ஊட்டி கொடைக்கானலுக்கு பதில்.. இவ்வளவு அழகான இடமா.. பொங்கல் தான் என்ஜாய் பண்ண பெஸ்ட் டைம்
சென்னை: ஊட்டி, கொடைக்கானலில் பொங்கல் பண்டிகை காலத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும், கிளைமேட் சூப்பராக இருந்தாலும் சுற்றுலா சென்ற ரசிக்க சில எதார்த்தமான சிக்கல்கள் இருக்கும். எனவே ஊட்டி , கொடைக்கானலுக்கு பதில் இந்த பொங்கல் பண்டிகைககு ஏற்காடு டூர் போய் பாருங்கள். இது தான் ஏற்காட்டினை என்ஜாய் பண்ண பெஸ்ட் டைம் ஆக இருக்கும்.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு, சேலத்தில் இருந்து கூப்பிடும் தூரத்தில் இருக்கிறது. பெரிய அளவில் செலவு ஆகாது. அதேநேரம் அருமையான காலநிலை, பசுமையை, இயற்கையை விரும்புவோருக்கு பிடித்த இடம் ஆகும். சேலம் நகரில் இருந்து வெறும் 30 கிலோ மீட்டர் மட்டுமே.. சென்டரலில் இருந்து கிளாம்பாக்கம் போகும் தூரத்தில் தான் ஏற்காடு சேலத்தில் இருந்து அமைந்துள்ளது.

சேலம் ஏற்காடுக்கு எப்போது வேண்டுமானாலும் போகலாம் என்றாலும், அங்கு குளிர்காலத்தில் தான்கிளைமேட் வேறலெவலில் இருக்கும். ஊட்டி , கொடைக்கானலில் கடும் குளிரும் உறைபனியும் நிலவும் இந்த காலக்கட்டத்தில் ஏற்காட்டில் மட்டும் வித்தியசமாகவும், கோடையில் கொடைக்கானலுக்கு போனது போலவும் இருக்கும். அந்த கிளைமேட், பனி இறங்கும் கால நிலை, ரம்மியான காடுகள் வானுயர்ந்த மரங்கள், காபி செடிகள், அரிய வகை தாவரங்கள் உங்களை மயக்கிவிடும்.
ஏற்காட்டில் உள்ள கிளியூர் நீர்வீழ்ச்சி, பூங்கா, ஏரி என பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு நீங்கள் போக போக உங்களை பரவசத்தில் ஆழ்த்தி விடும்.. ஏற்காடு அண்ணா பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோவில், தாவரவியல் பூங்கா போன்றவை சுற்றுலா பயணிகளை அங்கிருந்து வெளியேற விடாமல் அப்படியே பிடித்து வைக்கும். கிளியூர் நீர்வீழ்ச்சி முன் செல்பி எடுத்து அதன் அழகை ரசிக்க இப்போது இரண்டு கண்கள் போதாது.

படகு சவாரியை விரும்புவோருக்கு.. ஏற்காட்டில் படகு இல்லம் இருக்கிறது. மிதி படகு, மோட்டார் படகு, துடுப்பு படகில் சென்றவாறு சிலுசிலு காற்றுடன் ஏற்காட்டின் அழகை ரசிக்கலாம். ஏற்காடை ரசிக்க விரும்புவோர் படகு சவாரி போய் பாருங்கள். இதுதவிர ஏற்காட்டில் அழகு சாதன பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்களை வாங்க முடியும். ஏற்காட்டில் குழந்தைகளுக்கு பிடித்த ஏராளமான விஷயங்கள் உள்ளன. அங்குள்ள பூங்காவில் உள்ள சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் உள்ளிட்டவற்றை அந்த கிளைமேட்டில் விளையாட குழந்தைகள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள்.
ஏற்காட்டில் முழுமையாக என்ஜாய் செய்ய சரியான சமயம் இதுதான். pic.twitter.com/1i82SMWiZx
— 𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁 (@FilmFoodFunFact) January 3, 2024
ஏற்காட்டினை பொறுத்தவரை பொங்கல் பண்டிகையின் போது, ஊட்டி, கொடைக்கானல் அளவிற்கு கடுமையான போக்குவரத்து நெருக்கடி இருக்க வாய்ப்பு இல்லை. எளிதாக போய்விட முடியும். இயற்கை விரும்பிகளுக்கு பிடித்த ஊரான ஏற்காட்டில் அறை எடுத்து தங்கி கொண்டாட பொங்கல் தான்சிறப்பான டைம் ஆகும். தற்போதே ஏற்காட்டில் நிறைய மக்கள் விரும்பி போய் வருகிறார்கள்.
சேலத்தின் புறநகர் பகுதி போல் இருப்பதால் சேலம் சுற்றுவட்டார மக்களின் விருப்பமான இடமாக ஏற்காடு திகழ்கிறது. சென்னையில் இருந்து சேலத்திற்கு நிறைய ரயில்கள் உள்ளன. வந்தே பாரத்தில் போனால் 3.45 மணி நேரத்தில் சேலத்தினை அடைந்துவிடலாம். அங்கிருந்து வெறும் ஒரு மணி நேரத்தில் ஏற்காடு போய்விடலாம். ஏற்காட்டில் தங்கி சுற்றி பார்க்க அதிக கட்டணமும் இல்லை. இந்த வீடியோவை பாருங்கள், ஏன் ஏற்காடு என்ஜாய் பண்ண இப்போது சிறந்த டைம் என்பதை உணருவீர்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications