பீகாரில் நடப்பது தமிழ்நாட்டில் நடக்கவில்லை! ஸ்டாலினை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டாங்க.. அன்புமணி
மதுரை: மதுரையில் நடந்த என்.டிஏ மாநாட்டில் பேசிய அன்புமணி ராமதாஸ், "ஸ்டாலினை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.. தமிழகம் சமூக நீதியின் பிறப்பிடம், ஆனால் அதை 5 ஆண்டுகளாக திமுக புதைத்துவிட்டது.. சட்டசபைக்குள்ளேயே பொய் சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்" என்று விமர்சித்து பேசினார்.
மதுரை மண்டேலா நகரில் பொதுகூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

சமூக நீதியை புதைத்துவிட்டது
இந்த கூட்டம் வெற்றி பெறக்கூடாது என்று ஸ்டாலின் அரசு எத்தனை சூழ்ச்சி செய்தாலும் இது வெற்றி பெற்று இருக்கிறது. எவ்வளவு தடைகள் விதித்தாலும் இங்கு லட்சக்கணக்கான மக்கள் வந்து இருக்கிறார்கள். தமிழ்நாடு சமூக நீதியின் பிறப்பிடம் ஆனால் 5 ஆண்டு காலத்தில் திமுக அரசு, 100 அடி பள்ளத்தை தோண்டி அதில் முழுமையாக சமூக நீதியை புதைத்துவிட்டது.
அதற்கு தமிழக மக்கள் முதல்வரை நிச்சயமாக ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். கடந்த ஆறாண்டு காலத்தில் சமூக நீதியில் இந்திய அளவில் பெரிய சாதனைகளை மோடி செய்துள்ளார். இதுவரை சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக இந்திய அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என்று அறிவிப்பை வெளியிட்டு இந்தியா முழுவதும் இந்த ஆண்டு நடைபெற உள்ளது.
பிரதமர் மோடிக்கு நன்றி
கடைசியாக இந்தியாவில் சாதிவாரி கனக்கெடுப்பு நடத்தியது 1931ல் வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில்.. 95 ஆண்டுகள் பழமையான தரவுகளை வைத்துதான் இந்தியா முழுவதும் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதை மாற்றி அமைக்க நடவடிக்கையை எடுத்த மோடிக்கு நன்றி.
பீகாரில் முதல்முறையாக
இந்தியாவில் முதல் முறையாக ஒரு மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி தரவுகளை வெளியிட்டு அதற்கு ஏற்ப சமூக நீதி திட்டங்களை வழங்கி இட ஒதுக்கீட்டை உயர்த்தியது பாஜக ஆளும் பீகார். சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக பீகாரில் அது நடைபெற்றுள்ளது.
ஆனால் சமூக நீதியின் பிறப்பிடமான தமிழ்நட்டில் அது நடைபெற்று இருக்க வேண்டும். கடந்த 5 ஆண்டு காலத்தில் ஸ்டாலினை எத்தனை முறை நாங்கள் கேட்டு இருக்கிறோம் சாதி வாரிகணக்கெடுப்பு நடத்துங்கள் என்று.. இந்த கணக்கெடுப்பு ஏதோ சாதி வாரி கணக்கெடுப்பு இல்லை..
பீகாரில் 97 லட்சம் குடும்பங்கள்
உங்களுக்கு பெயர் பிடிக்கவில்லை என்றால் சமூக நீதி கணக்கெடுப்பு என வைத்துக்கொள்ளுங்கள். அந்த கணக்கெடுப்பை வைத்து தான் பீகாரில் 97 லட்சம் குடும்பங்கள் ஆறாயிரம் ரூபாய்க்கு குறைவான வருமானம் பெறுகிறார்கள். அந்த 96 லட்சம் குடும்பஙக்ளுக்கு அந்த அரசு 2 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்து குடும்ப வளர்ச்சிக்கு செய்து இருக்கிறது.
முதல்வர் பொய் பேசுகிறார்
இதுதான் உண்மயான சமூக நீதி. ஆனால் நான் கணக்கெடுக்க மாட்டேன் என்ற முதல்வரை பார்த்து இருக்கிறீர்களா? சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை என்று சட்டமன்றத்தில் முதல்வர் பொய் சொல்கிறார்.
இட ஒதுக்கிடு வழங்க பயன்படும் சாதி வாரி கணக்கெடுப்பு. இதை நடத்த முதல்வர் முன்வரவில்லை. காவிரி குண்டாறு திட்டம் 60 ஆண்டுகளாக நிறைவேறவில்லை " இவ்வாறு அவர் பேசினார்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications