சென்னையை புரட்டி போட்ட பேய் மழை.. மிக்ஜாம் புயலால் இதுவரை 17 பேர் உயிரிழப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைநகரை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் மக்களின் உயிர்களையும் விட்டுவைக்கவில்லை. மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்புகளால் சென்னையில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வங்க கடலில் உருவாகி சென்னையை உருக்குலைத்துப் போட்டது மிக்ஜாம் புயல். வரலாறு காணாத பெருமழையை 2 நாட்களாக கொட்டிக் கவிழ்த்து விட்டு ஆந்திராவில் கரையை கடந்தது மிக்ஜாம் புயல். மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரில் 2 நாட்கள் விடிய விடிய மழை கொட்டியது. இதன் காரணமாக சென்னை நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. சாலைகள், குடியிருப்பு பகுதிகள் என எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கியது.

17 people lost their lives in Chennai due to Michaung storm floods

சென்னையில் 35 மணிநேரத்தில் சராசரியாக 40 செ.மீ.க்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்திருக்கிறது. இதனால் சென்னை மாநகரும் புறநகரும் வெள்ளத்தில் மூழ்கியது. சென்னையின் முக்கிய சாலைகளும் ஆறு போல மாறின. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. இதேபோல் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

மூழ்கிய சென்னை: இதேபோல் மக்கள் பாதுகாப்பு கருத்து மின் சேவையும் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக சென்னை மக்கள் வெள்ள நீரிலும், இருளிலும் தவித்தனர். பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவுகள் அங்கு வழங்கப்பட்டனர். எனினும் மிக்ஜாம் புயல் கரையை கடக்கும் போது காற்று வேகமாக வீசியது.

இதன் காரணமாக சாலையோரம் நின்றிருந்த மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதேபோல் வீடுகளில் நின்ற மரங்கள், மின் கம்பங்கள் புயல் காரணமாக அடியோடு சாய்ந்து விழுந்தன. இதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இதேபோல் வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்க படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். படகுகள் மூலம் மீட்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

17 பேர் உயிரிழப்பு: இந்த நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக இதுவரை 17 உயிர்ழந்துள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. புயலின் காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. இதில் 69 இடங்களில் உடனுக்குடன் மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டன என்றும் தெரிவித்துள்ளது.

மரங்கள் விழும்போது எதிர்பாராத விதமாக அதன் அடியில் சிக்கி உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. அப்படி வெள்ளத்தில் மூழ்கியும், சுவர்கள் இடிந்து விழுந்தும் இதுவரை சென்னையில் 17 பேர் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக மரங்கள் சாய்ந்து விழும்போது அதில் சிக்கியும், வீடுகள், சுவர்கள் இடிந்து விழும்போது அதில் சிக்கியும் வெள்ளநீரில் மூழ்கியும் 17 பேர் உயிரிழ்ந்ததாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+