மாலத்தீவு ஓகே.. ஆனா மிதக்கும் "சொர்க்கம்" சீஷெல்ஸ் பற்றி தெரியுமா! இளசுகளுக்கு பக்காவான இடம் இதுதான்
சென்னை: இந்தியாவில் இருந்து சர்வதேச நாடுகளுக்குச் சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதில் இளசுகளுக்கு மிகவும் பிடித்த நாடாக மாலத்தீவு இருக்கிறது. அதேநேரம் மாலத்தீவுக்குப் போட்டியாக இப்போது ஆப்பிரிக்க நாடான சீஷெல்ஸ் உருவெடுத்துள்ளது. இந்த இரு நாடுகளில் எது பெஸ்ட்.. இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நமது நாட்டில் இளசுகள் விரும்பி சுற்றுலா செல்லும் நாடுகளில் முக்கியமானது மாலத்தீவு.. ஆனால், கடந்த சில மாதங்களாக இரு தரப்பிற்கும் இடையே மோதல் நிலவுவதால் மாலத்தீவு செல்வோர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.

இந்த 2024ஆம் ஆண்டில் இப்போது வரை மாலத்தீவுக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது. இந்தாண்டு மாலத்தீவுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மாலத்தீவு: மாலத்தீவுக்குச் சென்ற சர்வதேச சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையைப் பொறுத்தவரைச் சீனா முன்னணியில் உள்ளது.. தொடர்ந்து ரஷ்யா, இங்கிலாந்து, இத்தாலி, ஜெர்மனி நாடுகளைச் சேர்ந்தவர்கள் மாலத்தீவுக்கு அதிகம் சென்றுள்ளனர். மாலதீவுக்கும் இந்தியாவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே நல்லுறவு இல்லாத நிலையில், அங்குச் செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. மாலத்தீவுக்கு வரும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளில் இந்தியா 6ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
இளசுகளைக் கட்டி இழுக்கும் மாலத்தீவில் சுற்றிப் பார்க்க சோனேவா ஜானி, ஹுராவல்ஹி ஓஷன் வில்லா எனப் பல இடங்கள் உள்ளன. இந்தாண்டு இதுவரை அங்கே சுமார் 18 லட்சம் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் சென்று திரும்பியுள்ளனர். மாலத்தீவுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் சராசரியாக 7.8 நாட்கள் அங்குத் தங்குகிறார்களாம்.
சீஷெல்ஸ்: அதேபோல கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சீஷெல்ஸ்.. இதுவும் கிட்டதட்ட மாலத்தீவு போலவே இருக்கும் ஒரு தீவு நாடு தான். மாலத்தீவுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளில் கணிசமானோர் ஈர்ப்பதே இவர்கள் திட்டம். இதற்காக மாலத்தீவை போல சீஷெல்ஸும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா தேவையில்லை என அறிவித்துள்ளது.
இருப்பினும், இந்த நாடு இப்போது தான் சுற்றுலாவில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளதால் மாலத்தீவைக் காட்டிலும் குறைவான எண்ணிக்கையிலேயே சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகிறார்கள். அதேநேரம் கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் சீஷெல்ஸ் செல்லும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை கணிசமாகவே அதிகரித்துள்ளது.
ஒப்பீடு: மாலத்தீவுகள், சீஷெல்ஸ் என இரு நாடுகளின் பொருளாதாரமும் சுற்றுலாத் துறையைத் தான் பெரியளவில் நம்பி இருக்கிறது. மாலத்தீவு பொருளாதாரம் 30% மற்றும் சீஷெல்ஸ் பொருளாதாரம் 31% சுற்றுலாவைச் சார்ந்தே இருக்கிறது. கொரோனா ஆண்டுகளில் சுற்றுலா இல்லாமல் மாலத்தீவுகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், அதில் இருந்து பாடங்களை கற்றுக் கொண்ட மாலத்தீவு இப்போது தனது வரி வருமானத்தை அதிகரிக்க வேறு முயற்சிகளை எடுக்கத் தொடங்கியுள்ளன.
எது ஈஸி: இரு நாடுகளையும் நாம் ஒப்பிடும் போது மாலத்தீவு சென்று வருவது ஈஸி.. வலுவான சுற்றுலா உள்கட்டமைப்பும் அங்கே இருக்கிறது. ஆனால் மாலத்தீவுகளை ஓவராக வணிகயமாக்கிவிட்டதால் முன்பு இருந்து இயற்கை அழகுகள் இல்லாமல் போய்விட்டது.
அதேநேரம் சீஷெல்ஸ் அதன் அழகிய நிலப்பரப்புகள் மற்றும் இயற்கை அழகை இன்னும் பாதுகாத்து வருகிறது. இருப்பினும், இந்தியாவுக்கு நேரடியாக விமானம் இல்லை.. இன்னும் சுற்றுலா துறை முழுமையாக டெவலப் ஆகவில்லை உள்ளிட்டவை அதன் மைனஸ் பாயிண்டு ஆகும். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இரு நாடுகளுடன் ஒப்பிடும் போது மாலத்தீவு தான் டாப்பில் இருக்கிறது. அதேநேரம் இயற்கை அழகு தான் முக்கியம் என்பவர்கள் தாராளமாக சீஷெல்ஸ். அங்கு நமக்குக் கிடைக்கும் அனுபவமே தனி!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications