பார்க்க வேண்டிய இடங்கள்

தமிழ்நாடு மற்றும் கர்நாடக எல்லையிலுள்ள இந்த ஊரில்தான் காவிரி நதி தமிழகத்திற்குள் நுழைகிறது. ஒகனேக்கல்லில் உள்ள அருவிகள் சுற்றுலாப் பயணிகளை கவர்கின்றன. சேலத்திலிருந்து 114 கிலோமீட்டர் தொலைவிலும், பெங்களூரிலிருந்து 133 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ள இந்த ஒகனேக்கல் மிகச் சிறப்பு வாய்ந்த சுற்றுலா ஸ்தலமாகும்.
நாமக்கல்:
கிட்டத்தட்ட அரை லட்சம் மக்கள் தொகை உள்ள இந்த ஊர் இயற்கை எழில் கொஞ்சும் நகரம். இங்குள்ள ஆஞ்சனேயர் கோவில் உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றது. வெண்ணெய், சந்தனம், பூக்களால் அபிஷேகம் பண்ணிவிட்டு தங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் பக்தர்கள் ஏராளம்.
மேட்டூர்:
1934 ல் கட்டி முடிக்கப்பட்ட இந்த மேட்டூர் அணையின் நீளம் 1700 மீட்டராகும். இங்கிருந்து நீர்மின்சாரம் அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது. இதற்காக இந்த நகரைச் சுற்றி நீர் மின்சார நிலையங்கள் பல கட்டப்பட்டுள்ளன.
ஏற்காடு:
சேலம் மாவட்டத்தில் உள்ள எழில் மிகுந்த மலைப்பகுதிதான் ஏற்காடு. வருடம் முழுவதும் வீசும், தென்றல் காற்றும், குளிர்ச்சியும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுப்பது கண்கூடு. இங்குள்ள ஏரியில் படகுச் சவாரி செய்வதெற்கென்றே அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் அடிக்கடி வருவது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள அண்ணா பூங்கா மிகச்சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் இந்த ஊரில் ஆரஞ்சுப்பழத்தோட்டம், காபி தோட்டங்கள் அதிக அளவில் காணப்படுகிறது. வருடத்திற்கு ஒரு முறை கோடை விழா கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. இங்கு குறைந்த பட்ச அளவு 66 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையும், அதிகபட்ச அளவு 167டிகிரி வெப்பநிலையும் நிலவுகிறது. இங்கு பெரிபெரி, ஆரஞ்சு, தேக்கு, கொய்யா, சந்தனம், கோக், சில்வர் ஓக் போன்றவை அதிகமாக விளைகின்றன.
லேடீஸ் சீட்:
சேலத்திலுள்ள ஏற்காட்டில் இருக்கும் லேடீஸ் சீட் பகுதியில் நின்று கொண்டு கண்ணைப் பறிக்கும் விளக்கொளியில் மின்னும் சேலம் மாநகர் முழுவதையும் கண்டுகளிக்கலாம்.
பூங்காக்கள்:
சேலத்தை ஒட்டியுள்ள ஏற்காடு பகுதியில் அண்ணா பூங்கா, காந்தி பூங்கா, குழந்தைகள் பூங்கா ஆகியவை உள்ளன.
சேர்வராயன் கோவில்:
சேலத்தில் உள்ள சேர்வராயன்கோவில் மிகப் பிரபலமானது. இங்கு வருடந்தோறும் மே மாதத்தில் திருவிழா நடக்கிறது
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications