன. குற்றாலத்திற்கு போனால், மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, ஆகிய மூன்று இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் தவறாமல் செல்வதை பார்க்க முடியும்.

அங்குள்ள இயற்கை சூழலும் கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் இருக்கும் என்பதால் சுற்றுலாப் பயணிகளும் வருடம் தவறாமல் குற்றாலம் செல்ல வேண்டும் என நினைப்பார்கள். அதிலும் தென் மாவட்ட மக்கள் அடிக்கடி செல்லும் சுற்றுலா தலமாக குற்றாலமே உள்ளது. குற்றாலத்திற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் அருகில் உள்ள இடங்களுக்கு சென்று வருகிறார்கள். இந்த நிலையில், தென்காசி அருகே உள்ள குண்டாறு அணையில் மீண்டும் படகு சவாரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், செங்கோட்டை அருகே அமைந்துள்ள 36.10 அடி உயரம் கொண்ட குண்டாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் தற்போது குண்டாறு அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. பார்ப்பதற்கு கடல் போல் இயற்கை சூழலுடன் ரம்மியாக இந்த அணை காட்சியளிக்கிறது.

குண்டாறு அணை தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் படகு சவாரி மீண்டும் தொடங்கப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குற்றாலத்திற்கு சென்றுவிட்டு அப்படியே குண்டாறு அணையிலும் படகுசாவாரி செய்து வருகிறார்கள். இயற்கை அழகுடன் கூடிய குண்டாறு அணையில் படகு சவாரி செய்த படியே செல்பி எடுத்தும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
விடுமுறை நாட்களில் குண்டாறு அணைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குற்றாலத்தில் இருந்து வெறும் 13 கிலோ மீட்டர் தொலைவில் குண்டாறு அணை அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை எழில் கொஞ்சும் அழகை ரசித்தபடியே இந்த குண்டாறு அணைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லலாம்.

கடந்த 1983 ஆம் ஆண்டு இந்த அணை கட்டப்பட்டது. பல சினிமா திரைப் படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. குண்டாறு அணைக்கு செல்லும் பாதை மிகவும் குறுகலானதோடு, பாறைகள் மற்றும் கரடுமுரடானதாக இருக்கும். சொந்த வாகனங்களில் இங்கு செல்லலாம். செல்ஃபி எடுப்பதற்கு நிறைய இடங்கள் உள்ளன. இதேபோன்று அந்த அணைக்கு மேல் பகுதியில் ஒரு நீர்வீழ்ச்சி ஒன்றும் உள்ளது.
அந்த நீர்வீழ்சிக்கு செல்லும் இடம் பச்சை பசேல் என இருபுறமும் பச்சை போர்வை போர்த்தியது போல் இருக்கும். அங்கு இரண்டு நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இதிலும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழலாம். குண்டாறு அணை வரை மட்டுமே நமது சொந்த வாகனத்தில் செல்ல முடியும். அங்கு வாகனங்களை நிறுத்திவிட்டு, ஜீப்களில் நீர்வீழ்ச்சி இருக்கும் இடத்திற்கு செல்லலாம். அல்லது நடந்து கூட செல்லலாம்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications