இந்து கடவுள்களுக்கு எதிராக கருத்து பதிவிட்ட வைகோ முன்னாள் உதவியாளர் கைது!
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் இந்துக் கடவுள்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்ட நகர்மன்ற முன்னாள் தலைவரின் மகனும், வைகோவின் முன்னாள் உதவியாளருமான அருணகிரி கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வடகாசி அம்மன் கோயில் 1 ஆவது தெருவைச் சேர்ந்தவர் அருணகிரி (55). இவர் அருணகிரி சங்கரன்கோவில் என்ற முகநூல் பக்கத்தில் இருந்து தான் பல்வேறு நாடுகளுக்குச் சென்ற பயணங்கள் குறித்த அனுபவங்களை எழுதி வருகிறார்.

இந்நிலையில், அருணகிரி இந்துக் கடவுள்களை இழிவுபடுத்தும் வகையிலும், இந்து சமுதாய பண்பாட்டினை அவமதிக்கும் வகையிலும், மதக் கலவரத்தை தூண்டும் வகையிலும் தொடர்ச்சியாக தகவல் பதிவிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி நகரத் தலைவர் பாடாலிங்கம் என்கிற ராஜா நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் பேரில் சங்கரன்கோவில் டவுன் போலீசார் அருணகிரி மீது வழக்குப் பதிவு செய்து செவ்வாய்க்கிழமை கைது செய்து சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
கைதான அருணகிரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் முன்னாள் உதவியாளராக இருந்துள்ளார். அருணகிரியின் தந்தை பழனிச்சாமி சங்கரன்கோவில் முன்னாள் நகர்மன்ற தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications