ஊட்டிக்கு சுற்றுலா போறீங்களா.. ஹேப்பி நியூஸ் உங்களுக்குதான்! டால்பின் நோஸ் இன்று திறப்பு
குன்னூர்: நீலகிரி மாவட்டத்தின் பிரபல சுற்றுலா தளங்களின் ஒன்றான, டால்பின் நோஸ் இன்று திறக்கப்படுகிறது. எனவே சுற்றுலா பயணிகள் இதை கண்டுகளிக்கலாம். இது நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
குன்னூரில் இருந்து வெறும் 12 கி.மீ தொலைவில் இந்த இடம் அமைந்திருக்கிறது. இது ஒரு வியூ பாயிண்ட். இங்கிருந்து பார்த்தார் கேத்ரின் நீர்வீழ்ச்சியை முழுமையாக அனுபவிக்க முடியும்.

இந்த இடம் தற்போது வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மிகவும் உயரமான இடம் என்பதால், பாதுகாப்பு நடவடிக்கைகள், சீரமைப்பு மற்றும் மேம்பாடு பணிகள் மேற்கொள்ள ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. மேம்பாட்டு பணிகளுக்காக கடந்த செப். 12ம் தேதி மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது பணிகள் முடிவடைந்து மக்கள் பார்வைக்காக மீண்டும் திறக்கப்படுகிறது. இங்குள்ள பகுதியில் நடைபாதை பராமரிப்பு, கழிப்பிடம், தடுப்பு வேலிகள் தற்போது அமைக்கப்பட்டிருக்கின்றன.
இங்கிருந்து பார்க்கும்போது மலைகளுக்கு நடுவே, மிக உயரத்திலிருந்து கொட்டும் கேத்தரின் நீர் வீழ்ச்சியை பார்க்க முடியும். அதேபோல, கோத்தகிரி மலை தொடரையும், பசுமையான தேயிலை சமவெளி பகுதிகளையும் பார்த்து ரசிக்க முடியும். தெளிவான வானிலை இருக்கும் நாட்டிகளில் பவானி ஆறு ஓடுவதையும் பார்க்க முடியும்.
குன்னூரிலிருந்து டால்பின் நோஸ் செல்லும் பகுதியே மிகவும் ரம்மியமாக இருக்கும். இரு பகுதிகளிலும் அடர்ந்த தேயிலை தோட்டம் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இருக்கும். தற்போது ஊட்டியில் உறை பனி நிலவி வரும் நிலையில், ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு படையெடுத்துள்ளனர். அவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட டால்பின் நோஸ் காட்சி முனை புதிய அனுபவத்தை கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.
டால்பின் நோஸ் பகுதிக்கு பக்கத்தில் லேம் ராக் எனும் மற்றொரு சுற்றுலா தளமும் இருக்கிறது. இங்கிருந்து பார்த்தால் கோயம்புத்தூர் சமவெளி மற்றும் நீலகிரி மலைகள் பிரமாண்டமாக தெரியும். இங்குள்ள பாறைகள் ஆட்டுக்குட்டி வடிவத்தில் இருப்பதால், லேம்ப் ராக் என பெயர் வந்திருக்கிறது. அதேபோல டால்பின் நோஸ் செல்லும் வழியில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் இருக்கின்றன. இங்கு தேயிலை தூள் தயாரிப்பதை பார்க்க முடியும்.
அதேபோல இங்கிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில், சிம்ஸ் பார்க் அமைந்திருக்கிறது. இங்கு பல வகையான அரிய மரங்கள், செடிகள் மற்றும் மலர்களை பார்க்க முடியும். அதேபோல இங்கிருந்து 12 கி.மீ தொலைவில் லாவ்ஸ் நீர்வீழ்ச்சியும் அமைந்திருக்கிறது.
-
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு












Click it and Unblock the Notifications