சேலம் ஏற்காடு சுற்றுலா தலத்தில்.. ஞாயிறுகளில் இப்படி ஒரு காட்சி.. ஏமாந்த மக்கள்
ஏற்காடு: சேலம் மாவட்டம் ஏற்காடு, ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. சேலம் மாநகரில் இருந்து கூப்பிடும் தூரத்தில் உள்ள ஏற்காடு சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடித்த இடம் ஆகும். ஆனால் நேற்று ஞாயிறு அன்று வழக்கமான சுற்றுலா பயணிகள் கூட்டம் இல்லை.. விடுமுறை நாளான நேற்று ஏற்காடு, சுற்றுலா பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. இதனால் ஆட்டோ, கார் டிரைவர்கள், ஏற்காடு மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
சேலம் மாவட்டம் ஏற்காடு இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பிரதேசம் ஆகும். ஏற்காடு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,515 மீட்டர் (4,970 அடி) உயரத்தில் அமைந்திருக்கிறது. இதன் காரணமாக ஏற்காட்டில் வெப்பநிலை பொதுவாக மிதமானதாகவும், இதமானதாகவும் இருக்கிறது. இது ஒரு மலைவாசஸ்தலம் என்பதால், சமவெளிப் பகுதிகளைப் போல ஏற்காட்டில் அதிக வெப்பம் இருக்காது. கோடைக்காலத்தில் வெப்பநிலை சுமார் 16°C முதல் 30°C வரை இருக்கும். ஆனால் சென்னையின் கோடை வெப்பத்துடன் ஒப்பிடும்போது மிகவும் இதமானதாக இருக்கும் . கோடைக்காலத்தில் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் சற்று இருந்தாலும், மாலை மற்றும் இரவு நேரங்கள் குளிர்ச்சியாக இருக்கும்.

ஆனால் ஆகஸ்ட், செப்டம்பர் போன்ற தற்போதைய கால நிலையில் வெயில் மிக குறைவாகவே இருக்கும். நல்ல குளிர் இருக்கும். இது மலைக்காலம் என்பதால் அடிக்கடி மழையும் பெய்யும். கிளைமேட்டும் அருமையாக இருக்கும். அதாவது கிளைமேட்டை பொறுத்தவரை 15 டிகிரி முதல் 25 டிகிரிக்குள் தான் இருக்கும். கோடைக்காலத்திற்கு அடுத்தபடியாக இந்த இரண்டாவது சீசனில் அதிகப்படியான மக்கள் வருவார்கள்,
தமிழகம் மட்டும் அல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம் ஆகும். குறிப்பாக தொடர் விடுமுறை நாள்கள் மற்றும் வாரஇறுதி நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும்.
ஆனால் நேற்று ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே இருந்தது. சுற்றுலா பயணிகளின் கூட்டம் இன்றி ஏற்காடு வெறிச்சோடி காணப்பட்டது. ஏற்காட்டில் உள்ள குகைகோவில், பக்கோடா பாயிண்ட், லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஸ் கார்டன், அண்ணா பூங்கா ஆகியவை சுற்றுலா பயணிகள் இன்ற வெறிச்சோடி காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் மிக குறைந்த அளவே வருகை தந்தால், குறைந்ததால் தங்கும் விடுதிகள், உணவகங்கள் காலியாகவே காணப்பட்டன.
சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்ததால் கார், ஆட்டோ டிரைவர்கள் சவாரி இல்லாமல் ஏமாற்றம் அடைந்தனர். ஏற்காட்டின் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கும் ஏற்காடு ஏரி சுற்றுலா பயணிகள் வருகையும் மிகவும் குறைவாவே இருந்தது. அவ்வப்போது இந்த சூழல் ஏற்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications