தொடர் விடுமுறை.. சுற்றுலா தலங்களில் மக்கள் வெள்ளம்- கோவில்களில் பல மணிநேர காத்திருப்பு தரிசனம்!
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் வெள்ளம் கட்டுக்கடங்காமல் உள்ளது. பிரசித்தி பெற்ற கோவில்களிலும் மக்கள் அலைமோதுவதால் பல மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. சுற்றுலா தலங்கள், கோவில்கள் உள்ள பகுதிகளில் கடும் வாகன நெரிசலையும் பொதுமக்கள் எதிர்கொள்ள வேண்டியதானது.

தீபாவளிப் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. வியாழன் முதல் ஞாயிறு வரை தொடர் விடுமுறை என்பதால் குடும்பத்தினர், உறவினர்களுடன் 'பெட்டியை' கட்டி சுற்றுலா தலங்கள் நோக்கி பொதுமக்கள் படையெடுத்தனர்.

தென் மாவட்டங்களில் கொடைக்கானல், குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் நீர்வீழ்ச்சி பகுதிகளிலும் பெருங்கூட்டம் அலை மோதியது. உடுமலைப்பேட்டை அருகே திருமூர்த்தி அணை, அமணலிங்கேஸ்வரர் கோவில் பகுதிகளிலும் மக்கள் அலை அலையாக குவிந்தனர். திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருகே, அமணலிங்கேஸ்வர் கோவிலில் அருகே ஓடும் ஆற்று நீரில் பொதுமக்கள் உற்சாக குளியல் போட்டு மகிழ்ந்தனர். பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவிலில் பக்தர்கள் பல மணிநேரம் நீண்ட வரிசைகளில் காத்திருந்து வழிபாடு செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் போலவே சிறுமலை, பாச்சலூர், ஆடலூர், தாண்டிக்குடி பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தேனி- வத்தலகுண்டு சாலை அருகே குடகனாறு பாய்ந்தோடும் அனுமந்தராயன் கோட்டை- பித்தளைப்பட்டி தடுப்பணையில் குடும்பம் குடும்பமாக குளித்து மகிழ்ந்தனர். சிறுமலை பகுதிகளில் உள்ள அணைகளிலும் மக்கள் பெருந்திரளாக கூடி இருந்தனர். கொடைக்கானல் மலைக்கு செல்லும் வத்தலகுண்டு, பழனி சாலைகளில் கடுமையாக வாகன நெரிசலையும் சுற்றுலாப் பயணிகள் எதிர்கொண்டனர்.

-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications