மாணவர்களின் அம்மாக்களை மடக்கி உறவு.. நெல்லையில் சிக்கிய மன்மத கராத்தே மாஸ்டர்!
திருநெல்வேலி: நெல்லையில், மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி அளிப்பதாகக் கூறி, பயிற்சிக்கு வரும் அந்த மாணவிகளின் தாயார்களை ஆசை காட்டி மோசம் செய்ததாக கராத்தே மாஸ்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை 8 பெண்களை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் நிலையில், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
நெல்லை மாவட்டம் சுத்தமல்லியை அடுத்த நரசிங்கநல்லூர் பொன்விழா நகரைச் சேர்ந்தவர் அப்துல் வகாப். கராத்தேவில் டிப்ளமோ பட்டம் பெற்ற இவர், நெல்லை டவுன் கோடீஸ்வரன் நகர் பகுதியில் கராத்தே வகுப்பும், பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் துப்பாக்கி சுடும் பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வந்துள்ளார்.
இவரின் பயிற்சி மையங்களில் நெல்லை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். வெளியுலகிற்கு ஒரு கராத்தே மாஸ்டராகவும், பயிற்சி அளிக்கும் நபராகவும் தோற்றமளித்த இவர் பலரிடம் பாலியல் சேட்டை செய்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

நெல்லை
அப்துல் வகாப் தனது பயிற்சி மையத்திற்கு வரும் மாணவிகளின் தாய்களைக் குறிவைத்து தனது சில்மிஷ வேலைகளை அரங்கேற்றியுள்ளார். முதலில் அவர்களை நோட்டமிட்டு, அதில் சில பெண்களை தனக்கானவர்களாகத் தேர்ந்தெடுத்துள்ளார். பின்னர், சாமர்த்தியமாக அவர்களிடம் பேச்சுக் கொடுத்து, அவர்களின் செல்போன் எண்களைப் பெற்றுள்ளார். தொடர்ச்சியாக, இனிப்பான ஆசை வார்த்தைகளைக் கூறி, அந்தப் பெண்களை மயக்கி, தனது வலையில் வீழ்த்தி பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
கராத்தே மாஸ்டர்
தொடர்ந்து அதனை வீடியோவாக எடுத்து அதனைக் காட்டி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததோடு, அவர்களிடம் பணம், நகை ஆகியவற்றை பறித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், சுத்தமல்லி பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் வேலை செய்யும் ஊழியரின் 13 வயது மகள், அப்துல் வகாப்பின் கராத்தே பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளார். அந்தச் சிறுமியின் தாய், தினமும் காலையில் சிறுமியை பயிற்சி மையத்திற்கு அழைத்துச் சென்று வந்துள்ளார்.
பாலியல் வன்முறை
அப்போது அப்துல் வகாப், அந்தப் பெண்ணின் செல்போன் எண்ணைப் பெற்று, பழகி வந்துள்ளார். சுமார் 4 ஆண்டுகளாக இவர்களின் பழக்கம் நீடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் அந்தப் பெண்ணின் கணவரான டீக்கடை ஊழியருக்குத் தெரியவரவே, அவர் தனது மனைவியைக் கண்டித்துள்ளார். இதனால், சமீப காலமாக அந்தப் பெண் அப்துல் வகாபுடன் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சம்பவத்தன்று அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்ற அப்துல் வகாப், தன்னை ஏன் போன் செய்தபோது எடுக்கவில்லை என்று கூறி, அந்தப் பெண்ணைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
குற்ற வழக்கு
மேலும், தான் அழைக்கும்போது தன்னுடன் வந்து தனிமையில் இருக்க வேண்டும் என்றும் அச்சுறுத்தும் தொனியில் கட்டளையிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் சத்தம் போட்டுக் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் அங்கு கூடினர். பொதுமக்கள் வருவதைக் கண்ட அப்துல் வகாப் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். உடனடியாக அந்தப் பெண் சுத்தமல்லி காவல் நிலையத்தில் அப்துல் வகாப் மீது புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வெளியான தகவல்கள் போலீசாரையே திடுக்கிட வைத்தன.
காவல்துறை
அப்துல் வகாபின் "மன்மத லீலை" வலையில் சுமார் 8 பெண்கள் வரை ஏமாந்து இருப்பதும், சில பெண்கள் இவரால் பாதிக்கப்பட்டுத் தங்களது வாழ்க்கையை இழந்து இருப்பதும் தெரியவந்தது. மேலும், இதனை வெளியே தெரிவித்தால் சமுதாயத்தில் அவமானம், வெளியில் நடமாட முடியாது என்று கருதி, பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் அமைதி காத்ததும் தெரியவந்தது. இதையடுத்து சுத்தமல்லி போலீசார், நேற்று இரவு வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, அப்துல் வகாபை இரவோடு இரவாகக் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவரால் பாதிக்கப்பட்ட மேலும் சில பெண்கள் தைரியமாக முன்வந்து புகார் அளித்தால், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் உறுதியளித்துள்ளனர்.
-
சட்டம் ஒழுங்கில் பெரிய ஓட்டை.. நாமக்கல்லில் தலைதூக்கிய துப்பாக்கி கலாச்சாரம்! 20 சவரன் நகை அபேஸ்! -
திருச்செந்தூர் போலீஸ் ஏட்டுக்கு பெண்ணால் வில்லங்கம்.. வாட்ஸ் அப் சாட்டால் வாழ்க்கைக்கே சிக்கல் -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
“சிறையில் சலுகை கிடையாது” சாத்தான்குளம் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 போலீசாரின் மனு தள்ளுபடி! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
கயத்தாறு சம்பவம்.. ஆணவக்கொலை அல்ல! காவல்துறை அளித்த விளக்கம்! வதந்தி பரப்ப வேண்டாம் என வார்னிங் -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு












Click it and Unblock the Notifications