Nellai: திருவிழாவிற்கு போன மகன்! கள்ளக்காதலனை வீட்டுக்கு கூப்பிட்ட தாய் ரெஜினா.. நள்ளிரவில் நடுங்கிய நெல்லை

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை (Nellai) மாவட்டம் மூலக்கரைப்பட்டி அருகே பெற்ற தாயை பார்க்க கூடாத கோலத்தில் மகன் கொம்பையா பார்த்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மகன், தாய் என்றும் பாராமல் சைக்கிளுக்கு காற்று அடிக்கும் பம்பால் கோபம் தீர தலையில் தாக்கியுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த தாய் ரெஜினா, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியாகினார். நெல்லையை உலுக்கிய இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

ஒழுக்கம் தவறினால் மொத்த குடும்பமே சீரழிந்துவிடும் என்று சொல்லப்படும் வார்த்தைக்கு எத்தனையோ உதாரணங்கள் நடக்கின்றன. ஆனாலும் இதுபோன்ற தனிமனித ஒழுக்கக்கேடு செயல்களால் சம்பந்தப்பட்ட குடும்பமே நிலைகுலைந்து போகும் நிகழ்வுகள் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

nellai-son-kills-mother-over-illicit-relationship-with-male-friend-shocking-incident

பார்க்க கூடாத கோலத்தில் பார்த்த மகன்

நெல்லையில் அப்படியான ஒரு சம்பவம்தான் நடைபெற்றுள்ளது. தாயை எந்த மகனும் பார்க்க கூடாத கோலத்தில் மகன் பார்த்து இருக்கிறார். இதனால், ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற மகன் எடுத்த முடிவு நெல்லையை உலுக்கியுள்ளது. இந்த நெஞ்சை உறையவைக்கும் சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி அருகே எடுப்பல் கிராமம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கக்கன் தெருவில் வசிப்பவர் பூல்பாண்டி, இவருடைய மனைவி ரெஜினா (வயது 43). இந்த தம்பதியின் மகன்கள் கொம்பையா (22), வினோத் (13). பூல்பாண்டி கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக தாமிரபரணி ஆற்றில் குளித்தபோது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் முழ்கி உயிரிழந்தார்.

திருவிழா பார்க்க போன கொம்பையா

இதனால், குடும்பத்தை காப்பாற்ற ரெஜினா கட்டிட தொழிலாளியாக வேலைக்கு சென்று வந்தார். கொம்பையா ஓட்டுநராக வேலை செய்து வரும் நிலையில், இரண்டாவது மகன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில்தான், ரெஜினாவுக்கும் இளைஞர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நாளடைவில் நெருங்கி பழகியிருக்கிறார்கள். இருவருக்கும் தகாத உறவும் ஏற்பட்டுள்ளது.

இது மூத்த மகன் கொம்பையாவிற்கு தெரியவந்துள்ளது. தாய் ஒழுக்கம் தவறி செல்வது அறிந்த மகன் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் தாயிடமே இது பற்றி கூறி கண்டித்துள்ளார். ஆனாலும் ரெஜினா, இளைஞருடன் பழக்கத்தை கைவிடவில்லை. இந்த நிலையில்தான், நேற்று முன் தினம் பரப்பாடி அருகே உள்ள தாமரை குளத்தில் நடந்த கொடை விழாவிற்கு கொம்பையா சென்று இருக்கிறார்.

ஏன் இப்படி நடந்து கொள்கிறாய்?

திருவிழாவை பார்த்துவிட்டு நள்ளிரவில் வீட்டிற்கு வந்து இருக்கிறார். அப்போது வீட்டில் தாயார் ரெஜினா, தனது கள்ளக்காதலுடன் அலங்கோலமாக இருந்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்த கொம்பையா வீட்டிற்குள் ஆவேசமாக சென்றுள்ளார். உடனே அங்கிருந்த கள்ளக்காதலன் தப்பி ஓடிவிட்டார்.

கோபத்தின் உச்சியில் இருந்த கொம்பையா, "ஏன் இப்படி நடந்து கொள்கிறாய்?" என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் கோபம் தீராத கொம்பையா சைக்கிளுக்கு காற்று அடிக்க பயன்படுத்தும் இரும்பு பம்பை எடுத்து தாயாரின் தலையில் அடித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த ரெஜினா, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.

போலீசார் விசாரணை

நெல்லை மாவட்டத்தை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரெஜினாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொம்பையாவை கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+