உறைய வைக்கும் பனி..கொடைக்கானல் போக இதுதான் கரெக்ட் டைம்! 100 வகை ஹோம்மேட் சாக்லேட்கள்! எச்சில் ஊறுதே
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். குறிப்பாக பண்டிகைக் கால விடுமுறை காரணமாக பழங்கள், இனிப்புகள், ஹோம் மேட் சாக்லேட் விற்பனை அமோகமாக உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தருகின்றனர்.

இயற்கை சூழ்ந்த பகுதிகளை கண்டு ரசிப்பதோடு அங்கேயே தங்கி இருந்து விடுமுறையை கழித்து வருகின்றனர். கொடைக்கானல் மலைப்பகுதி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி இருப்பதால் இங்கு ஏராளமான வனவிலங்குகள் வசிக்கின்றன.
கொடைக்கானல் சீசன்:
இந்தாண்டு டிசம்பர் மாததொடக்கம் முதல் தொடர்ந்து மழை பெய்ததின் காரணமாக கொடைக்கானலில் உறைப்பனி சீசன் சற்று தாமதமாக தொடங்கி உள்ளது. குறிப்பாக இன்று காலை நட்சத்திர ஏரியில் நீர் ஆவியாகி மேலே பறந்து செல்லும் ரம்யமான காட்சி காண்போரை கவர்ந்து இழுத்தது. அதேபோல கீழ் பூமி, ஜிம்கானா உள்ளிட்ட பகுதிகளில் உறைப்பனியானது தற்போது தொடங்கியுள்ளது.

கடும் பனிப் பொழிவு:
மேலும் இங்குள்ள பசுமையான புல்வெளிகளில் ஆங்காங்கே வெள்ளை கம்பளம் விரித்தது போல கொட்டி கிடக்கும் உறை பனி கண்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. மேலும், தற்போது புத்தாண்டை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஆயிரக்கணக்கான பயணிகள் ஒரே நேரத்தில் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தற்போது கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சியிலிருந்து நட்சத்திர ஏரி வரை சுமார் 7 கிலோமீட்டர் அளவில் அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் தனியார் விடுதியில் மற்றும் உணவு விடுதிகளை முறையான வாகனங்கள் நிறுத்துமிடம் இல்லாத காரணத்தால் சுற்றுலா பயணிகள் சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்துவதாலும் வாகன நெரிசல் ஏற்படுகிறது.

சீசன் பழங்கள்:
அவ்வாறு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் இங்கு சீசன் காலங்களில் விளைவிக்கக் கூடிய பிளம்ஸ் ,பேரி பிச்சீஸ், பட்டர் ஃப்ரூட் உள்ளிட்ட பழங்களை வாங்கி செல்கின்றன. இதில் குறிப்பாக வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய ஹோம் மேட் சாக்லேட் வகைகள் கொடைக்கானலில் இருக்கக்கூடிய அனைத்து சுற்றுலா பகுதிகளிலும் கிடைக்கிறது. இதில் முந்திரி, பாதாம், பிஸ்தா, தேன் உள்ளிட்ட பல்வேறு சுவைகளில் பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்படுகிறது.

இனிப்புகள் விற்பனை ஜோர்:
அதிலும் குறிப்பாக குழந்தைகளை கவரக்கூடிய லாலிபாப், பில்லிங் சாக்குலேட்டு, ஜெம்ஸ் மிட்டாய் மற்றும்
ஜெல்லி மிட்டாய் வகைகளில் தயாரிக்கப்படுகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலுக்கு பல்வேறு பகுதியில் இருந்து சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் கொடைக்கானலில் இருந்து தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பரிசு அளிப்பதாக இந்த ஹோம் மேட் சாக்லேட்டைகளை வாங்கி செல்வது வழக்கமான ஒன்றாக உள்ளது.

ஹோம் மேட் சாக்லேட்டுகள்:
ஆரம்பத்தில் பத்து முதல் 15 வகையான ஹோம் மேட் சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 100 முதல் 150 வகைகளான ஹோம் மேட் சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வண்ண வண்ண இனிப்புகள், வீட்டு தயாரிப்பு மிட்டாய்களும் தற்போது விற்பனைக்கு வந்திருக்கும் நிலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவற்றை ஆர்வத்தோடு வாங்கிச் செல்கின்றனர்.

வியாபாரிகள் மகிழ்ச்சி:
இதில் சாக்லேட் வகைகளுக்கு ஏற்பாடு விலை நிர்ணயிக்கப்படுகிறது , மேலும் கால் கிலோ சாக்லேட் ரூபாய் 200 முதல் 350 வரை விற்கப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது ஹோம் மேட் சாக்லேட் வியாபாரம் தற்பொழுது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதனால் சாக்லேட் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications