கொடைக்கானல் டூர் போறீங்களா.. குணா குகை, பைன் காடுகள் போனால் இது முக்கியம்! வனத்துறை முக்கிய முடிவு
நீலகிரி: பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை வருகின்றது என்பதால் கொடைக்கானலுக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கும் நிலையில் அங்கு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குணா குகை, மோயர் சதுக்கம், தூண் பாறை, பைன் மரக்காடுகள் பகுதிகளுக்கு செல்பவர்கள் இனி கூகுள் பே, போன் பேவில் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும் என்ற புதிய கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது.
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதுவதை பார்க்க முடியும். தமிழ்நாட்டின் மிகச்சிறந்த கோடைவாசஸ்தலங்களில் ஒன்றாக இருக்க கூடிய கொடைக்கானலில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்கள் உள்ளன.

கொடைக்கானல்
கோடை காலங்களில் மட்டும் இன்றி குளிர் காலத்திலும் அங்குள்ள ரம்மியமான இயற்கை சூழலை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. தற்போது இன்று விடுமுறை தினம் என்பதால் வார நாட்களை விட கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் சற்று அதிகமாக உள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் இன்றி கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாப்பயணிகளும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அதிகம் இங்கு வருவதை பார்க்க முடிகிறது.
கட்டணம் செலுத்த வேண்டும்
கொடைக்கானலுக்கு சுற்றுலாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மறக்காமல் பார்க்க கூடிய இடங்களாக குணா குகை, மோயர் சதுக்கம், தூண் பாறை, பைன் மரக்காடுகள் உள்ளிட்டவையும் உள்ளன. இந்த பகுதிகள் அனைத்தும் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளன. இதனால், அங்கு தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.
அதன்பிறகு செல்லும் டூரிஸ்ட்களுக்கு அனுமதி அளிப்பது இல்லை. அதேபோல, ஒவ்வொரு சுற்றுலா இடங்களுக்கும் தனித்தனியே கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் நுழைவு வாயிலில் எத்தனை பேர் என்ற விவரங்களை சொல்லி கட்டணம் செலுத்தி உள்ளே செல்லும் நிலை இருந்தது.
ஆன்லைன் வழியாக மட்டுமே கட்டணம்
கடந்த செப்டம்பர் மாதம் இதில் மாற்றம் கொண்டு வரப்பட்டு இருந்தது. ஒரே இடத்தில் டிக்கெட்டுகளை வாங்கும் வசதியை வனத்துறை கொண்டு வந்தது. இந்த நிலையில் சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வனத்துறை வெளியிட்டுள்ளது. அதாவது நாளை முதல் வனத்துறை கட்டுப்பாடில் உள்ள இடங்களுக்கு இனி நுழைவு கட்டணம் ஆன்லைன் வழியாக மட்டுமே செலுத்த முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை
கூகுள் பே, போன் பே போன்றவற்றின் வாயிலாக மட்டுமே செலுத்த முடியும் என்றும் ரொக்கமாக கட்டணம் செலுத்த இயலாது என்றும் வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ள்னார். பொங்கல் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பொங்கல் விடுமுறைக்க்கு முன்பாக இந்த அறிவிப்பை வனத்துறை வெளியிட்டுள்ளது.
அதே நேரத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் என்றால் சில நேரங்களில் பணம் செலுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது என்பதால், முந்தைய நடைமுறையும் தொடர்ந்து அமலில் இருந்தால் சுற்றுலாப்பயணிகள் பரிதவிக்க வேண்டிய நிலை இருக்காது என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications