ஜல்லிக்கட்டு சுற்றுலா.. சென்னை டூ அலங்காநல்லூர்.. மீனாட்சி, கள்ளழகர் தரிசனம்.. புக் செய்வது எப்படி
மதுரை: தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டியை பார்க்க சென்னையிலிருந்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஜனவரி 16 முதல் 18ஆம் தேதி வரை 3 நாள் ஜல்லிக்கட்டு சுற்றுப் பயணத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.
பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழ்நாடு தயாராகி வருகிறது. ஜனவரி 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரைக்கும் 5 நாட்கள் பண்டிகை களை கட்டும். வீர விளையாட்டு போட்டிகளும் நடைபெறும். மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.

ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்க்க விரும்புவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சென்னையிலிருந்து செல்லும் வகையில் 3 நாள் சுற்றுலாப் பயணத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. தமிழர்களின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பறைசாற்றும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பொங்கல் பண்டிகை முதல் தொடர்ந்து நடைபெறும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 17ஆம் தேதி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியை காண ஆர்வமாக உள்ள சென்னைவாசிகளுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஒரு வாய்ப்பை இந்த ஆண்டு வழங்கியிருக்கிறது.
பொங்கல் பண்டிகை நாளில் 3 நாள் சுற்றுலாப் பயணமாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை பார்க்க சென்னை - அலங்காநல்லூர் 3 நாள் ஜல்லிக்கட்டு சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியுடன் மதுரையின் முக்கியக் கோயில்களுக்கும் அவர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரிகள் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்துள்ளனர். தமிழர்களின் வீர விளையாட்டு நடக்கும் இடங்களில் முக்கியத்துவம் வாய்ந்த அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டியை பார்க்க சென்னையிலிருந்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஜனவரி 16 முதல் 18ஆம் தேதி வரை 3 நாள் ஜல்லிக்கட்டு சுற்றுப் பயணத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்தப் பயணத்துக்காக முன்பதிவு செய்த சுற்றுலாப் பயணிகளை 16ஆம் தேதி சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்தில் அழைத்து வந்து மதுரை தமிழ்நாடு ஹோட்டலில் தங்கவைக்கப்படுவர். 17ஆம் தேதி காலை 9 மணிக்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண சுற்றுலாப் பயணிகள், அழைத்துச் செல்லப்படுவர்.
போட்டியைப் பார்த்து விட்டு மீண்டும் ஹோட்டலுக்கு திரும்பும் சுற்றுலாப் பயணிகள், அன்று மாலை மீனாட்சியம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்கு அழைத்துச் செல்லப்படுவர். 18ஆம் தேதி காலை அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் மற்றும் சோலைமலை முருகன் கோயிலுக்கு அழைத்துச் செல்லப் பட்டு தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும்.
இந்தப் பயணத்துக்காக முன்பதிவு செய்தோருக்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வளாகத்தில் உள்ள சுற்றுலாப் பயணிகள் கேலரியில் முன்கூட்டியே டிக்கெட் பெற்று பாதுகாப்பாக அழைத்துச் சென்று 3 மணி நேரத்துக்கும் மேலாகப் போட்டியை கண்டு களிக்க ஏற்பாடு செய்யப்படும். இந்தப் பயணம் வெற்றிகரமாக நடைபெறும் பட்சத்தில், அடுத்த ஆண்டு தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் அலங்கா நல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்று சுற்றுலா வளர்ச்சிக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications