Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெல்லையில் ஆணவக்கொலையா? திருமணத்திற்கு 4 நாளே இருக்கும்போது கல்லூரி மாணவி மரணம்.. பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை புதுப்பேட்டை அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். ஆனால் மாணவியின் கழுத்தில் காயம் இருந்ததால் அவர் ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளதாக காதலன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவி தனியார் நிறுவன ஊழியரை காதலித்து வந்ததாகவும், இந்த காதலுக்கு இளைஞரின் பெற்றோர் ஆதரவு தெரிவித்து இருவரது திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் தான் மாணவி பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Honour Killing

இயற்பியல் முதலாம் ஆண்டு மாணவி

நெல்லை மாவட்டம் புதுப்பேட்டை செக்கடி பஸ் நிறுத்தம் பகுதியில் வசித்து வருபவர் பட்சிராஜன். நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேவதி. தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு இரண்டு பெண்கள்.

மூத்த மகள் திருமணம் ஆகி காரைக்குடியில் தபால் அலுவலகத்தில் பணி செய்து வருகிறார். இவர்களது 2 வது மகள் சிவமதி (18), நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி இயற்பியல் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார். சிவமதிக்கு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் பேட்டை கடசர் தெருவை சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

6 ஆம் தேதி திருமணம்

நாளடைவில் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கினர். இவர்களது காதல் விவகாரம் மாணவியின் வீட்டுக்கு தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பெண்ணின் காதலுக்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளனர். ஆனால் ஆனந்த கிருஷ்ணனின் பெற்றோர் இந்த காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து ஆனந்த கிருஷ்ணன் - சிவமதி திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அழைப்பிதழ் கொடுப்பதற்கும் ஆரம்பித்துவிட்டனர். 6 ஆம் தேதி இவர்களது திருமணம் நடக்க இருந்தது. இதனால் மாணவியின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தூக்குப்போட்டு உயிரிழந்த கல்லூரி மாணவி

இந்த நிலையில் நேற்று மாலை சிவமதி தூக்குப்போட்டதாக கூறி அவரது பெற்றோர் பழைய பேட்டை அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிவமதி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். இது குறித்து போலீசாருக்கு தெரியவந்ததும் சிவமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோல் சிவமதி கழுத்தில் காயம் இருந்தது தெரியவந்தது. இதனால் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்த போலீசார் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், 'காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சிவமதி வீட்டில் இருந்த மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப் போட்டு கொண்டார்' என்று கூறினர்.

ஆணவக் கொலையா? போலீசார் விசாரணை

இதற்கிடையே சிவமதி உயிரிழந்த சம்பவம் கேட்டு அதிர்ச்சியடைந்த காதலன் மற்றும் அவரது குடும்பத்தினர் சிவமதி ஆணவக் கொலை செய்யப்பட்டதாக கூறி காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். சிவமதி பெற்றோர் மீதும் புகார் அளித்தனர். இதனால் சிவமதி தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது ஆணவ கொலையா? என்பதை விசாரிக்க நெல்லை டவுன் உதவி போலீஸ் கமிஷனர் விஜய குமார் நேரடி விசாரணை நடத்த கமிஷனர் மணி வண்ணன் உத்தரவிட்டார்.

போலீசார் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், மாணவியின் இறப்பு தற்கொலை என்றே தெரிய வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உறுதியான தகவலை கூற முடியும்" என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+