கொடைக்கானல் வெள்ளகவி முதல், ஊட்டி அவலாஞ்சி வரை.. டிரக்கிங் செல்ல எந்த ஊருக்கு எவ்வளவு கட்டணம்
கோவை: தமிழ்நாடு மலையேற்றத் திட்டத்தில் இயற்கை ஆர்வலர்களை மகிழ்விக்கும் விதமாக நீலகிரி, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் 40 தேர்ந்தெடுக்கப்பட்ட மலையேற்ற பாதைகளை வனத்துறை திறந்துள்ளது. இதில் வெள்ளியங்கிரி மலை ஏற அரசுக்கு வெறும் ₹5353.95 கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பல இடங்களுக்கு நினைத்து பார்க்க முடியாதஅளவிற்கு கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ்நாடு வனத்துறை சார்பில் மலையேற்றத் திட்டத்தை துணை முதல்வர் நிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு வனத்துறை மற்றும் தமிழ்நாடு வன அனுபவக் கழகம் சார்பில் தமிழ்நாடு மலையேற்றத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. யற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவும், வனப்பகுதியை ஒட்டியுள்ள உள்ளூர் மக்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தவும், வனம் மற்றும் வன உயிரின பாதுகாப்புக்கு வலுசேர்க்கும் இந்த டிரக்கிங் திட்டம் செயல்படுத்தப்படும் எனறு அரசு சார்பபில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மலையேற்றத் திட்டம், திட்டத்திற்கு www.trektamilnadu.com என்றஇணையதளத்தில் முன்பதிவு செய்ய முடியும். தமிழ்நாடு மலையேற்றத் திட்டத்தில் இயற்கை ஆர்வலர்களை மகிழ்விக்கும் விதமாக தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், திருவள்ளூர் ஆகிய 14 மாவட்டங்களில் 40 தேர்ந்தெடுக்கப்பட்ட மலையேற்ற பாதைகளை வனத்துறை திறக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி முன்பதிவு செய்யும் மலையேறுவதில் ஆர்வம் கொண்ட இயற்கை ஆர்வலர்களுககு மலையேற்ற வழிகாட்டிகளாக காடுகள் குறித்த பாரம்பரிய அறிவை கொண்ட பழங்குடியின மக்கள் சுற்றிக்காட்டுவார்கள். வனங்களையொட்டியுள்ள கிராமங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இந்த திட்டத்தின் கீழ் மலையேற்றம் மேற்கொள்ளும் அனைத்து பங்கேற்பாளர்கள் மற்றும் வழிகாட்டிகளுக்கும் ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மலையேற்றத்துக்கான கட்டணத்துடன், காப்பீட்டுக்கான கட்டணமும் உள்ளடங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
www.trektamilnadu.com என்ற இணையதளத்தில் மலையேற்றத் திட்டம் தொடர்பான புகைப்படம், காணொளிக் காட்சிகள், 3டி அனிமேஷன், மலையேற்ற பாதைகள் தொடர்பான அத்தியாவசிய விவரங்கள், விதிமுறைகள் அறியலாம் என்றும் 100 சதவீதம் இணையவழி பணப்பரிவர்த்தனை மூலமே மலையேற்றத்துக்கான நுழைவுச்சீட்டினை பெற முடியும் என்றும் அரசு அறிவித்துள்ளது,

இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் டிரக்கிங் செல்ல முன்பதிவை மேற்கொள்ள முடியும். 18 வயதுக்கு உட்பட்டவர்கள் பெற்றோர், பாதுகாவலரின் ஒப்புதல் கடிதத்துடனும், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெற்றோர், பாதுகாவலரின் துணையோடு மலையேறலாம்.இந்த டிரக்கிங் திட்டம் மலைகளின் பயணிக்க விரும்புவோருக்கு சிறப்பான திட்டமாக பார்க்கப்படுகிறது. நேற்று பலரும் முன்பதிவு செய்வதற்காக இணயைதளத்தினை திறந்து கட்டணம் குறித்து பார்த்தனர். அதில் பல இடங்களுக்கு நினைத்து பார்க்கவே முடியாத அளவிற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பலர் குற்றம்சாட்டி உள்ளனர்.
வெள்ளியங்கிரி மலை ஏற ₹5,099 பிளஸ் ஜிஎஸ்டி கட்டணமும், நீலகிரியில் அவலாஞ்சி டூ கொலாரிபேட்ட செல்ல 4749 பிளஸ் ஜிஎஸ்டி கட்டணமும் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கொடைக்கானலில் வட்டக்கானல் முதல் வெள்ளகவி செல்ல 3799 பிளஸ் ஐந்து சதவீதம் ஜிஎஸ்டி கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது. கோவை டாப் ஸ்லிப்- பண்டாவரை செல்ல 4699 பிளஸ் ஜிஎஸ்டி கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்ச கட்டணம் என்று பார்த்தால், சேலம் மாவட்டம் நாகலூர் சன்னியாசிமலை செல்ல 599 கட்டணம் ஆகும்.
திருப்பூர் மாவட்டம் சின்னார் செக்போஸ்ட் செல்ல 799 ரூபாய் பிளஸ் ஜிஎஸ்டி கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் குற்றாலம் முதல் சென்பகாதேவி அருவிக்கு செல்ல 699 ரூபாய் கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது. ஏலகிரி ஸ்வாமிமலை செல்ல 799 கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது. மதுரை குட்லாம்பட்டி அருவி மற்றும் தடாகை இடையே செல்ல 2499 ரூபாய் கட்டணம் ஆகும். இதேபோல் தேனி மாவட்டம் குரங்கணி சாம்பலாறு செல்ல 1199 கட்டணம் ஆகும். இவை எல்லாம் தனிநபருக்கான கட்டணங்கள் ஆகும்.
இதனிடையே வெள்ளியங்கிரி மலை ஏற அரசுக்கு ₹5353.95 கட்டணம் செலுத்த வேண்டுமா என்று கேள்வி எழுப்பியுள்ள பாஜகவின் செல்வகுமார், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "வெள்ளியங்கிரி மலை ஏற அரசுக்கு வெறும் ₹5353.95 கட்டணம்.
தெற்கில் உதித்த கைலாயமாக, இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றாக கருதபடுகிறது வெள்ளியங்கிரி மலை, ஆண்டுதோறும் விரதமிருந்து பல லட்சம் மக்கள் பக்தி சிரத்தையுடன் மத யாத்திரையாக எந்த கட்டணமும் இல்லாமல் செல்வது வழக்கம். கடும் மழை, யானை நடமாட்டம் காரணமாக தை மாதம் முதல் வைகாசி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி.
ஆபத்தான மலை பாதையை மேம்படுத்த இதுவரை எந்த ஒரு முயற்சியும் எடுக்காத திராவிட மாடல் அரசு அதிரடியாக இப்பொது கொள்ளை கட்டணம் விதித்து வசூல் செய்ய திட்டமிட்டுள்ளது. இதுவரை இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கபட்டு வந்தனர், சபரிமலையை போலவே இங்கும் பெண்களுக்கு அனுமதியில்லை, அப்படிபட்ட பாதையை விலைக்கு விற்று லாபம் சம்பாதிக்கும் முயற்சியை தொடங்கியுள்ளது தமிழக அரசு." இவ்வாறு கூறியுள்ளார்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications