For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சேலம்:

By Staff
Google Oneindia Tamil News

Salem map
தமிழ்நாட்டின் வணிகமையம் என்று அழைக்கப்படுவது சேலம். பல்வேறு தொழில்களுக்கு உறுதுணையாய் விளங்கும் இந்நகரில் தான் ஒளவையார் பிறந்தார் என்ற நம்பிக்கை இப்பகுதி மக்களிடம் உள்ளது.

இந்நகரைச் சுற்றி முழுவதும் மலைகள் அமைந்துள்ளது. இந்த ஊரின் வடக்குப் பகுதியில் நாகர்மலையும், மேற்குப் பகுதியில் காஞ்சனமலையும் அமைந்துள்ளது.

சேலத்திற்கு மாம்பழ நகரம் என்ற பெயரும் உண்டு. இந்நகரில் லாரி கட்டுமானப் பொருட்கள் தயாரிப்பு, பாக்ஸைட் தயாரிப்பு, நெசவுத் தொழில் போன்ற தொழில்கள் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.

வணிகத்துறையில் சிறந்து விளங்கும் சேலம் தமிழ்நாட்டின் இறக்குமதி ஏற்றுமதி வியாபாரத்தில் உயிர்நாடியாக விளங்குகிறது. புகழ்பெற்ற சேலம் உருக்காலை தற்போது தனியாரிடம் ஒப்படைக்கவும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. சேலத்தில் சாயத்தொழிற்சாலை, உணவுப்பொருட்கள் தயாரிப்புத் தொழிற்சாலைகளும் உள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X