அசிங்க அசிங்கமா பேசுறாங்க..என் கட்சியில எனக்கே பாதுகாப்பு இல்லை! பரபரப்பை பற்ற வைத்த பாஜக கவுன்சிலர்
தென்காசி: பாரதிய ஜனதா கட்சியில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்றும் தலைமையில் தெரிவித்தாலும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை எனக் கூறி கண்ணீர் மல்க நகர்மன்ற கூட்டத்தில் பேசிய பாஜக பெண் கவுன்சிலர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
33 வார்டு பகுதிகளை கொண்ட தென்காசி நகராட்சியில் இன்று நகரமன்ற தலைவர் சாதிர் தலைமையில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் கூட்டத்தில் நகரத்தின் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் குடிநீர் தொடர்பான விவாதங்கள் நடைபெற்றது.
அப்போது பேசிய பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 23வது வார்டு நகரமன்ற உறுப்பினர் சுனிதா, " மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரமன்ற உறுப்பினராக கடந்த நான்கு ஆண்டுகளாக நகர்மன்றத்தில் வார்டு பகுதிக்கு தேவையான பணிகள் தொடர்பாக விவாதித்துள்ளேன். ஆனால் எனது கட்சியில் என்னை ஒதுக்கி வைத்து விட்டனர். அதையும் பொறுமையாக ஏற்றுக் கொண்டு எனது பணிகளை செய்து வந்தேன்.

இந்த சூழலில் நேற்று என்னைப் பற்றி சமூக வலைதளங்களில் நகர பாஜகவினர் அவதூறு பரப்பி வருகின்றனர். .இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் நகர தலைவர் மற்றும் மாவட்டத் தலைவருக்கு தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்புப் இல்லை என நகர் மன்ற கூட்டத்தில் பேசினார்.
அப்போது பேசிய நகர மன்ற தலைவர் சாதிர் இந்த நகர்மன்றத்தில் அனைத்து பெண்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும். எந்த ஒரு நகர் மன்ற உறுப்பினரும் நேரடியாக நகர்மன்ற உறுப்பினரிடம் கேள்வி கேட்கவோ கூடாது. எதுவாக இருந்தாலும் பாராளுமன்றம், சட்டமன்றம், மற்றும் நகர் மன்றம் என மரபு உண்டு. அதனைப் பின்பற்றி தலைவரிடம் தங்களது கோரிக்கைகளை வைத்து. அதன் மூலம் விவாதம் செய்து பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் வாய்மொழி உத்தரவு பிறப்பித்தார். இதற்கு அனைத்து பெண் கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
பாரதிய ஜனதா கட்சியின் நகர தலைவராகவும் வார்டு உறுப்பினராகவும் சங்கர சுப்பிரமணியன் உள்ளார். இந்த நிலையில் நகர மன்ற கூட்டத்தின் போது பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் பாரதிய ஜனதா கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications