Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை டூ இந்தோனேசியா.. தம்பதிக்கு எமனாகிய தேனிலவு .. சுற்றுலா நிறுவனத்திற்கு 1.60 கோடி அபராதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பூந்தமல்லியை அடுத்த சென்னீா்குப்பத்தை சோ்ந்த விபூஷ்னியா என்ற பெண்ணுக்ககும் லோகேஸ்வரன் என்பவருக்கும் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. டாக்டர் தம்பதியான இவர்கள், தேனிலவுக்காக இந்தோனேசியா சென்றனா். இந்தோனேசியா கடலில் படகில் சென்ற அவர்கள் 'போட்டோ ஷூட்' நடத்தியுள்ளனர். எதிர்பாராதவிதமாக தவறிவிழுந்ததால் கடல் இருவருக்கும் எமனாக மாறியது. இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட சுற்றுலா நிறுவனத்திற்கு 1.60 கோடி அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இளம் தலைமுறையினர் பலர் இன்றைக்கு வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்ல ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக ஹனிமூனுக்கு வெளிநாடு செல்வதை இங்கு பல பணக்காரர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் விரும்புகிறார்கள் . சற்று வசதி உள்ளவர்கள் கொடைக்கானல், ஊட்டி, சிம்லா, அந்தமான், கோவா என்று இந்தியாவிற்குள் சுற்றுலா செல்கிறார்கள்.

Indonesia tour Chennai court orders travel agency to pay Rs 60 lakh compensation for Doctor couple

அதேநேரம் சிலர் மாலத்தீவு, இந்தோனேஷியா, தாய்லாந்து, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மொரீஷியஸ் போன்ற பல்வேறு நாடுகளுக்கு பறக்கிறார்கள். இப்படி சுற்றுலா செல்வோரை அழைத்து செல்லவே ஏராளமான சுற்றுலா நிறுவனங்கள் உள்ளன. பேக்கேஜ் அதற்கு உள்ளன. அதில் பலரும் விரும்பி பயணிக்கிறார்கள். அதேநேரம் சுற்றுலா செல்லும் இடத்தில் எதிர்பாராத சம்பவங்களும் நடக்கின்றன. அப்படித்தான் இந்தோனேஷியாவில் சென்னை தம்பதிக்கு நடந்துள்ளது.

இந்தோனேஷியா சுற்றுலா

சென்னை பூந்தமல்லியை அடுத்த சென்னீா்குப்பத்தை சோ்ந்தவா் திருஞானசெல்வம் என்பவரின் மகள் விபூஷ்னியாவிற்கும் , லோகேஸ்வரன் என்பவருக்கும் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. இவர்கள் இருவமே டாக்டர்கள். இந்த டாக்டர் தம்பதி தேனிலவுக்காக இந்தோனேசியா சென்றனா். இந்தோனேசியா கடலில் படகில் சென்ற அவர்கள் 'போட்டோ ஷூட்' நடத்தியிருக்கிறார்கள். கடல் அலை காரணமாக நிலை தடுமாறி விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

தந்தை வழக்கு

டாக்டர் தம்பதியை தேனிலவு அழைத்து சென்ற சுற்றுலா நிறுவனத்தின் தவறான வழிகாட்டுதலால் விபத்து நடந்ததாக புகார் எழுந்தது. இந்த விபத்து நடந்ததாக கூறி டாக்டர் விபூஷ்னியாவின் தந்தை திருஞானசெல்வம் வக்கீல்கள் காசிராஜன், அஜித்குமார் ஆகியோர் மூலம் சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் சுற்றுலா நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

ஒரு கோடி சம்பாதித்த தேனி பெண்.. திருப்பூரில் ஒரு வருடம் கழித்து நடந்த ட்விஸ்ட்.. நடந்தது என்ன?
சுற்றுலா நிறுவனத்தின் தவறு

டாக்டர் விபூஷ்னியாவின் தந்தை திருஞானசெல்வம் தாக்கல் செய்த மனுவில் கூறுகையில், 'எனது மகள், மருமகன் உயிரிழந்த கடல் பகுதியில் ஏற்கனவே பல விபத்துகள் நடந்திருக்கிகறது. சுற்றுலா நிறுவனம் இதை கருத்தில் கொள்ளாமல் அங்கு அழைத்து சென்றுள்ளது. சுற்றுலா நிறுவனத்தின் அஜாக்கிரதை மற்றும் தவறான வழிகாட்டுதலால் தான் இருவரும் உயிரிழக்க நேரிட்டிருக்கிறது. எனவே, சுற்றுலா நிறுவனம் உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

ஒன்றரை கோடி இழப்பீடு

இந்த மனுவிற்கு தெற்கு மாவட்ட நுகர்வோர் மீதான விசாரணையின்போது சுற்றுலா நிறுவனம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'சுற்றுலா நிறுவனத்தின் எச்சரிக்கையை பின்பற்ற தவறியதுதான் இந்த விபத்துக்கு காரணம் ஆகும். இந்த விபத்துக்கு சுற்றுலா நிறுவனம் பொறுப்பேற்க முடியாது. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது. மனுவை விசாரித்த நுகர்வோர் கோர்ட்டு, 'சேவை குறைபாட்டுக்காக ரூ.1½ கோடியும், மன உளைச்சலுக்காக ரூ.10 லட்சமும் என மொத்தம் ரூ.1 கோடியே 60 லட்சத்தை மனுதாரருக்கு சுற்றுலா நிறுவனம் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+