6 ஆயிரமும் மத்திய அரசு நிதிதான்.. வெள்ள நிவாரணம் 10 ஆயிரம் கொடுங்க..தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு வழங்கியுள்ள பேரிடர் மேலாண்மை நிதியை மட்டுமே பொதுமக்களுக்கு நிவாரணமாக முதல்வர் அறிவித்து இருக்கிறாரே தவிர மாநில அரசின் பங்கு என எதுவுமே இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும் நிவாரண தொகையை 10 ஆயிரமாக உயர்த்தி கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடந்த 4, 5 ஆம் தேதிகளில் பேய் மழை கொட்டியது. இந்த பெருமழையால் கடுமையன வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. சென்னை முழுவதும் வெள்ளத்தில் தத்தளித்தது. முக்கிய பகுதிகளில் கூட மின் தடை, இணைய சேவை பாதிப்பு ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இன்னும் கூட சில பகுதிகளில் முழுமையாக இயல்பு நிலை திரும்பவில்லை. சென்னை முழுக்க இயல்பு நிலையை மீட்டெடுக்க மாநகராட்சி ஊழியர்கள் முழு வீச்சில் பணியாற்றி வருகிறார்கள்.

 10,000 rupees should be provided as flood relief fund BJP leader Annamalai urges to TN Govt

சென்னையில் பல இடங்களில் வெள்ள நீர் வடிந்து இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், வெள்ளத்தால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி அளிப்பது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்கு பிறகு நிவாரணை உதவியாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அண்ணாமலை ட்வீட்: ரேஷன் கடைகள் மூலமாக ரொக்கமாக இந்தத் தொகை அளிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். இந்த நிலையில், தமிழக அரசு அளித்த நிதி போதாது என்றும் 10 ஆயிரமாக அறிவிக்க வேண்டும் எனவும் பாஜக தலைவர் அண்னாமலை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை கூறியிருப்பதாவது:- மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதியாக, ரூபாய் 10,000 வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக கோரிக்கை விடுத்திருந்தது.

 10,000 rupees should be provided as flood relief fund BJP leader Annamalai urges to TN Govt

900 கோடி நிதி வழங்கியுள்ளது: இந்த நிலையில், வெறும் 6,000 ரூபாய் மட்டுமே நிவாரண நிதியாக அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பேரிடர் மேலாண்மை நிதியாக, தமிழக அரசுக்கு ரூபாய் 450 கோடி வீதம் இரண்டு தவணைகளில், ரூபாய் 900 கோடி நிதி வழங்கியுள்ளது. பொதுமக்களுக்கு வழங்கப்படும் நிவாரண நிதி, மத்திய அரசு வழங்கியுள்ள இந்த பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்துதான் வழங்கப்படுகிறது என்ற நிலையில், மாநில அரசின் பங்கு ஒன்றுமில்லாமல், வெறும் ரூபாய் 6,000 மட்டுமே நிவாரண நிதி என்ற அறிவிப்பு பொதுமக்களை ஏமாற்றத்துக்குள்ளாக்குகிறது.

கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி அன்று, மத்திய அரசு வெளியிட்ட சுற்றறிக்கையில், பேரிடர் நிவாரண நிதியாக பொதுமக்களுக்கு, உடைகள் இழப்பீடாக ஒரு குடும்பத்துக்கு ரூ. 2,500 மற்றும் உடமைகள் இழப்பீடாக ரூ. 2,500 மற்றும் ஒரு வாரத்துக்குக் குறைவான மருத்துவமனையில் தங்கி பெறும் சிகிச்சைக்கு ரூ. 5,400 வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

தவறான தகவல்: தமிழக பாஜக, இதன் அடிப்படையில்தான் ரூ. 10,000 நிவாரண நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியது. மேலும், மத்திய அரசின் அதே சுற்றறிக்கையில், நெற்பயிர் உள்ளிட்ட பயிர்வகைகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 17,000 எனவும், பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்களுக்கு, ஹெக்டேருக்கு ரூ. 22,500 எனவும், மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 8,500 எனவும், சேதமடைந்த குடிசை வீடுகளுக்கான இழப்பீடு ரூ. 8,000 ஆகவும்,

 10,000 rupees should be provided as flood relief fund BJP leader Annamalai urges to TN Govt

எருது, பசு உள்ளிட்ட கால்நடைகள் இழப்பீடு ரூ. 37,500 எனவும், வெள்ளாடு, செம்மறி ஆடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு ரூ. 4,000 எனவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டிருந்தது. அனைத்து மாநிலங்களும், பேரிடர் காலங்களில், இழப்பீடாக இந்தத் தொகையையே மக்களுக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், திமுக அரசு, தாங்கள் ஏதோ நிவாரண நிதியை தற்போது உயர்த்தியிருப்பது போல, தவறான தகவல் அளித்துள்ளனர்.

ரூ.10,000 வழங்க வேண்டும்: ஒட்டுமொத்தமாக, முதல்வர் ஸ்டாலின் அவர்கள், பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு வழங்கியுள்ள பேரிடர் மேலாண்மை நிதியை மட்டுமே பொதுமக்களுக்கு நிவாரணமாக அறிவித்திருக்கிறாரே தவிர, மாநில அரசின் பங்கு என்று எதுவுமே இல்லை.

எனவே, அறிவித்துள்ள ரூ.6,000 நிவாரண நிதியை, ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், வழக்கம்போல, திமுக கட்சியினர் தலையீடு இல்லாமல், டோக்கன் வாங்க வேண்டும் என்று பொதுமக்களை திமுக நிர்வாகிகள் வீட்டுக்கு அலைக்கழிக்காமல், முறையாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் பாஜக சார்பாக வலியுறுத்துகிறோம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+