தவெகவுக்கு தாவிய இசக்கி சுப்பையா.. அம்பை தொகுதியில் எதிர்க்கட்சியே இல்லை! மக்கள் டென்ஷன்!
திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற இசக்கி சுப்பையா தற்போது தவெகவுக்கு தாவியிருக்கிறார். ஏற்கெனவே இந்த தொகுதியில் களம் இறங்கியிருந்த காங்கிரஸ் தவெக பக்கம் போய்விட்டது. இதனால் இந்த தொகுதியில் எதிர்க்கட்சியே இல்லாத சூழல் உருவாகியிருக்கிறது.
எதிர்க்கட்சி என்று இருந்தால்தான் அது ஜனநாயகத்திற்கு அழகு. ஆனால், அம்பாசமுத்திரம் தொகுதியில் எதிர்க்கட்சி என்று ஒன்று இல்லாததால் மக்கள் டென்ஷன் ஆகியிருக்கிறார்கள்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது. கடந்த 60 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நிலவி வந்த திராவிட ஆட்சிக்கு விஜய் முற்றுப்புள்ளி வைத்திருந்தார். ஆனால், தனிப்பெரும்பான்மை பெறவில்லை என்பதால் விஜய்யால் உடனடியாக முதலமைச்சராக முடியவில்லை. இந்த நிலையில்தான் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், இடதுசாரிகள், ஐயுஎம்எல் மற்றும் விசிக ஆகிய கட்சிகள் விஜய்க்கு ஆதரவு கொடுத்தன. இதனையடுத்து விஜய் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
இருப்பினும் பஞ்சாயத்து முடியவில்லை. சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, போதுமான பலம் இருந்த போதிலும் அதிமுகவிலிருந்து 25 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு அளித்திருந்தனர். இதனை காங்கிரஸ் உட்பட திமுக கூட்டணியிலிருந்து வந்த கட்சிகள் விரும்பவில்லை. இப்படி இருக்கையில், இந்த எம்எல்ஏக்களில் சிலர் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகிவிட்டனர். அதில் இசக்கி சுப்பையாவும் ஒருவர்.
அம்பாசமுத்திரம் தொகுதியில் மொத்தம் 3 கட்சி வேட்பாளர்களிடையேதான் டாப் ஃபைட் இருந்தது. ஒன்று தவெக வேட்பாளர் ராஜகோபால், இரண்டாவது அதிமுகவின் இசக்கி சுப்பையா, மூன்றாவது திமுக கூட்டணியில் களமிறங்கியிருந்த காங்கிரஸ் வேட்பாளர் துரை. இதில் இசக்கி 65,000க்கும் அதிகமான வாக்குள் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.
இப்போது இவரும் தவெகவில் இணைந்திருப்பதால், யாருக்கு ஓட்டு போட்டாலும் அது விஜய்க்குதான் போகிறது என மக்கள் அதிருப்தியடைந்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications