மாலத்தீவு அதிபருக்கு பதிலடி தரும் சுற்றுலா நிறுவனங்கள்- இந்தியர்களே சுற்றுலா வாங்க என கெஞ்சல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மாலத்தீவுக்கு எதிராக இந்திய சுற்றுலா பயணிகள் திரும்பிவிட்டதால் சீனா தமது நாட்டு மக்களை அதிக எண்ணிக்கையில் சுற்றுலாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் முய்சு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் மாலத்தீவு சுற்றுலா நிறுவனங்களோ இந்தியர்களே அதிக எண்ணிக்கையில் வாங்க.. நடந்ததை மறந்துவிடுங்க என கதறலுடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்திய பெருங்கடலில் உள்ள மாலத்தீவு இந்தியாவின் பாதுகாப்பு விவகாரங்களில் மிக முக்கியமான நாடு. ஆனால் மாலத்தீவின் அரசியலில் உள்ளே நுழைந்து சீனா விளையாடி வருகிறது. மாலத்தீவு அரசியலையே இந்திய ஆதரவு, இந்திய எதிர்ப்பு என பிளவுபடுத்தி வைத்துள்ளது. மாலத்தீவு தேர்தலில் இந்திய எதிர்ப்பு முய்சு வென்றார். அப்போது முதலே இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து முய்சு மேற்கொண்டு வருகிறார்.

Maldives Tourism Body appeals send to Indian tourists

இந்நிலையில் பிரதமர் மோடி அண்மையில் லட்சத்தீவுகள் பயணம் மேற்கொண்டிருந்தார். மோடியின் இந்த பயணத்தை மாலத்தீவு அமைச்சர்கள் விமர்சித்தது பெரும் சர்ச்சையானது. இதனால் மாலத்தீவு- இந்தியா உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

அத்துடன் மாலத்தீவு சுற்றுலாவுக்கான முன்பதிவு செய்யக் கூடிய சில நிறுவனங்களும் தங்களது சேவையை நிறுத்துவதாக அதிரடியாக அறிவித்தன. மாலத்தீவுக்கு பதில் இனி லட்சத் தீவுகளுக்கு சுற்றுலா செல்வோம் என சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டன.

மோடி மீது விமர்சனம்: மாலத்தீவு அதிபர் முய்சு பதவிக்கு ஆபத்து?தகுதி நீக்கம் செய்ய வலுக்கும் கோரிக்கை!
அதேநேரத்தில் மாலத்தீவு அதிபர் முய்சு, இந்தியாவை வெறுப்பேற்றும் நடவடிக்கையை இடைவிடாமல் மேற்கொண்டிருக்கிறார். அதாவது இந்திய சுற்றுலா பயணிகள் மாலத்தீவுக்கு செல்ல மறுப்பதால் இப்போது சீனாவுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார் முய்சு. அதாவது, இந்தியர்கள் சுற்றுலா வர மறுக்கின்றனர். அதனால் சீனாதான் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகளை மாலத்தீவுக்கு அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளதாக ஊடாக்ங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இந்தியாவுடனான உறவை சீர்படுத்த விரும்பாமல் தொடர்ந்து இந்தியாவுடன் மோதல் போக்கை வளர்க்கும் வகையில் மாலத்தீவு அதிபர் முய்சு செயல்பட்டு வருவது ஆரோக்கியமான போக்கு அல்ல என்பது அரசியல் வல்லுநர்களின் எச்சரிக்கை.

மாலத்தீவு சீண்டுவது ஏன்? லட்சத்தீவில் 10 ஆண்டுகளில் மத்திய அரசு செய்தது என்ன? பட்டியல் போட்ட மோடி!
அதே நேரத்தில் மாலத்தீவின் சுற்றுலா நிறுவனங்களோ, இந்திய சுற்றுலா நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன. இந்திய பிரதமர் மோடிக்கு எதிரான விமர்சனங்களுக்காக வருந்துகிறோம்.. நடந்ததை மறந்துவிடுங்கள்.. எங்கள் நாட்டுக்கு வருகை தாருங்கள் என இடைவிடாமல் அழைப்பு விடுக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+