எங்கும் நிற்காமல் உலகிலேயே நீண்ட தூரம் செல்லும் விமானம் எது தெரியுமா? ஆச்சரியமான தகவல்கள்
சிங்கப்பூர்: உலகில் எங்குமே இடையில் நிற்காமல் நீண்ட தூரம் செல்லும் விமானம் எந்த ரூட்டில் செல்கிறது தெரியுமா? அது நியூயார்க் -சிங்கப்பூர் இடையே தான் செல்கிறது. சிங்கப்பூர் டூ நியூயார்க் செல்லும் விமானம் எங்குமே இடையில் நிற்காமல் 15,345 கிலோ மீட்டர் தூரத்தை 18 மணி நேரம் பயணித்து கடக்கிறது.
மாறா படத்தில் யார் அழைப்பது என்ற பாடலில் "சேரும் வரை போகும் இடம் தெரியாதெனில்.. போதை தரும் பேரின்பம் வேறுள்ளதா.. பாதி வரை கேட்கும் கதை முடியாதெனில்.. மீதி கதை தேடாமல் யார் சொல்லுவார்..அலைவார் அவர் எல்லாம் தொலைவார்... வசனம் தவறு.. அலைவார் அவர் தான் அடைவார்.. அவர் அடையும் புதையல் பெரிது " என்ற வரிகள் பயணத்தின் இன்பத்தை அழகாக சொல்லியிருப்பார்கள்.. ஆம் பலருக்கும் பிடித்த இடங்களுக்கு செல்ல மிகவும் பிடிக்கும்.

பயணம் இனிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக தங்களுக்கு பிடித்தப்படி நீண்ட தூரம்பயணித்து காடுகள், மலைகள், கடல்கள், அருவிகள் என இயற்கையை தேடி மக்கள் பயணிக்கிறார்கள். இந்த உலகில் நீண்ட தூரம் பயணிக்க விரும்புவோர் பலர் இருக்கிறார்கள். அதுவும் விமானத்தில் பயணிக்க விரும்புவோர் நிறையவே இருக்கிறார்கள்.. அதுவும் அந்த நீண்ட விமான பயணம் உலகின் மிக அழகான இரண்டு நகரங்களுக்கு இடையே இருந்தால் எப்படி இருக்கும்.. அப்படி ஒரு பயணம் இருக்கிறது. அதுதான் தான் நியூயார்க்- சிங்கப்பூர் விமான பயணம்..
சிங்கப்பூர் அழகான நாடு என்பதை, உலகின் மிக முக்கியமான பொருளாதார நகரமாக திகழ்கிறது. உலகின் மிக முக்கியமான விமான நிலையங்கள் என்ற பட்டியலை எடுத்தால் அதில் சிங்கப்பூர் தான் முக்கியமான இடத்தில் இருக்கிறது.. அதேபோல் துபாய் இருக்கும். நம் நாட்டு மக்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு எளிதாக செல்ல இன்றும் சிங்கப்பூர் அல்லது துபாய் தான் செல்கிறார்கள்.. இந்திய பெருங்கடல் பக்கம் சிங்கப்பூரும், அரபிக்கடல் பக்கம் துபாயும் இருக்கிறது.
உலகின் மிக நீளமான எங்கும் இடையில் நிற்காமல் செல்லும் விமானம் என்றால் அது நியூயார்க் மற்றும் சிங்கப்பூர் இடையே செல்லும் விமானம் தான். சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் இந்த விமானம் எங்குமே இடையில் நிற்காமல் 15,345 கிலோ மீட்டர் தூரத்தை 18 மணி நேரம் 7 நிமிடத்ல் கடக்கிறது. உலகின் இரண்டாவது நீண்ட பயண நேரம் கொண்ட எங்கும் இடையில் நிற்காத விமானமும் சிங்கப்பூருக்கு தான் வருகிறது. நேவார்க் மற்றும் சிங்கப்பூர் இடையே 15,345 கிலோ மீட்டர் தூரத்தை 18 மணி நேரம் 25 நிமிடத்தில் கடக்கிறது.
உலகின் 3வது நீண்ட பயண நேரம் கொண்ட எங்கும் இடையில் நிற்காத விமானம் பெர்த் மற்றும் லண்டன் இடையே செல்கிறது. இந்த விமானம் 17 மணி நேரம் மற்றும் 32 மணி நேரம் பயணித்து 14500 கிலோ மீட்டர் தூரத்தை கடக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications