இரட்டை அர்த்த பேச்சு.. தனி அறையில் மெதுமெதுவாக நெருங்கிய தாளாளர்! அலறிய மாணவி.. தென்காசியில் ஷாக்
தென்காசி: தென்காசியில் உள்ள தனியார் பாரா மெடிக்கல் கல்லூரியில் தனி அறையில் இரட்டை அர்த்தத்தில் பேசி பேசிய தாளாளர் மெதுமெதுவாக கிட்ட நெருங்கி பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதால் மாணவி அலறியடித்து ஓடினார். இதையடுத்து கல்லூரி தாளாளரை போலீசார் கைது செய்த நிலையில் அந்த சம்பவம் பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
தென்காசியில் தனியாருக்கு சொந்தமான பாரா மெடிக்கல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு நர்சிங் மற்றும் அதனை சார்ந்த படிப்புகளை ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த கல்லூரியில் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை கடையநல்லூர், பாவூர்சத்திரம், சுரண்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த கல்லூரியின் தாளளராக முகமது அன்சாரி உள்ளார். இந்த கல்லூரியில் பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் 2ம் ஆண்டு நர்சிங் படிப்பை பயின்று வருகிறார். இந்நிலையில் தான் நேற்று முன்தினம் முகமது அன்சாரி அந்த மாணவியை தனது அறைக்கு அழைத்துள்ளார். இதையடுத்து மாணவி அங்கு சென்றுள்ளார்.
அப்போது முகமது அன்சாரியின் செயல்பாடுகள் தவறான வகையில் இருந்துள்ளது. அதாவது மாணவியிடம் அவர் இரட்டை அர்த்தத்தில் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு மாணவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் அங்கிருந்து அவர் வெளியே செல்ல முயன்றுள்ளார். ஆனால் முகமது அன்சாரி அவரை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை என சொல்லப்படுகிறது.
அதோடு இரட்டை அர்த்தத்தில் பேசிய முகமது அன்சாரி மெதுமெதுவாக மாணவியை நெருங்கி சென்றுள்ளார். மாணவி விலகி சென்றாலும் கூட அவர் தனது செயல்பாட்டை கைவிடவில்லை. ஒரு கட்டத்தில் மாணவியை நெருங்கி சென்று அவர் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அங்கிருந்து கதறியபடி வெளியே ஓடிவந்துள்ளார். மேலும் கல்லூரியில் இருந்து வீட்டுக்கு சென்ற மாணவி தனது நேர்ந்த சம்பவம் குறித்த குடும்பத்தினரிடம் கண்ணீருடன் கூறியுள்ளார். இதையடுத்து சம்பவம் குறித்து குற்றாலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது அன்சாரியை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications