சொக்க வைக்கும் சந்திரயான் 3.. இந்தியாவின் மாயலோகம்! இஸ்ரோவுக்கு சுற்றுலா போக ஆசையா? இதை படிங்க
சென்னை: இந்தியாவின் விண்வெளித் துறையை உலகளவில் உயர்த்த இருக்கும் சந்திரயான் 3 திட்டம் வெற்றியின் நெருக்கத்தில் இருக்கும் நிலையில் இஸ்ரோவுக்கு சுற்றுலா செல்வது எப்படி என்று பார்ப்போம்.
வானில் பறக்கும் விமானத்தை மாடியில் ஏறி ஆர்வமாக பார்க்கும் நமக்கு, ராக்கெட் எல்லாம் எப்பேர்பட்ட அனுபவத்தை வழங்கும்? அண்மையில் இஸ்ரோ ஏவி இருக்கும் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. வானில் கிழித்துக்கொண்டு சென்ற சந்திரயான் 3 ஐ சுமந்து சென்ற ராக்கெட்டின் தடத்தை பகிர்ந்தே பலர் பூரித்துப்போனோம்.

அறிவியல் சாத்தியப்படுத்திய இந்த அபார கண்டுபிடிப்பு பல நூற்றாண்டுகளுக்கு நம்மை மெய் சிலிர்க்க வைத்துக்கொண்டே இருக்கப்போகிறது. அப்படிப்பட்ட ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்பும் இடம் எது? அது எப்படி இருக்கும்? ராக்கெட்டை எப்படி தயாரிக்கிறார்கள்? என்பன போன்ற பல கேள்விகள் உங்களுக்குள் இருக்கும். அதை நேரிலேயே சென்று பார்த்தால் செமயா இருக்கும்ல..
அதற்கான வார்ப்பை ஃபனிஸ்கூல் என்ற நிறுவனம் இந்திய மாணவர்களுக்கு வழங்குகிறது. இந்திய அளவிலான கல்வி நிறுவனங்களில் படித்து வரும் இந்திய மாணவர்களுக்கு இந்த சேவையை அந்த நிறுவனம் வழங்கி வருகிறது. இஸ்ரோவில் விண்வெளி ஆய்வு தளங்கள், ராக்கெட் ஏவுதலங்களுக்கு அழைத்து செல்கிறார்கள்.
இதற்காக பல்வேறு டூர் பிளான்களை அந்த நிறுவனம் வழங்கி வருகிறது. ரூ.3,000 முதல் ரூ.6,000 வரை இதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ரூ.2990 மதிப்புள்ள இந்த 3 நாள் சுற்றுலா சென்னையில் தொடங்குகிறது. சென்னை சுற்றுலா, சென்னை மெரினா லைட் ஹவுஸில் தொடங்கி ஆந்திர மாநில ஸ்ரீஹரிகோட்டாவில் மிகவும் உயரமான பகுதி, பி.எஸ்.எல்.வி ராக்கெட் ஏவுதளம், ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் ஏவுதளம், ஸ்பேஸ் மியூசியம், பவர் யோகா கூட்டம் போன்றவற்றுக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள்.
ரூ.5,400 மதிப்பிலான சுற்றுலாவில் கூடுதலாக புதுச்சேரி, காஞ்சிபுரம், மஹாபலிபுரத்துக்கு அழைத்து செல்கிறார்கள். மற்றொரு 3 நாள் ரூ.2,990 திட்டத்தில் அஹமதாபாத் சுற்றுலா, அங்குள்ள இஸ்ரோ ஸ்பேஷ் அப்லிகேசன் மைய சுற்றுலா, கன்காரியா ஏரி சுற்றுலா, சபர்மதி ஆறு போன்றவற்றுக்கு அழைத்து செல்கிறார்கள். கூடுதலாக ரூ.1000 கொடுத்தால் குஜராத் சையின்ஸ் சிட்டிக்கும் அழைத்து செல்வார்கள். ரூ.4,490 கட்டணத்துக்கு இஸ்ரோ எஸ்.ஏ.சி. லோதல் ஹரப்பா பழங்கால சுற்றுலாவை கொண்டு வருகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications