தாய்லாந்தை சுற்றி பார்க்கணுமா? பட்டாயாவில் பட்டையை கிளப்பணுமா? ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்!
டெல்லி: இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி குறைந்த கட்டணத்தில் தாய்லாந்திற்கு சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது.
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐஆர்சிடிசி மூலம் பல்வேறு ஊர்களுக்கு செல்ல ரயில்களை புக் செய்யலாம். இது இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமாகும்.
இது பயணிகளுக்கு உணவு வழங்கல், சுற்றுலா மேலாண்மை மற்றும் இணையதள வழி சேவைகளை வழங்கி வருகிறது. இது ஒரு பொதுத் துறை நிறுவனமாகும். உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பயணிகளுக்காக ஐஆர்சிடிசி சுற்றுலா இடங்களுக்கு செல்ல பல்வேறு திட்டங்களை வைத்துள்ளது.

இது ரயில் நீர் எனப்படும் தண்ணீர் விநியேகமும் செய்துவருகிறது. பட்ஜெட்டுக்கு ஏற்ப சுற்றுலாக்களையும் விலை அதிகமான சுற்றுலாக்களையும் ஐஆர்சிடிசி ஏற்பாடு செய்து வருகிறது. Buddhist circuit train, Maharaja's express, deccan odyssey, Royal Rajasthan on Wheels, Palace on Wheels, The Royal Orient உள்ளிட்டவை காஸ்ட்லி சுற்றுலா ரயில்களாகும்.
முதல் சுற்றுலா ரயில் 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. லக்னோவிலிருந்து டெல்லி வரை செல்லும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ஆகும். அது போல் இரண்டாவது ரயில் அகமதாபாத் - மத்திய மும்பை வரை செல்லும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகும். இந்த சுற்றுலா ரயில் சேவை மூலம் தாய்லாந்துக்கு மிகவும் குறைந்த விலையில் சுற்றுலா செல்லும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
தாய்லாந்தின் பாங்காங், பட்டாயா நகரங்கள், கடற்கரை உள்ளிட்டவை மிகவும் பிரபலம். இந்த நாட்டின் அழகை காண்பதற்காகவே ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருகிறார்கள். தாய்லாந்து செல்லும் உங்கள் கனவை ஐஆர்சிடிசி நிறைவேற்றும். இந்த திட்டத்தின் பெயர் ஸ்பார்க்லிங் தாய்லாந்து எக்ஸ் லக்னோ ஆகும்.
இந்த டூர் பேக்கேஜின் கீழ் 5 இரவுகள் மற்றும் 6 பகல்கள் பயணம் செய்ய வாய்ப்பை கொடுக்கிறது. இந்த டூர் பேக்கேஜ் இந்த ஆண்டு டிசம்பர் 8 தொடங்குகிறது. காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என பயணித்தி போது ஏற்பாடு செய்யப்படும். கட்டணம் எவ்வளவு என்றால் தனியாக பயணம் செய்தால் ரூ 69,800 வாடகை செலுத்த வேண்டும். இருவருடன் பயணம் செய்தால் ஒருவருக்கு ரூ 60,300 ஆகும். மூன்று பேருடன் பயணிக்க ஒரு நபருக்கான கட்டணம் ரூ 60,300 ஆகும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications