லக்கேஜ் இல்லாமல் சுற்றுலா.. உங்களால் நம்ப முடிகிறதா.. சுற்றுலா வழிகாட்டிகள் சொன்ன சூப்பர் விஷயம்
சென்னை: சுற்றுலா போகும் போது, லக்கேஜ்களை பொதிமூட்டைகளை போல் தூக்கி கொண்டு செல்வது போல் இனி நீங்கள் போகத்தேவையில்லை. அதற்கு விரைவில் சூப்பர் தீர்வு வரப்போகிறது என்று சுற்றுலா வழிகாட்டிகள் சொல்கிறார்கள். அது எப்படி சாத்தியம் என்கிறார்களா.. இந்த செய்தியை பாருங்கள்.. ஏன் என்று தெரியும்.
கொடைக்கானல்,ஊட்டி, சிம்லா, கூர்க், டார்ஜிலிங் என எங்காவது மக்கள் சுற்றுலா செல்ல விரும்பினால் அதற்கு அந்த ஊர்களில் உள்ள ஓட்டல்களின் அறைளை முன்பதிவு செய்து தொடங்கி, பேருந்து அல்லது அல்லது ரயில் அல்லது விமானத்தில் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு தயாராகுவோம்.

வெளிநாடு சுற்றுலா என்றாலும் இதேபோல் தான் அனைத்து விஷயங்களை நாம் பார்த்து பார்த்து செய்ய வேண்டும். சுற்றுலா செல்வோருக்கு உள்ள சிக்கல் என்னவென்றால் லக்கேஜ் ஆக உடைகள் உள்பட பல்வேறு அடிப்படை தேவைகளுக்கான விஷங்களையும் பேக்கிங் செய்ய வேண்டும். பெரிய லக்கேஜ் பேக்கை எங்கு சுற்றுலா செல்வதாக இருந்தாலும் கண்டிப்பாக எடுத்து செல்ல வேண்டும். அதற்கு பெரிய தொகையை விமானத்தில் ஏறும் போது நாம் கட்டியாக வேண்டும். இதுதான் தற்போது வரை உள்ள நடைமுறை.
ஆனால் விரைவில் அதற்கான தேவைகள் இல்லாமல் போகாலாம். சில நாடுகள் வாடகை சிஸ்டத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளன. ஜப்பான் ஏர்லைன்ஸ் இந்த திட்டத்தை சோதனை முறையில் செய்துள்ளது.
ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் திட்டப்படி, சுற்றுலா பயணிகள் ஜப்பான் செல்லும் போது, தாங்கள் செல்லும் பகுதிக்கு உடைமைகளை எடுத்து செல்ல தேவையில்லை. தேவையான ஆடைகளை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
ஜப்பானில் சுற்றுலா செல்பவர்கள் டோக்கியோ, டோக்யோ, ஒசாகா, புகாகோ ஆகிய நகரங்களுக்கு சென்ற பின்னர், பல அளவுகளில், ஸ்டைல்களில் ஆடைகளை எடுத்து பயன்படுத்தலாம். இதற்கான ஏற்பாடு ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் செய்துள்ளது.
ஜப்பானில் மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளும்இதுபோல் வாடகைக்கு சில விஷயங்களை சுற்றுலா பயணிகளுக்கு தருகின்றன. சுவிட்சர்லந்து, ஃபிரான்ஸ், ஆஸ்திரியா போன்ற நாடுகளில் உள்ள விடுதிகளில் தற்போது விளையாட்டு உபகரணங்கள், ஜேக்கட்ஸ், ஹெல்மெட் உள்பட அத்தியாவசிய பொருட்கள் வாடகைக்கு தரப்படுகிறது.
ஏன் இந்த நடைமுறை என்றால், சுற்றுலா பயணிகள் லக்கேஜ்கிற்காக விமானங்களில் அதிக கட்டணத்தை செலுத்த வேண்டியதிருக்கும். எனவே விமானங்களுக்கு கட்டணமாக கொடுப்பதைவிட இந்த வாடகை கட்டணம் குறைவு என்பதால் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
இதனிடையே Dubrovnik என்ற பிரபலமான சுற்றுலாத் தளத்திலும் வீலுடன் கூடிய பெட்டிகளை எடுத்து வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் எனில் அதிக லக்கேஜ்களை எடுத்து வர விமான நிறுவனங்களுமே தடை விதிக்கின்றன. பல்வேறு நகரங்களில் லக்கேஜ்களுடன் சுற்றுவதை மக்களும் விரும்பவில்லை. எனவே விரைவில் ஆடைகளை, அத்தியாவசிய பொருட்களை வாடகைக்கு விடும் நிறுவனங்கள் சுற்றுலா தளங்களில் தோன்றினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இலலை.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications