நெல்லை போலீஸ் ஸ்டேஷனில் பெட்ரோல் குண்டு வீச்சு.. பின்னணியில் ஷாக்.. சிசிடிவியில் பதிவான 5 பேர்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூர் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் சோதனைச்சாவடி மீது 5 பேர் கும்பல் இன்று பெட்ரோல் குண்டை வீசிவிட்டு சென்றனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும் இந்த துணிகர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெட்ரோல் குண்டு வீசிய 5 பேரின் உருவம் சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே தான் இந்த சம்பவத்தின் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

திருநெல்வேலி தச்சநல்லூரில் போலீஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையில் தான் இன்று மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் திடீரென்று போலீஸ் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியது.

petrol-bomb-thrown-at-thachanallur-police-station-in-tirunelveli

இந்த பெட்ரோல் குண்டு போலீஸ் ஸ்டேஷனின் நுழைவு வாயில் அருகே இருக்கும் கோவிலின் சுவரில் பட்டது. இதில் கோவிலின் சுவர் சேதமடைந்தது. அதேபோல் தாழையூத்து சோதனை சாவடியிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. ஒரேநாளில் 2 இடங்களில் அதுவும் போலீஸ் நிலையம் மற்றும் போலீஸ் சோதனை சாவடி மீது பெட்ரோல் குண்டு வீசியது நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இருப்பினும் அதிர்ஷ்டவசமாக 2 பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்திலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. போலீஸ் ஸ்டேஷன் மற்றும் சோதனை சாவடி மீது பெட்ரோல் குண்டு வீசியது ஒரே நபர் தானா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

போலீஸ் ஸ்டேஷனை சுற்றிய பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கும்பல் போலீஸ் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியது தெரியவவந்தது. மேலும் அந்த 5 பேரின் உருவங்களும் சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகி இருந்தது.

அவர்கள் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி போலீசார் விசாரித்தனர். அப்போது தச்சநல்லூர் அருகே ராஜவல்லிபுரத்தை சேர்ந்த கிருஷ்ண பெருமாள் (வயது 19), அஜித் குமார் (30), பெருமாள் (27), சரண் (19), அருண் (22) என்பது தெரியவந்தது. அதோடு அவர்கள் தலைமறைவானதும் தெரியவந்தது. தற்போது சரண் என்பவரை போலீசாரிடம் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+