ஸ்ரீவில்லிபுத்தூர்காரங்க கொடுத்து வச்சவங்க.. எவ்வளவு அழகான அருவி.. டிரெக்கிங் போக சூப்பர் இடம்
விருதுநகர்: தொடர் விடுமுறை காரணமாக பலர் பிடித்த சுற்றுலா தளங்களுக்கு செல்கிறார்கள்.. அப்படி செல்ல ஒரு அருமையான இடத்தை பற்றி தான் இப்போது பார்க்கிறோம். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை அடிவாரத்தில் உள்ள செண்பகத்தோப்பு அருவி மற்றும் அய்யானார் நீர் வீழ்ச்சி ஆகிய இடங்கள் தான்.. நாம் பார்க்க போகும் இடம்.
வைகை அணையின் பிறப்பிடமான மேகமலையில் கிழக்கு பக்கம் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரிலும் மறுபக்கம் தேனி மாவட்டத்திலும் அமைந்துள்ளது. அதேநேரம் தேனி மாவட்டத்தில் தான் மேகமலை சுற்றுலா தளம் அமைந்துள்ளது. சுருளி அருவியும் மேகமலையில் கிழக்கு பக்கமாக வருசநாட்டிலும், மேற்கு பக்கமாக கம்பம் பகுதியிலும் விழுகிறது.. கிழக்கு பக்கமான வருசநாடு அடிவாரத்தில் உள்ள பகுதி சின்ன சுருளி என்று அழைக்கப்படுகிறது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துரை பொறுத்தவரை மலைப்பகுதியில் அழகிய நீரோடைகள், அருவிகள் என பார்த்து ரசிக்க பல்வேறு இடங்கள் உள்ளன. அவற்றில் இரண்டு செண்பகத்தோப்பு அருவியை பற்றித்தான் நாம் பார்க்க போகிறோம்.

செண்பகத்தோப்பு அருவி: செண்பக தோப்பு அருவியை பொறுத்தவரை விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மேற்கே 8 கிமீ தொலைவில் உள்ள வனப்பகுதியில் டிரெக்கிங் சென்று அடைய சிறந்த இடம். இங்கு செல்ல முறையான பேருந்து வசதி இல்லை. செண்பக தோப்பு அருவிக்கு இரு சக்கர வாகனம் மூலமும் போகலாம். மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு சரிவில் இருக்கிறது. இந்த மலைச் சரிவுகளில் பல அரிய வகை தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் காணப்படுகின்றன. 480 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள வனவிலங்கு சரணாலயம் 1989 ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள செண்பகத்தோப்பில் நிறுவப்பட்டிருக்கிறது.

இந்த சரணாலயத்தில் அழிந்து வரும், மரக்கறி வகை கிரிஸ்ல்ட் ராட்சத அணில் (ரதுஃபா மேக்ரோரா) ஆகியவை இருக்கின்றன. யானைகள், புலி, சிறுத்தை, நீலகிரி தார், புள்ளிமான், மான், சாம்பார், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, நீலகிரி லங்கூர், சிங்கவால் குரங்கு, , சோம்பல் கரடி உள்பட பல்வேறு விலங்குகள் உள்ளன. மேலும் 100க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இருக்கின்றன. செண்பகத்தோப்பு நீர் வீழ்ச்சி குளிக்க விரும்பும் சுற்றுலா பயணிகளுக்கு அற்புதமான இடம் ஆகும். ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள்.

அய்யனார் கோயில் (அய்யனார் நீர்வீழ்ச்சி): அய்யனார் அருவி மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவில் அமைந்துள்ளது, இதில் அருவி மற்றும் கோயில் உள்ளது. இது வனப்பகுதி மலை ஏறி செல்ல விரும்புவோருக்கு பிடித்தமான இடமாக உள்ளது. அய்யனார் நீர்வீழ்ச்சி பலருக்கும் பிடிக்கும்.

-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications