ஊட்டியில் தொடங்கிய மலர் கண்காட்சி.. எத்தனை நாட்கள் நடக்கும்! உதகை செல்ல இ பாஸ் வேண்டுமா?
உதகை: உதகையில் 126ஆவது மலர்க் கண்காட்சி இன்று (மே 10) தேதி தொடங்கி 11 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதனால் அங்குச் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலைகளின் அரசி என அழைக்கப்படும் ஊட்டியில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் இருக்கும். இந்த சீசனில் தான் உள்நாடு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் ஊட்டிக்குச் செல்வார்கள்.

அப்படி பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அங்கு ஆண்டுதோறும் கோடை விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.
மலர் கண்காட்சி: இந்தாண்டு லோக்சபா தேர்தல் காரணமாகத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் மலர் கண்காட்சி மற்றும் பழ கண்காட்சி மட்டும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி மற்றும் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சி ஆகியவை மட்டும் இந்தாண்டு நடைபெறுகிறது.
எப்படி இருந்த ஊட்டி, கொடைக்கானல்.. இப்ப இப்படி ஆகிடுச்சே.. இ பாஸ் நடைமுறையால் தலைகீழ் மாற்றம்
இன்று தொடங்கியது: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 126ஆவது மலர் கண்காட்சி இன்று மே 10ஆம் தேதி தொடங்கியது. வரும் மே 20ஆம் தேதி வரை 11 நாட்களுக்கு இந்த மலர் கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மலர் கண்காட்சியை முன்னிட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் பல்வேறு வகையான சுமார் 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளது.
பிளாக்ஸ், பெட்டூனியா, பேன்சி, டயான்தஸ், பிகோ னியா, டேலியா, பால்சம், ரெனன்குலஸ் வயோலா, அஜிரேட்டம், இன்கா மேரி கோல்டு, பிரஞ்ச் மேரி கோல்டு என பல்வேறு வகையான செடிகள் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சுமார் ஒரு லட்சம் ரோஜா மலர்கள் மூலம் பிரம்மாண்ட ஆக்டோபஸ், டிஸ்னி வோர்ல்டு என 10 வகையான அலங்காரங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர அலங்கார வளைவுகள், ரங்கோலி, வனவிலங்குகள் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்தாண்டு மலர் காண்காட்சி தொடங்கும் இன்று மற்றும் நிறைவடையும் 20ஆம் தேதி என இரண்டு நாட்களுக்கு மட்டும் லேசர் லைட் ஷோ நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இ பாஸ்: ஊட்டிக்கு செல்ல இ பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இ பாஸ் முறையால் இந்த முறை பயணிகள் வருகை சற்று குறைந்துள்ளது. அனைவருக்கும் இ பாஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் சிறு தயக்கத்தால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்துள்ளது. இந்தச் சூழலில் மலர் கண்காட்சி இன்று தொடங்கியுள்ளதால், வரும் நாட்களில் சுற்றலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications