திருநெல்வேலி சர்ச்சில் ஒலித்த அரோகரா சத்தம்.. காவி உடையோடு முருக பக்தர்கள்! திறக்கப்பட்ட தேவாலய கதவு

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: மனித வாழ்க்கையில் நெருக்கடி நேரங்களில் மதம், இன வேறுபாடுகள் எல்லாம் மறைந்து, மனிதநேயம் தான் முன்னிலையாக நிற்கும் பல சம்பவங்களை நாம் கண்டுள்ளோம்.. சுனாமி, கொரோனா, புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர்களின்போது மக்கள் ஒன்றாக சேர்ந்து உதவுவது போல, தனிநபர் வாழ்க்கையிலும் இதுபோன்ற ஒற்றுமை தருணங்கள் நிகழ்கின்றன. அத்தகைய மனிதநேயத்தின் பிரதிபலிப்பாக, திருநெல்வேலியிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. இந்நிகழ்வு சமூக ஒற்றுமையின் சிறந்த எடுத்துக்காட்டாகவும் பார்க்கப்படுகிறது.தைப்பூசத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளை நோக்கி பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது..

திருச்செந்தூர் கோயில் தைப்பூசம்: அந்தவகையில் இந்த வருடமும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை அதாவது பிப்ரவரி 1ம் தேதி தைப்பூச திருவிழா விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து, திருச்செந்தூரை நோக்கி பாதயாத்திரையாகப் பயணித்து வருகின்றனர்.அந்தவகையில், நெல்லை மாவட்டத்திலிருந்தும் பல பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர்.. இவர்கள் செல்லும் வழிகளில் ஆங்காங்கே இளைப்பாறியும், வெயில் அதிகம் என்பதால் சற்று ஓய்வெடுத்து விட்டும் பாதயாத்திரையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்..

திருநெல்வேலி சர்ச்: இப்படிப்பட்ட சூழலில் சமாதானபுரம் பகுதியில் அமைந்துள்ள புனித மிக்கெல் அதிதூதர் தேவாலயம் ஒரு நெகிழ்ச்சி காரியத்தை செய்துள்ளது.. நீண்ட தூரம் நடந்து வந்த களைப்பில், நிழல் தேடித் தவித்த முருக பக்தர்களுக்காக தன்னுடைய தேவாலய கதவுகளை திறந்து வைத்துள்ளது..சிலுவை தாங்கிய அந்த சர்ச்சுக்குள், காவி உடையும் கழுத்தில் மாலையுமாக முருக பக்தர்கள் எந்தவிதமான தயக்கமுமின்றி உள்ளே வந்தார்கள்.. தேவாலயத்தின் அந்த அமைதியான சூழலில் தங்களது உடைமைகள் அனைத்தையும் உள்ளே வைத்தனர்..

நெல்லை சர்ச்சில் காவி உடையில்: பிறகு தேவாயலத்தில் பெட்ஷீட்களை விரித்து அனைவரும் சிறிது நேரம் தூங்கினார்கள்.. மாதா கோவில் வளாகத்தில் காவி உடையில் இவர்கள் தங்கிய காட்சியானது, மதம் கடந்து நிற்கும் மனிதத்தின் உச்சமாகும்.மாற்று மத பக்தர்கள் ஓய்வெடுக்க அனுமதித்த தேவாலயத்தின் இந்த செயல், நெல்லை மக்களின் கண்களை கசிய செய்துள்ளது. சாதி, மதம் எனும் வேலி கற்களைத் தகர்த்து எறிந்து, சமூக நல்லிணக்கத்திற்கு ஒரு உன்னதமான முன்னுதாரணத்தை இந்தத் தேவாலயம் ஏற்படுத்தியுள்ளது.பிறகு முருக பக்தர்கள் அனைவரும் களைப்பு நீங்கியதும், மீண்டும் புத்துணர்வோடு அரோகரா முழக்கமிட்டு அங்கிருந்து விடைபெற்றனர்..

"தஞ்சாவூர் ஜாகீர் நினைவிருக்கா: இப்படித்தான் கடந்த வாரம் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்தது.. நாவலர் நகரில் மளிகை கடை நடத்துபவர் ஜாகிர் உசேன்.. இவரது மகனுக்கு ஏற்பட்ட கடுமையான சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது.. இறுதியில் அப்பகுதி மக்கள் கூறிய ஆலோசனைப்படி வீரமாகாளியம்மன் கோவிலில் ஜாகிர் உசேன் பிரார்த்தனை செய்திருந்தார்.பிறகு மகன் பூரண நலம் பெற்றார்.. இதையடுத்து, ஜாகிர் உசேன் தம்பதியினர், வீரமாகாளியம்மன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தி, பொங்கல் வைத்து படையல் செய்து, 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கறி விருந்து வழங்கினார்கள்.. இந்த நிகழ்வு மதத்தை தாண்டிய மனிதநேயமும் ஒற்றுமையும் வெளிப்படுத்தும் சம்பவமாக அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது..இந்நிலையில் திருநெல்வேலி சர்ச்சிலும் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது,அன்பே கடவுள், மனிதமே மகத்தானது" என்பதைத்தான் மீண்டும் உணர்த்தி உள்ளது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+