திருப்பூர் காலி.. தென்காசி பக்கம் குவிந்த வடமாநில இளைஞர்கள்! நாற்று நடவு பணிகளில் தீவிரம்
தென்காசி: அமெரிக்க வரி காரணமாக ஆடை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே திருப்பூரில் ஆடை உற்பத்தி நிறுவனங்களில் வேலையில்லாமல் வடமாநில இளைஞர்கள், பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் நாற்று நடவு பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
உலக அளவில் ஒப்பிடும்போது இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம். 10-24 வயது வரை எடுத்துக்கொண்டாலும், 15-29 வயது வரை எடுத்துக்கொண்டாலும் இரண்டு அளவிலும் இந்தியாவில்தான் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகம் இருக்கின்றனர்.

வேலையிண்மை
குறிப்பாக பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இளைஞர்களின் எண்ணிக்கை சரிபாதிக்கும் மேல் இருக்கிறது. ஆனால், அம்மாநிலங்களில் போதிய வேலை வாய்ப்பு இல்லாததால், இளைஞர்கள் புலம்பெயர் தொழிலாளர்களாக மாறுகின்றனர். அவர்கள் தமிழகத்திற்கு வேலை தேடி வருகின்றனர். திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள ஆடை உற்பத்தி நிறுவனங்கள் இவர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கின்றன.
ஆட்குறைப்பை செய்த நிறுவனங்கள்
குறைந்த கூலியை கொடுத்து, அதிகமான நேரம் வேலை வாங்கிக்கொள்ளலாம் என்பதால் வடமாநில தொழிலாளர்களை இந்த நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்துகின்றன. இருப்பினும் அமெரிக்கா, இந்தியா மீது போட்ட வரி காரணமாக கோவை, திருப்பூர் தொடங்கி நாடு முழுவதும் ஆடை உற்பத்தி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்நிறுவனங்கள் ஆட்குறைப்பை செய்திருக்கின்றன. வேலையில்லாததால் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
அதிலும் தீபாவளி பண்டிகை காரணமாக பனியன் உற்பத்தி நிறுவனங்கள் 9 நாட்கள் வரை விடுமுறை கொடுத்திருக்கின்றன. எனவே சொந்த மாநிலம் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
வேளாண் தொழிலில் வடமாிநல இளைஞர்கள்
சிலர் சென்னை உள்ளிட்ட மற்ற நகரங்களில் வேலை வாய்ப்பு தேடி புலம் பெயர்ந்துள்ளனர். இன்னும் சிலர் தென் மாவட்டங்களில் கிடைக்கும் வேலைகளை செய்து பிழைப்பை ஓட்டி வருகின்றனர். குறிப்பாக வேளாண் தொழிலில் ஈடுபட தொடங்கியுள்ளனர். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் என டெல்டா மாவட்டங்களில் நாற்று நடுவது, களை எடுப்பது, அறுவடை என பல்வேறு பணிகளில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். டெல்டாவில் வேளாண் நிலம் அதிகம், குறைந்த கூலிக்கு ஆட்கள் தேவைப்படும்போது நம்மூர் மக்கள் நியாயமான கூலியை கேட்பார்கள். எனவே வடமாநில தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்.
தென்காசியில் வடமாநில இளைஞர்கள்
ஆனால், குறைந்த அளவு வேளாண் நிலம் கொண்ட தென்காசியிலும் நாற்று நடவு பணிகளில் வடமாநில இளைஞர்கள் அதிக அளிவல் ஈடுபட்டிருப்பது கவனம் பெற்றிருக்கிறது. தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக 1.95 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. தென்காசி அப்படியல்ல. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருப்பதால், ஆறு மற்றும் குளங்களில் நிரம்பும் நீரின் அளவை வைத்துதான் நெல் சாகுபடி செய்வார்கள். அதிகபட்சமாவே அம்மாவட்டத்தில் 21,000 ஏக்கர்தான் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. குறைந்த அளவிலான நிலத்தில் விவசாயம் செய்யக்கூட உள்ளூர் ஆட்கள் போதிய அளவு இல்லாததால், வடமாநில இளைஞர்கள் நாற்று நடவு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
வடமாநில இளைஞர்கள் நாற்று நடவு பணிகளில் ஈடுபட்டிருப்பதை பார்க்கும் உள்ளூர் வயதானவர்கள், நம்மூருல விவசாய வேலை பார்க்க கூட ஆள் இல்லையா? என்று ஆதங்கப்படுகின்றனர். ஆனால், கல்வியறிவு தமிழ்நாட்டு மக்களை விவசாய தொழிலாளர்களாக அல்லாமல், கார்ப்பரேட் ஊழியர்களாகவும், தொழில்முனைவோராகவும் மாற்றியிருக்கிறது. அந்த வகையில் வடமாநில தொழிலாளர்களின் வருகை தவிர்க்க முடியாததாகியிருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!










Click it and Unblock the Notifications