கையில் பணம் இல்லை.. சுற்றுலா செல்ல உதவுங்க.. அண்ணா சாலையில் நின்ற வெளிநாட்டவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
சென்னை: "நாங்கள் பணமே இல்லாமல் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறோம்..தயவு செய்து எங்கள் பயணித்திற்கு ஆதரவளியுங்கள்" என்ற பாதகையுடன் சென்னை வாலாஜா சாலை சிக்னலில் வெளிநாட்டினர் நின்றிருந்தனர். அவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை சென்னைவாசிகள் ஆர்வமுடன் செய்தனர்.
விருந்தோம்பலில் தமிழ்நாடு மக்களை போல் உபரிப்பது வேறு பக்கம் இருக்கிறதா என்பது தெரியாது.. அந்த அளவிற்கு தமிழர்களின் விருந்தோம்பல் குணம் சிறப்பானது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலரும் வரும் மாநிலங்களில் தமிழ்நாடு முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், சென்னையில் இறங்கிய உடன், சென்னையை சுற்றி பார்க்கிறார்கள். அதன்பிறகு மகாபலிபுரம் செல்கிறார்கள்.. மகாபலிபுரத்தின் சிற்பக்கலையை கண்டு வியக்கும் வெளிநாட்டவர்கள் அப்படியே போகும் இடம் புதுச்சேரி...

அதன்பிறகு திருச்சி, மதுரை, ஊட்டி, கொடைக்கானல், ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா செல்கிறார்கள். வெளிநாட்டவர்கள் யார் வந்தாலும் அவர்களை வரவேற்று உபசரிப்பதில் தமிழர்களின் அன்பு அற்புதமானது. இந்நிலையில் சென்னைக்கு சுற்றுலா வந்த ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் நாங்கள் பணமே இல்லாமல் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறோம்..தயவு செய்து எங்கள் பயணித்திற்கு ஆதரவளிக்குமாறு பாதகையை சுமந்தபடி சென்னை அண்ணா சாலை, வாலாஜா சிக்கனலில் வெளிநாட்டினர் நின்றனர்.
சுற்றுலா செல்ல உதவுமாறு கோரிக்கை வைத்து பாதகையை ஏந்தி நின்ற வெளிநாட்டவர்கள் மூன்று பேரை சென்னைவாசிகள் ஆச்சர்யத்துடன் அருகில் சென்றனர். அவர்களிடம் சாப்பிட்டீங்களா.. என்ன சாப்டீங்க.. உங்களுக்கு என்ன உதவி வேண்டும்.. இந்த பணம் போதுமா என்று பாசத்துடன் கேட்டனர். உங்களுக்கு வேண்டிய உதவிகளை இந்தியர்களிடம் கேளுங்கள்.... நிச்சயம் செய்வார்கள் என்று சென்னைவாசி ஒருவர் கூறினார்.
இதுதொடர்பாக தனியார் செய்தி ஊடகம் ஒன்று வெளிநாட்டவர்களை வீடியோ எடுத்ததுடன், அவர்களிடம் பேட்டி எடுத்தும் ஒளிபரப்பி உள்ளது. அந்த பேட்டியில் அவர்கள், தாங்கள் சென்னை, புதுச்சேரி, திருச்சியை சுற்றி பார்த்துவிட்டு வந்துவிட்டதாவும் அடுத்து பெங்களூர் செல்ல இருப்பதாகவும் கூறினார்கள்.. இதனிடையே பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார், உடனடியாக அங்கு வந்தனர். உதவி கேட்ட வெளிநாட்டவர்களை, உடனடியாக தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தினர். அதேநேரம் சென்னைவாசிகள் பலர் உதவியதால் உதவியை பெற்றுக்கொண்ட வெளிநாட்டினர் மகிழ்ச்சியுடன் சென்றனர்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு












Click it and Unblock the Notifications