தேனி டூ கோட்டயம் சாலை இவ்வளவு அழகா.. இதைவிட இன்ப அதிர்ச்சி தரும் விஷயம் இருக்கு பாருங்க!
தேனி: தேனி டூ கோட்டயம் சாலையை வானில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. சுற்றிலும் பச்சை பட்டு உடுத்திய இயற்கை தேவதையை பார்க்க கண்கள் இரண்டும் போதாது என்பது போல் இருக்கிறது. அந்த பகுதியில் உள்ள இன்ப அதிர்ச்சி தரும் சுற்றுலா தலங்களை பற்றி இப்போது பார்ப்போம்.
"பாவலரு பாட்டு இது பண்ண புற பாட்டு ; கூடலூர் தாண்டி இது குமுளி போகும் பாட்டு; எங்க இசை பாட்டு; அது எட்டு திசை கூறும் எங்களது ஊரு ஒரு சங்க தமிழ் கூடம்; ஊற சுத்தும் ராசத்தியே தேனில் ஊற வெச்ச ரோசா பூவே" என்று அந்த பாடல் முழுவதும் தன் சொந்த ஊரான தேனி மாவட்டதை பற்றி இளையராஜா தெரிவித்திருப்பார். பாடகர் மனோ அந்த பாடலை பாடியிருப்பார்.. அன்றே இளையராஜா சொல்லிய இடம் தான் தேனி கோட்டயம் சாலையாகும்...

அடிக்கடி மழை மற்றும் தண்ணீர் வற்றாமல் ஓடும் ஊர் என்றால் அது தேனி மாவட்டம் தான்.. மூன்று போகமும் விளையும் பூமியான கம்பம் பள்ளத்தாக்கில் தான் பச்சை பட்டு உடுத்திய இயற்கை அன்னை அப்படியே இருக்கிறார். அந்த புகைப்படம் தான் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. சரியாக சொல்வது என்றால் உத்தமபாளையமும் சின்னமனூரும் சந்திக்கும் இடம் தான் புகைப்படத்தில் உள்ள இடம் தான் இது..

தேனியை பொறுத்தவரை கொட்டைக்குடி ஆற்றை கடந்து சென்றாலே இரண்டு பக்கமும் நெல் வயல் தொடங்கிவிடும். இந்த நெல் வயல்கள் சுமார் 60 கிலோ மீட்டருக்கு அதாவது குமுளி மலை அடிவாரம் வரை பரவி இருக்கும்.. நெல் மட்டுமல்ல, செங்கரும்பு, கரும்பு, வாழை, சின்ன வெங்காயம் மிக அதிகமாக இருக்கும். இதுதவிர கம்பம் பள்ளத்தாக்கை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் திராட்சையும் அதிகமாக இருக்கும்.. தேனியை தாண்டும் போது, காரில் செல்லும் யாராக இருந்தாலும் கண்ணாடியை இறக்கிவிட்டுத்தான் செல்வார்கள்.. அந்த அளவிற்கு இயற்கை அவர்களை வசீகரித்து விடும்.

தேனி டூ குமுளிக்கு கோட்டயம் சாலையில் போனால் இன்ப அதிர்ச்சி தரும் பல்வேறு விஷயங்கள் இருக்கிறது. இதை எல்லாம் மிஸ் பண்ணிவிட்டு சென்னைக்கோ, பெங்களூருக்கோ திரும்பி போனால் நிச்சயம் நீங்கள் நொந்து போவீர்கள்.. அருவிகள் எத்தனை இருக்கிறது என்பதை எண்ணவே முடியாது , அந்த அளவிற்கு அருவிகளை வைத்திருக்கிறது தேனி.. தேனி மாவட்டத்திற்குள் நுழையும் போதே, கொடைக்கானல் சாலை உங்களை அன்புடன் வரவேற்கும். அந்த இடத்தில் மஞ்சளாறு அணை இருக்கிறது.
அதை ரசித்துவிட்டு பெரியமுடியாதுகுளத்தை நோக்கி பயணித்தால், பெரியகுளத்திற்கு நுழையும் முன்பே கும்பக்கரை அருவி சில கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும். அங்கு குளித்து மகிழ்ந்து அப்படியே மலையை ஒட்டிய சாலையில் பயணித்தால் சோத்துப்பாறை அணை இருக்கும். இதுவும் அற்புதமான இடம். இடையில் வரும் வழியில் கல்லாறு என்ற இடமும் நீச்சல் குளம் போல் இருக்கும்.. அங்கு இருந்து கிளம்ப அவ்வளவு எளிதில் மனம் வராது..

அடுத்தாக பெரியகுளத்தை கடந்து தேனியை நோக்கி வந்தால், தேனி நகரத்தை ஒட்டி வீரப்ப அய்யனார் கோவில் இருக்கும். இந்த கோயில் மிக அற்புதமான ஆன்மீக தலம் மட்டுமல்ல.. இயற்கை பிரியர்களின் சொர்க்கம். அடுத்ததாக அங்கிருந்து கிளம்பினால், தேனியை தாண்டி வயல்கள் அதிகமாக இருக்கும். அங்கு பிரசத்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலும், எப்போதும் தண்ணீர் ஆர்பரித்து ஓடும் முல்லை பெரியாறு ஆற்றையும் ரசிக்கலாம். அதன்பிறகு கூப்பிடும் தூரத்தில் சின்னமனூர் வந்துவிடும். அங்கு வலதுபுறம் திரும்பினால் குச்சனூர் சனீஸ்வரபகாவன் கோயில் இருக்கிறது. அதேநேரம் சின்னமனூரில் இருந்து இடதுபுறம் திரும்பினால் மேகங்கள் ஓய்வெடுக்கும் மேகமலை இருக்கும். இதை பார்க்கவே தனியாக ஒரு நாள் வேண்டும்..

மேகமலை போய்விட்டு திரும்பினால், நாம் படத்தில் பார்த்த உத்தமபாளையம் நெல் வயல்கள் இருக்கும். அதை கடந்து சென்றால், உத்தமபாளையம் ராகு கேது கோவில் இருக்கும். அதை முடித்துவிட்டு கம்பத்தை நோக்கி சென்றால், அங்கு திராட்சை தோட்டங்கள் அதிகமாக இருக்கும். அப்படியே ரசித்தபடி சென்றால், கம்பத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் புகழ் பெற்ற சுருளி அருவி இருக்கும்.
அங்கு குளித்துவிட்டு அப்படியே கூடலூர் நோக்கி பயணித்தால், கூடலூர் லோயர் கேம்பில் 18ம் கால்வாய் தொட்டிப்பாலம் இருக்கும்.. இந்த இடம் எல்லாம் திரும்பி ஊருக்கு போகவே கூடாது என்று உங்களை கண்டிப்பாக சொல்ல வைத்துவிடும். அதன்பிறகு குமுளி போய் தேக்கடியை ரசிக்கலாம். தேக்கடியை தாண்டினால் வாகமன் வரும். அங்கு போய்விட்டு அப்படியே கோட்டயத்திற்கு கீழே இறங்கிவிடலாம். இதை எல்லாம் பார்க்க குறைந்தது 3 நாட்களாவது வேண்டும். தேனி கோட்டயம் சாலையில் போய் பாருங்கள் .. சொன்னது உண்மையா இல்லையா என்பது புரியும்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications