200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்.. நெல்லையை சேர்ந்த 3 பேர் பலி..கேரளா திருமணத்திற்கு சென்றபோது சோகம்
திருவனந்தபுரம்: கேரளாவில் நடைபெறும் திருமண விழாவில் கலந்து கொள்ள சென்ற போது வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர் விபத்தில் நெல்லையை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மூணாறு உள்ளது. இந்த பகுதியில் உள்ள எஸ்டேட்டில் வசித்து வரும் வரும் ஒருவருக்கு இன்று திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமண விழாவில் பங்கேற்பதற்காக திருநெல்வேலியை சேர்ந்த சுமார் 20 பேர் வேன் ஒன்றில் மூணாறுக்கு சென்று கொண்டிருந்தனர்.

இந்த வேன், கொச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது தேனி மாவட்டம் பொடிமெட்டு என்ற இடத்தில் அருகே உள்ள தோன்றிமலை பகுதியில் சென்று கொண்டிருந்தது. திருமன வீட்டிற்கு சென்றதால் உற்சாகமாக வேனில் இருந்தவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தறிகெட்டு தாறுமாறாக ஓடியது.
இரவு 7 மணியளவில் இருள் சூழ்ந்த நேரத்தில் சாலையோரம் இருந்த 200 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் வேனுக்குள் சிக்கியவர்கள் தங்களை காப்பாற்றுமாறு அபயக்குரல் எழுப்பினர். வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த சாந்தம்பாறை போலீசார், அங்குள்ள மக்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 3 பேர் நிகழ்விடத்திலேயே பலியாகினர். உயிரிழந்தவர்கள் பெருமாள் (வயது 58) வள்ளியம்மாள் (வயது 70, சுசீந்திரன் என்ற 8 வயது சிறுவன் என அடையாளம் தெரிந்தது.
மேலும் வேன் ஓட்டுநர் உள்பட 18 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு காயம் அடைந்தவர்கள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல், விபத்தில் பலியான 3 பேரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக தேனி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண வீட்டிற்கு சென்றபோது விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications