தரங்கம்பாடி.. பீச்சோரத்தில் டேனிஷ் கோட்டை.. ஆச்சரியத்தை கிளப்பும் மயிலாடுதுறை.. அதென்ன ஓசோன் காற்று
சென்னை: தமிழ்நாட்டின் மிகச்சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றுதான் தரங்கம்பாடி.. இது ஒரு சிறிய கடற்கரை நகரமாகும்.. இந்த இடத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால், 14ம் நூற்றாண்டிற்கு சென்று அறிய வேண்டி உள்ளது.
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளது தரங்கம்பாடி.. கி.பி 1620-ம் ஆண்டு டென்மார்க் நாட்டினர் தரங்கம்பாடியை, இந்தியாவில் தங்களது வர்த்தக மையமாக அமைக்க முடிவு செய்தவுடன், அப்போது தஞ்சையை ஆண்ட விஜயரகுநாத நாயக்கரிடம், தரங்கம்பாடியில் ஒரு துறைமுகத்தையும், டேனிஷ் கலை நுணுக்கத்துடன் ஒரு பாதுகாப்பு கோட்டையையும் அமைக்க அனுமதி பெற்றனர்.

2 வருடத்திலேயே அதாவது, கி.பி. 1622-ம் ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்பட்டதுதான் அந்த பிரமாண்ட கோட்டை.. இதுதான், இந்தியாவில் டேனிஷ் வர்த்தக மையத்தின் தலைமை இருப்பிடமாக அமைந்தது.
அருங்காட்சியகம்: 400 வருடங்கள் பழமையாகியும் இன்றும் கம்பீரமாய் காட்சியளிக்கிறது இந்த டேனிஷ் கோட்டை.. இந்த கோட்டையில் செயல்படும் அருங்காட்சியகத்தில், 14,15,16ம் நூற்றாண்டுகளில் டேனிஷ்காரர்கள், தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள், 1200-ம் ஆண்டுகால சிலைகள், பீங்கான், மரத்தாலான பழமையான பொருட்கள், டேனிஷ் அரசர்கள், ஆளுநர்களின் போட்டோக்கள், டேனிஷ்கால பத்திரங்கள், போர்க்கருவிகள், 16ம் நூற்றாண்டில் தரங்கம்பாடி வந்த கப்பல் ஒன்றின் உடைந்த பாகங்கள், என ஏராளமான வரலாற்று சின்னங்களை பத்திரப்படுத்தி காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.
மேலும் இந்த கோட்டையின் தரைத்தளத்தில் சிறைச்சாலை, ஓய்வறைகள், பண்டகவைப்பறை, பீர், ஒயின் கிடங்கு அறைகளாக டேனிஷ்காலத்தில் பயன்படுத்தப்பட்ட அறைகளை, அப்படியே பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இப்போதும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
தரங்கம்பாடி: எனவேதான், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை பார்வையிடுவதற்காக சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.. தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள், இந்த டேனிஷ் கோட்டை மற்றும் கடற்கரைப்பகுதியில் பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் கடற்கரையில் குளித்து விளையாடி மகிழ்ந்து செல்கின்றனர். இதைத்தவிர, ஸ்ரீ முருகன் கோயில், புதிய மாசிலாமணி ஈஸ்வரன் கோயில், போன்றவை இங்கு பார்க்க வேண்டிய இடங்களாகும்.

இன்னொரு ஸ்பெஷலாட்டியும் இங்கு உள்ளது.. இங்கே அபூர்வ காற்றான ஓசோன் காற்று காலை, மாலை என வந்து செல்கிறது.. தரங்கம்பாடி கடற்கரையில் ஏப்ரல்,மே, ஜூன்,ஜூலை ஆகிய மாதங்களில் ஓசோன் காற்று அதிக அளவில் வீசுகிறது. உடல் நலத்துக்கு நன்மையளிக்கக் கூடிய ஓசோன் காற்றை சுவாசிப்பதற்காக இப்பகுதிக்கு அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

ஓசோன் நன்மை: ஓசோன் காற்றின் நன்மைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் தரங்கம்பாடி தேர்வு நிலை பேரூராட்சி சார்பில் மினி மாரத்தான் போட்டியும் கடந்த வாரம் இங்கு நடந்தது குறிப்பிடத்தக்கது.
இப்போது கோடை விடுமுறை என்பதால், சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்து செல்வதால் தரங்கம்பாடி கடற்கரை களை கட்டியுள்ளது. இதனால், சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாதுகாப்பு பணியில் தரங்கம்பாடி கடலோர காவல்படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்..!!!
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications