கடவுள் தேசத்தின் கனவுப்பாதையே அவுட்.. முற்றிலும் துண்டிக்கப்பட்டது மூணாறு.. என்ன நடக்கிறது?
தேனி: கேரளா மாநிலம் மூணாறு சாலை போக்குவரத்து இல்லாமல் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு பெய்த பலத்த மழையின் காரணமாக மூணாறு-தேனி, மூணாறு-அடிமாலி, மூணாறு-மறையூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் நெடுஞ்சாலைகளில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது
தமிழ்நாட்டின் எல்லைப்பகுதியில் உள்ள மிகப்பெரிய சுற்றுலா தலம் மூணாறு. தென்னிந்தியாவின் காஷ்மீர் என போற்றப்படும் மூணாறுக்கு வருவதற்கு தமிழ்நாட்டில் இருந்து பிரதான வழி என்றால் அது, தேனி போடி வழிச்சாலை தான். அண்மையில் தான் இந்த சாலை திறக்கப்பட்டது. இது தான் மூணாறு நகரை உலகத்துடன் இணைக்கும் பிரதான சாலையாகும். இதேபோல் கேரளாவின் கொச்சினில் இருந்து அடிமாலி வழியாக மூணாறு வர முடியும். இது கேரளாவில் இருந்து வருவோருக்கு பிரதான சாலையாகும்.

இவை இல்லாமல் மூணாறு வர திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் இருந்து மறையூர் வழியாக ஒரு வழி உள்ளது. இந்த வழியை கோவை, ஈரோடு, பழனி, திருப்பூர் மாவட்டத்தினர் பயன்படுத்துவார்கள்.
மூணாறு உள்ளிட்ட இடுக்கி மாவட்டத்தை பொறுத்தவரை தேயிலை தோட்டங்கள் நிறைந்த சறுக்கும் வகையிலான செங்குத்தான நிலப்பரப்பு அதிகம் உடைய பகுதிகள் ஆகும்.இதன் காரணமாக கனமழை பெய்தால் திடீரென காட்டாற்று வெள்ளம் உருவாகி சட்டென நிலச்சரிவு ஏற்படும். மூணாறில் 100 வருடங்களுக்கு முன்பு இதேபோன்ற ஜூலை மாதம் பெய்த மழையால், அந்த ஊருக்கு செல்லும் மொத்த வழித்தடமும் துண்டிக்கப்பட்டது. வரலாறு காணாத பாதிப்பை சந்தித்துள்ளது..இப்போது உள்ள சாலை புதிய சாலைகள் மட்டுமல்ல, புதிய வழித்தடமும் ஆகும். மொத்தமாக மூணாறு வழித்தடங்களையே இழந்துவிட்டது. படிப்படியாகவே புதிய வழிகள் மீண்டும் உருவாக்கப்பட்டன.
இந்நிலையில் மூணாறில் கடந்த ஒரு மாதமாகவே கனமழை அடிக்கடி பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. அடிக்கடி கனமழையும், நிலச்சரிவும் மூணாறில் ஏற்படுவது வாடிக்கையாகும் என்பதால், இப்போதும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாட்டை தொடர்ந்து மூணாறிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் சாலையில் நிலச்சரிவு காரணமாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் மூணாறில் தேனி, வரும் சாலைளிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மூணாறில கேப் ரோடு பகுதியில் பாறைகள் உருண்டு விழுந்துள்ளால், கொச்சி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கி உள்ளது. இதேபோல் கொச்சி சாலையிலும் நிலச்சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மூணாறு அருகே ராஜாக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியின் பாதுகாப்புச் சுவர் உடைந்துள்ளது. இதேபோல் ராஜாகுமாரி கிராமத்தைச் சேர்ந்த ஏழு குடும்பங்கள் கஜனபாரா மேல்நிலைப் பள்ளியில் தொடங்கப்பட்ட நிவாரண முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர் மண்சரிவு அபாயம் காரணமாக பல குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
தொடர் மழை காரணமாக மூணாறு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன. நேற்றிரவு பெய்த மழையின் காரணமாக மூணாறு-தேனி, மூணாறு-அடிமாலி, மூணாறு-மறையூர் ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மூணாறு செல்ல இப்போது சரியான நேரம் இல்லை. மூணாறு சுற்றுலா சென்றவர்கள் பாதுகாப்பாக இருப்பது அவசியம் ஆகும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications