ஒட்டுமொத்த ஊரே பார்க்க..பஸ் ஸ்டாண்டில் கணவன் செய்த செயல்! ஒரே நிமிடத்தில் எல்லாமே முடிஞ்சது! ஷாக் !
நெல்லை: நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கணவன் அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளியை உடனடியாகக் கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் பாலாமடை பால்பண்ணை தெருவைச் சேர்ந்தவர் சுதாகர் (26). இவருடைய மனைவி பேச்சியம்மாள் (25). கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை இருவரும் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்திற்கு வந்துள்ளனர். அங்கு வைத்து இருவரும் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே திடீரென மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சுதாகர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பேச்சியம்மாளின் கழுத்தில் சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் இறந்தார். மனைவி இறந்ததை உறுதி செய்த சுதாகர், அங்கிருந்து தப்பி ஓடினார்.
உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் ஏராளமானோர் வந்து செல்லும் பஸ் நிலையத்தில், மக்கள் கூட்டத்துக்கு இடையே நடந்த இந்த கொடூர சம்பவம் அங்கிருந்த பொதுமக்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. இது குறித்து தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு போலீஸ் உதவி கமிஷனர் சரவணன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த பேச்சியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கிடையே தப்பி ஓடிய சுதாகர் நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். குடும்பப் பிரச்சனை காரணமாக அவர் கொலையைச் செய்துள்ளார் என முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது.
எனினும் அவர் வேறு எதற்காக கொலை செய்தார், இதன் உண்மையான பின்னணி என்ன என்பது குறித்து போலீஸ் நிலையத்தில் சரணடைந்த சுதாகரிடம் போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications