வால்பாறை போன வெளிநாட்டு பயணிக்கு இப்படி ஆகிடுச்சே... சுற்றுலா செல்வோர் இந்த தவறு செய்யாதீங்க
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை மிகவும் புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்று. அதேநேரம் வனவிலங்குகள் அதிக நடமாட்டம் உள்ள ஆபத்தான சுற்றுலா தலமாகவும் இருக்கிறது. இங்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி, சாலையில் யானை நின்றிருந்த போது, அதை பற்றி அறியாமல் அதன் அருகிலேயே இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது அவருக்கு நடந்த சம்பவத்தை பார்த்து சக சுற்றுலா பயணிகள் ஆடிப்போனார்கள்.. அவர் எடுத்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
கோயம்புத்தூர் மாவட்டத்தை பொறுத்தவரை வால்பாறை முக்கியமான கோடை வாசஸ்தலமாக திகழ்கிறது. வால்பாறையில் இருந்து திருச்சூர் நோக்கி செல்லும் சாலக்குடி சாலையில் வாகனம் ஓட்டுவது பலருக்கும் பிடிக்கும். வால்பாறையில் சுற்றுலா செல்வது ஒருபுறம், அடர்ந்த காட்டில் திரில் டிரைவிங் அனுபவம் என்று ரசிக்க விரும்பும் சுற்றுலா பயணிகள் வால்பாறைக்கு அதிக அளவில் வருகிறார்கள். வால்பாறைக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.

வால்பாறையை பொறுத்தவரை ஊட்டி, கொடைக்கானல் போல் முழுமையான சுற்றுலா நகரம் என்றாலும், வனவிலங்கு நடமாட்டம் மிக அதிகமாகும். குறிப்பாக வால்பாறைக்கு செல்லும் முக்கிய சாலையான வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாகவே இருக்கும்.
அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், ஆழியாறு, கவர்க்கல் எஸ்டேட், வாட்டர் பால்ஸ், அட்டகட்டி ஆகிய பகுதிகளில் அண்மை காலங்களில் காட்டு யானை அடிக்கடி வந்து செல்லும் பகுதிகளாக உள்ளன, இதன் காரணமாகவே இரவில் அல்லது மாலையில் வால்பாறை பொள்ளாச்சி சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணிப்பது மிகவும் ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது. அதேநேரம் பகலில் செல்லும் வாகன ஓட்டிகளிடமும் சாலையில் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
வால்பாறையில் உள்ள வாட்டர்பால்ஸ் அருகே எஸ்டேட் டைகர் வேலி பள்ளத்தாக்கு காட்சி முனை பகுதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் காட்டு யானை ஒன்று சாலையின் குறுக்கே நின்றது. வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் சென்ற வாகன ஓட்டிகள், யானையை கண்ட உடன், சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தி அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் பொள்ளாச்சியில் இருந்து ஜெர்மனி நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி மைக்கேல் (வயது 70) மோட்டார் சைக்கிளில் வால்பாறை நோக்கி பயணித்தார். வாட்டர்பால்ஸ் அருகே வந்ததும், சாலையில் யானை நின்றதை கவனித்த மைக்கேல், கண்டு கொள்ளாமல் யானை அருகே மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது சாலையில் நின்ற யானை ஆவேசத்துடன் சுற்றுலா பயணி மைக்கேலை தூக்கி வீசிவிட்டு வனப்பகுதிக்குள் சென்றது. இதில் அவர் பலத்த காயம் அடைந்து மயங்கி விழுந்தார்.
யானை சென்றதும், அவரை அந்த பகுதி மக்கள் மீட்டு, அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே யானை நிற்பது தெரிந்தும் மோட்டார் சைக்கிளில் யானைக்கு அருகில் சென்ற ஜெர்மனி நாட்டு சுற்றுலா பயணி யானை தாக்கி வீசிய வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications