குறைந்த செலவில் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல 6 டிப்ஸ்.. இதில் கடைசி பாயிண்ட் தான் ரொம்ப முக்கியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குறைந்த செலவில் ஒரு டிரிப் போக வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். ஆனால், அதற்கு என்ன செய்ய வேண்டும்.. எதில் கவனமாக இருக்க வேண்டும் என்பது பலருக்கும் தெரியாது.. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

சம்மர் வந்துவிட்டது.. எங்காவது வெளியே டிரிப் போகலாம் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். இருப்பினும், அதற்கு ஆகும் செலவை யோசித்தால் சற்று கண்ணைக் கட்டும்.

How to plan a budget trip with your family

ஆனால், அந்த கவலை இனி உங்களுக்கு வேண்டாம். குறைந்த பட்ஜெட்டில் ஒரு அட்டகாசமான டிரிப்பை எப்படித் திட்டமிட வேண்டும்.. அதற்கு நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்துப் பார்க்கலாம்.

பட்ஜெட்: குறைந்த பட்ஜெட்டில் நீங்கள் டிரிப் போக வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் முதலில் பட்ஜெட்டை செட் செய்ய வேண்டும். குறைந்த செலவு என்று சும்மா மனதில் வைத்துக் கொண்டு அதிகபட்ச பட்ஜெட்டை நிர்ணயம் செய்யாமல் விட்டால் செலவு எகிறிவிடும். எனவே, ஒரு டிரிப்பை பிளான் செய்யும் போது அதற்கு பட்ஜெட்டை ஒதுக்குவது முக்கியமான படியாகும்.

ஊட்டிக்கு கிளம்பிட்டு இ-பாஸ் அப்ளை பண்ணாலே போதும்.. 2 நிமிடத்தில் கிடைக்கும்.. தலைமை செயலர் விளக்கம்


ஹோட்டல்கள், டிக்கெட்கள், உணவுகள், அங்கு ஆகும் செலவுகள் என ஒவ்வொன்றும் எந்தளவுக்குச் செலவழிக்க விரும்புகிறார்கள் என்பதை ஒரு லிஸ்ட் போட்டு ரெடி செய்து கொள்ளுங்கள். இதைச் செய்து விட்டால் முக்கியமான விஷயம் முடிந்ததாக அர்த்தம்.

எப்படிச் செல்லலாம்: அடுத்து எப்படி அந்த குறிப்பிட்ட இடத்திற்குப் போக வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். ஒரு வேலை நீங்கள் சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்ல விரும்பினால், அதற்குப் பல வழிகள் இருக்கிறது. ரயில் மூலம் போனால் செலவு குறையும்.. ஆனால் பயண நேரம் அதிகமாக இருக்கும். பஸ் மூலம் போனால் செலவு சற்று அதிகம். ஆனால், விரைவில் செல்ல முடியும். அதேநேரம் ரயில் அளவுக்குச் சவுகரியம் இருக்காது. விமானம் என்றால் மிக வேகமாகச் செல்லலாம். ஆனால், செலவு அதிகம். மேலும் லக்கெஜ் கட்டுப்பாடுகளும் இருக்கும்.

இதில் உங்களுக்கு எது ஏற்றதாக இருக்குமோ அதற்கேற்ப தேர்வு செய்து கொள்ளுங்கள். இதில் செலவு குறைவு என்பதால் ரயில் தான் சிறந்தது என நம்மால் எளிதாகச் சொல்லிவிட முடியாது. ஏனென்றால் சென்னையில் இருந்து டெல்லி போக வேண்டும் என்றால் ரயிலில் குறைந்தது 25 மணி நேரம் ஆகும். எனவே, இதுபோல தொலைதூர பயணங்களுக்கு விமானமே சிறந்தது. விமானங்களைப் பொறுத்தவரை எவ்வளவு முன்கூட்டி புக் செய்கிறோம் அந்தளவுக்குக் கட்டணம் குறையும். எனவே அதைக் கவனத்தில் கொள்ளுங்கள்..

சொந்த வாகனத்தில் போனால் எரிபொருள், டோல் எனச் செலவு அதிகரிக்கும். அதில் பாதுகாப்பும் குறைவு.. எனவே பட்ஜெட் டிரிப் என்றால் அது பற்றி நினைத்துக் கூட பார்க்க வேண்டாம்.

ஹோட்டல்கள்: அடுத்து ஆகும் முக்கிய செலவு ஹோட்டல்கள் தான். ஆனால், நன்றாகத் தேடினால் இதிலும் செலவைக் கணிசமாகக் குறைக்கலாம். ஆடம்பரத்தைத் தவிர்த்து பட்ஜெட் விலையில் பக்காவாக இருக்கும் ஹோட்டல்களை தேர்வு செய்யுங்கள். இப்போது பல தளங்களில் போட்டோ உடனேயே ஹோட்டல்களை பார்க்கும் வசதி இருக்கிறது. அதை வைத்து செக் செய்யுங்கள். மேலும், ஹோட்டல்களுக்கு போன் செய்தும் நேரடியாக புக் செய்தால் ஆப்பர் இருக்கிறதா என்பதைக் கேட்டு அதைப் பெறுங்கள். இந்த மூன்றையும் பக்காவாக செய்தாலேயே செலவு கணிசமாகக் குறைந்துவிடும்.

பொது போக்குவரத்து: அடுத்து அங்குச் சென்றவுடன் முடிந்தவரை பொது போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள். பெரும்பாலான சுற்றுலா தளங்களில் பொது போக்குவரத்து டீசன்டாக இருக்கும். எனவே, முடிந்தவரை அதைப் பயன்படுத்துங்கள். அப்படி இல்லை குறைந்த விலையில் டூவீலர் வாடகைக்குக் கிடைக்கும் அதை எடுத்தும் பயன்படுத்தலாம். இருப்பினும், இதற்கான விதிமுறைகள் ஒவ்வொரு ஊரிலும் மாறும் என்பதால் கவனமாக இருக்கவும். வாடகை கார்களை தவிர்த்தாலே செலவைக் கணிசமாகக் குறைக்கலாம்.

உணவு: அதேபோல உணவுகளிலும் நீங்கள் செலவைக் குறைக்கலாம். டிரிப் போவதே உள்ளூர் உணவைச் சாப்பிட்ட தான்.. அதுவே வேண்டாம் என சொன்னால் எப்படி என நீங்கள் கேட்கலாம்.. ஆனால், விஷயம் என்னவென்றால் பேன்சியாக ஹோட்டல்களை தவிர்த்துவிட்டு, உள்ளூர் மக்களிடம் கேட்டாலே நல்ல தரமான உணவு எங்குக் கிடைக்கும் என்பதைச் சொல்லிவிடுவார்கள். இதன் மூலம் பர்ஸையும் நீங்கள் காப்பாற்றலாம்.

இதுதான் ரொம்ப முக்கியம்:
அடுத்து முக்கியமானது என்னவென்றால் எப்போதும் சீசன் இல்லாத நேரத்தில் பயணத்தைத் திட்டமிடுங்கள். உதாரணமாக நமது ஊரில் ஊட்டி, கொடைக்கானலுக்கு சம்மரில் மக்கள் குவிவார்கள். அந்த நேரத்தில் எல்லாமே காஸ்ட்லியாக இருக்கும். எனவே, அந்த நேரத்தைத் தவிர்த்து சீசன இல்லாத பயணத்தைத் திட்டமிடுங்கள். இவை தவிரச் செல்லும் இடங்களில் குறைந்த செலவில் என்ன செய்யலாம் என்பதைத் தெரிந்து வைத்துக் கொள்வதும் போனஸ்.

இந்த டிப்ஸ்களை மட்டும் நீங்கள் பாலோ செய்தால் போதும் அட்டகாசமான ஒரு டிரிப்பை மிகவும் குறைந்த பட்ஜெட்டிலேயே முடிக்கலாம். எனவே, அடுத்த முறை டிரிப்பை பிளான் செய்யும் போது இந்த 6 விஷயங்களை மறக்காதீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+