பொள்ளாச்சிக்கு ஷூட்டிங் போனாலே விஜயகாந்த் விரும்பி கேட்கும் உணவு "இதுதான்"! சீக்ரெட் சொன்ன உதவியாளர்
சென்னை: பொள்ளாச்சிக்கு போனாலே இந்த உணவை தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் சாப்பிடாமல் வரமாட்டாராம். இந்த சீக்ரெட்டை அவருடைய உதவியாளர் சுப்பையா தெரிவித்துள்ளார்.
இந்த பொறப்புத்தான் நல்லா ருசித்து சாப்பிட கிடைச்சது என்ற பாடலை பிடிக்காதவர்களும் அதில் வரும் உணவுகளை சுவைக்காதோரும் இருக்கவே மாட்டார்கள். அந்தளவுக்கு அந்த பாடலில் உள்ள அனைத்து உணவுகளும் அந்தந்த ஊர் ஸ்பெஷலை குறிக்கும்.

நாமும் அந்தந்த ஊர்களுக்கு சென்றால் அந்த ஊர் ஸ்பெஷல் உணவை சுவைக்காமல் வரவே கூடாது. அப்படி வந்தால் அது "தெய்வ குத்தமாகிவிடும்" . அது போல் சில ஊர்களில் ஸ்வீட், காரம், பலகாரங்களும் பிரபலமாக இருக்கும். அதை நாமும் ருசித்துவிட்டு, நம் உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கும் பார்சல் வாங்கிக் கொண்டு செல்லலாம்.
அது போல் நமக்கு பிடித்த நடிகர், நடிகைகளுக்கு என்ன உணவு பிடிக்கும் என்பதை அறிந்து கொள்வதில் அதிக ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் கட்சிகளுக்கு அப்பால் அனைவருக்கும் பிடித்தமான தலைவர் நடிகர் விஜயகாந்த். இவருக்கு என்ன உணவு பிடிக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அதாவது விஜயகாந்த் உணவு விஷயத்தில் மிகவும் சரியாக இருப்பார். அவருக்கு அசைவ உணவு என்றால் மிகவும் பிடிக்கும். அவர் என்ன உணவு சாப்பிடுகிறாரோ அதே உணவைத்தான் லைட்மேன் முதல் அனைவரும் சாப்பிட வேண்டும் என நினைப்பாராம்.
இதற்கு காரணம் என்னதான் ரைஸ் மில் ஓனரின் மகனாக இருந்தாலும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதற்காக சென்னைக்கு வந்த போது வாய்ப்பு தேடிய போது சாப்பாட்டிற்காக நிறைய கஷ்டப்பட்டாராம். ஒரு முறை அவருக்கு சான்ஸ் கிடைத்ததும் சில படங்களில் நடித்த போது ஹீரோயின் வருவதற்குள் விஜயகாந்த் சாப்பிட உட்கார்ந்து விட்டாராம்.
அப்போது அங்கு வந்தவர்கள் சாப்பிட உட்கார்ந்துவிட்டார் என்றும் பாராமல் விஜயகாந்தை எழுப்பினராம். அது முதல் உணவு அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என விஜயகாந்த் நினைத்தாராம். அத்துடன் லோக்கலில் சூட்டிங் இருந்தால் அனைவருக்கும் அவரது வீட்டிலிருந்தே உணவு கொண்டு வர சொல்வாராம்.
அது போல் வெளியூர்களுக்கு சென்றால் அங்கு ஃபேமஸான உணவை ருசிப்பாராம். அந்த வகையில் அவருக்கு என்ன உணவு பிடிக்கும் என்பது குறித்து விஜயகாந்தின் உதவியாளராக இருந்த சுப்பையா, சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். அதாவது விஜயகாந்த் பொள்ளாச்சிக்கு படப்பிடிப்புக்கு சென்றாலே அங்கு ஃபேமஸான மசாலா ஆட்டுத் தலை கறியை ரெடி செய்து வைக்குமாறு சொல்லிவிடுவாராம்.
விஜயகாந்த் மிகவும் எளிமையானவர். எந்த உணவாக இருந்தாலும் சாப்பிடுவாராம். அதிலும் அவருக்கு அசைவம் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் அந்தந்த ஊருக்கு போனால் மட்டும் அங்கு பிரபலமான உணவை விரும்பி சாப்பிடுவாராம். பொள்ளாச்சியில் தலைக்கறி மட்டும் பிரபலமில்லை. பொள்ளாச்சி இளநீர் மிகவும் பேமஸ்.
பொள்ளாச்சியில் உணவு மட்டுமல்லாமல் சில சுற்றுலா தலங்கள் குறித்தும் பார்க்கலாம். முதலில் டாப்ஸ்லிப்- இங்கு வனவிலங்கு சரணாலயம் உள்ளது. சிறுத்தைகள், மான்கள், புலிகள், யானைகள், கரடிகள், நரிகள் உள்ளிட்டவை உள்ளன. இங்குள்ள அமராவதி நீர்த் தேக்கத்தில் முதலைகள் உள்ளன.இங்கு யானை சஃபாரி என்ற ஒரு மணி நேர நிகழ்வு மிகவும் பிரபலம். யானை சவாரி காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திறந்திருக்கும்.
அதன் பிறகு வேதாந்திரி மகரிஷியின் அறிவுத் திருக்கோயில் எனும் தியான மையம் உள்ளது. இது அமைதியை தேடும் இடமாக அமைந்துள்ளது. ஆழியாறு அல்லது வால்பாறைக்கு பயணம் செய்தால் இந்த இடத்தை பார்க்காமல் யாரும் வரமாட்டார்கள்.
அது போல் இங்கு மாசாணி அம்மன் கோயில் உள்ளது. இது பொள்ளாச்சி ரயில் நிலையத்திலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆழியார் அணை முக்கிய சுற்றுலா தலமாகும். இயற்கை எழில் கொஞ்சும் வகையில் இந்த ஆழியார் அணை இருக்கும். இப்படியாக பல்வேறு இடங்களை இந்த கோடை காலத்தில் சுற்றி பார்க்கலாம்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications