கொடைக்கானல் வட்டக்கானல் பக்கத்தில் அருமையான கிராமம்.. குடியரசு தின விடுமுறையை கொண்டாட சூப்பர் இடம்
கொடைக்கானல்: வியாழன் , வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என நான்கு நாட்கள் விடுமுறை வருகிறது. இந்த விடுமுறையை கொண்டாட கொடைக்கானல் போகிறீர்கள் என்றால், கண்ணடிப்பாக வட்டக்கானல் தாண்டி வெள்ளகவி கிராமத்திற்கு டிரக்கிங் செல்லுங்கள். மிக அற்புதமான அனுபவமாக இருக்கும்.
முன்பெல்லாம் சுற்றுலா என்றால் எப்போதாவது ஒருமுறை தான் மக்கள் செல்வார்கள். இப்போது அப்படி அல்ல.. சொந்த ஊர் செல்வதே சுற்றுலா போல் ஆகிவிட்டது. வார இறுதி மற்றும் விடுமுறை நாட்கள் வந்தால் மக்கள் சுற்றுலா தலங்களை நோக்கி அடிக்கடி பயணிக்கிறார்கள். குறிப்பாக
சென்னை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் வேலை செய்வோர், பலர் மனஅழுத்தம் காரணமாக மலைவாசஸ் தலங்களுக்கு சுற்றுலா செல்ல விரும்புகிறார்கள். குடும்பத்துடன் ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்கிறார்கள். கான்கிரீட் காட்டில் இருந்து தப்பி, இயற்கையோடு வாழ விரும்புகிறார்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக சுற்றுலா தலங்களில் இருப்பதால் அதை அடிக்கடி விரும்புவோர் இப்போத அதிகம் ஆகிவிட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் இந்திய அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக இருக்கிறது. இயற்கை அப்படியே இயற்கையாக இருக்கும் பகுதிகளில் முதன்மையானது கொடைக்கானல். கொடைக்கானலில் தான் பூண்டு, அவகேடோ, பிலம்ஸ், பேரிக்காய் அதிகம் விளைகிறது. கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றன. இதில் நாம் பார்க்க போது டிரக்கிங் பிரியர்கள் விரும்பும் இடமான வெள்ளகவி.
நம்மில் பலருக்கும் மலைகளில் இயற்கையை ரசித்தபடி டிரெக்கிங் போக மிகவும் பிடிக்கும். அப்படி போகும் இடம் யாரும் அதிகம் போகாத இடமாக இருக்க வேண்டும் என் ஆசைப்படுறீங்களா.. அந்த இடம் பூலோகத்தின் சொர்க்கம் போல் இருக்க வேண்டுமா? அப்படி ஆசை இருந்தால் தாராளமாக கொடைக்கானல் அருகே உள்ள வெள்ளகவி கிராமத்திற்கு போகலாம்.

வெள்ளகவி செல்ல வழி: கொடைக்கானல் பேருந்து நிலையம் சென்று அங்கிருந்த வட்டக்கானலுக்கு ஜீப்பில் அல்லது காரில் போக வேண்டும். அங்கிருந்து மலையில் இறங்கும் பாதையில் நடந்து செல்ல வேண்டும். காடுகளை மறைத்தபடி, பனிமூட்டமாக மேகங்கள் அடிக்கடி கடந்து செல்லும். உங்கள் கண்களால் மலைகளையும், காடுகளையும் பார்க்கவே முடியாத அளவிற்கு மேகங்கள் தவழந்து செல்லும்.
வெள்ளகவிக்கு போக வேண்டும் என்றால், முதலில் வட்டக்கானல் செல்ல வேண்டும். இதில் முக்கியமான விஷயத்தை அறிய வேண்டும். கொடைக்கானல் பேருந்து நிலையத்தை ஒட்டிய பகுதிகளில் உங்களுக்கு வேண்டிய உணவு, தண்ணீர் உள்பட அனைத்தையும் வாங்கி கொள்ளுங்கள். ஏனெனில் வட்டக்கானலில் பெரிய அளவில் உணவகங்கள் இருக்காது. கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 6 கிலோமீட்டர் பயணித்தால் தான் வட்டக்கானல் வரும். அங்கிருந்து இன்னொரு 6 கிலோ மீட்டர் நடந்து சென்றால் தான் வெள்ளகவி கிராமத்தின் அழகை ரசிக்க முடியும்.
வட்டக்கானல் போகும் போது விடுமுறை நாட்களில் கண்டிப்பாக போக்குவரத்து நெரிசல் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். எனவே அதற்கும் தயராகவே காலை நேரத்திலேயே செல்வது நல்லது, டால்பின்னோஸை தாண்டும் போதே நீங்கள் வெள்ளகவி ஊராட்சி என்ற போர்டை காண முடியும். உங்களுக்கு தேவையான பொருட்களை (வாட்டர் பாட்டில் சினாக்ஸ்) போன்றவற்றை வாங்கி கொள்ளுங்கள். அதற்கு பிறகு வெள்ளகவி வரை எங்குமே எதுவுமே கிடைக்காது.
டால்பின் நோஸில் இருந்து ஐந்து நிமிடம் நடந்தால் மிகச்சிறந்த வியூ பாய்ண்ட் இருக்கும். அதை பார்த்துவிட்டு நடந்து சென்றால் அங்கு ஒரு பைப் வெள்ளகவி நோக்கி செல்லும். அந்த பைப் வழியாக நடந்து சென்றால் நேராக வெள்ளகவி கிராமத்தை அடைந்து விடலாம். அங்கு ஓல்ட் கோடை (Old kodai cafe) டென்ட்டில் தங்க ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளுங்கள். அங்கு சென்று இரவு முழுவதும் தங்க முடியும்.சாப்பாடு மற்றும் தங்கும் வசதிகள் செய்து தருகிறார்கள்.
வெள்ளகவி கிராமத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால் குறைந்தது 400 வருடம் முன்பே உருவான கிராமம் ஆகும். வெள்ளகவி வழியாகவே கொடைக்கானலுக்கு வெள்ளைக்காரர்கள் அந்த காலத்தில் போயிருக்கிறார்கள். இந்த கிராம மக்கள் பயணத்திற்கு இப்போதும் குதிரை தான் ஒரே போக்குவரத்தாக உள்ளது . அதில் தான் வேண்டிய பொருட்களை கொடைக்கானல் கொண்டு வந்து செல்கிறர்கள்.
வெள்ளகவி கிராமத்திற்கு குதிரையிலும் போய் வர முடியும். அதற்கு உள்ளூரில் போய் விசாரித்து கொள்ளுங்கள். கொடைக்கானல் நகரத்தில் போய் வெள்ளகவி டிரக்கிங் பற்றி கேட்டால் இன்னும் கூடுதல் தகவல்களை அறிய முடியும்.
இதில் இன்னொரு முக்கியமான சிறப்பும் இருக்கிறது. வெள்ளகவியில் இருந்து தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கும் போக முடியும். ஆனால் 8 கிலோமீட்டர் தூரம் நடந்து கும்பக்கரை அருவிக்கு வர வேண்டும். அங்கிருந்து நீங்கள் 7 கிலோ மீட்டர் தூரம் வாகனங்களில் பயணித்தால் தேனி மாவட்டம் பெரிய குளத்தை அடைய முடியும். பொதுவாக கொடைக்கானலில் இருந்து வெள்ளகவி டிரெக்கிங் பிரச்சனை இல்லை.வெள்ளகவியில் இருந்து பெரியகுளம் வருவது எளிதானது. அது வனவிலங்குகள் உள்ள பகுதியாகும்.வனத்துறை அனுமதி கண்டிப்பாக தேவைப்படும். இதைப்பற்றி வனத்துறை அலுவலகங்களில் விசாரித்துக் கொள்ளுங்கள். வெள்ளகவி கிராமத்தில் இருந்து தேனி மாவட்டத்தின் அழகை ரசிக்கலாம். இரவில் தங்கி சூப்பராக இயற்கையை அனுபவிக்கலாம். அந்த அனுபவத்தை போய் வந்தவர்களிடம் கேட்டு பாருங்கள். புரியும்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications