தலையிலடித்து கொண்ட பக்தர்கள்.. திருநெல்வேலி கோயிலில் அம்பாள் சன்னிதானத்தில்.. யாரிந்த ஜோடி.. தேவையா
நெல்லை: நெல்லையப்பர் கோயிலில் முகம் சுளிக்கும் வகையில் ரீல்ஸ் எடுத்த சம்பவம் பக்தர்களிடையே மிகப்பெரிய வருத்தத்தை உண்டுபண்ணிவிட்டது.. தக் லைப் (Thug life) படத்தில் கமல்ஹாசன் - சிம்பு ஆடும் ஜிங்குச்சா (Jinguchaa song) என்ற பாட்டுக்கு டான்ஸ் ஆடியதன் விளைவு, இன்று சம்பந்தப்பட்ட மாணவனும், மாணவியும் மன்னிப்பு கேட்டு, தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளனர்.
பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.. இங்கு சுவாமி நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாளுக்கு தனித்தனி ராஜ கோபுரங்களுடன் கூடிய தனித்தனி சன்னதிகள் அமையப் பெற்றுள்ளது. தற்போது சில கட்டமைப்பு பணிகளும் கோயிலுக்குள் நடந்து வருகிறதாக தெரிகிறது.

எனினும், கோயிலுக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறையவில்லை.. உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்களுக்கும் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்வதுடன் கோயிலில் உள்ள சிற்பக்கலைகளை வெகுவாக ரசித்து செல்கின்றனர்.
மாணவன் - மாணவி
குறிப்பாக, உள்பிரகார வீதிகள், ரதவீதிகள், இசைத்தூண், கல்தூண்களில் உள்ள சிற்பங்களின் அருகில் நின்றும் போட்டோ, வீடியோ எடுத்து செல்கிறார்கள். புதுமண தம்பதிகள், கல்லூரி மாணவ, மாணவிகள் என அனைவரும் வந்து வழிபட்டு செல்வதால், கோயிலில் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டேயிருக்கும்.
இந்நிலையில், இந்த கோயிலுக்குள், ஒரு மாணவனும், மாணவியும் சேர்ந்து ரீல்ஸ் டான்ஸ் ஆடியிருக்கிறார்கள்.. இதை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.. அம்பாள் சன்னதி அருகே நின்று டான்ஸ் ஆடியதுடன், அதை பிரபல பாடலுடன் இணைத்து ரீல்ஸ் வீடியோவாக சோஷியல் மீடியாவில் அப்லோடு செய்தனர்.. சிக்கிட்டான் சிக்கார காளை என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டு ரீல்ஸ் ஆக இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளனர்.
அதிருப்தி - மனவருத்தம்
அந்த நடனம் முகம் சுளிக்கும் விதமாக இருந்தால், வீடியோவை பார்த்த பொதுமக்கள் அதிருப்தியும், மன வருத்தமும் அடைந்தனர்.. இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறையும், காவல்துறையும் இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதேபோல, முகம் சுளிக்கும் வகையில் ரீல்ஸ் செய்துள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பிலும், கோவில் செயல் அலுவலர் சைபர் கிரைம் போலிசில் புகார் தரப்பட்டது.. கோவில் செயல் அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் இது குறித்து விசாரணையை மேற்கொண்டனர். சம்பந்தப்பட்டவர்களை தேடி வருகிறோம் என்று சைபர் கிரைம் போலீசாரும் தெரிவித்திருந்தனர்.
மன்னிப்பு வீடியோ
இந்நிலையில், நெல்லையப்பர் கோவிலில் நடனமாடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட மாணவரும், மாணவியும், தங்களது செயலுக்கு மன்னிப்பு கேட்டு இன்னொரு வீடியோ வெளியிட்டுள்ளனர்..
அதில், ''நெல்லையப்பர் கோவிலில் நடனமாடி வீடியோ எடுத்ததற்கும், அதை வெளியிட்டதற்கும் மன்னிப்பு கேட்டு கொள்கிறோம். அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கி விட்டோம். இனிமேல் இது போன்ற இடங்களில் வீடியோ எடுக்க மாட்டோம்'' என்று தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்ஸ்டா மோகத்தில் பலரும் ரீல்ஸ் வெளியிட்டு, பிறகு பக்தர்களின் கொந்தளிப்புக்கு பிறகு மன்னிப்பும் கேட்டு வீடியோ வெளியிட்டிருந்தனர்.. அதுபோல, நெல்லையப்பர் கோயிலிலும் நடந்துள்ள சம்பவம் பக்தர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.
-
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி












Click it and Unblock the Notifications