தமிழ்நாடு முழுவதும் 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு.. அரையாண்டுத் தேர்வு இன்று தொடக்கம்
சென்னை: அரையாண்டுத் தேர்வு இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு முழுவதும் 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு இன்று தொடங்குகிறது.
மிக்ஜாம் புயல் கனமழையால் ஒத்தி வைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வு இன்று தொடங்கவுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளின் தூய்மைப் பணிக்காக ஒரு கோடியே 90 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

'மிக்ஜாம்' புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம். மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மாணவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசால் பள்ளிகளுக்கு 04.12.2023 முதல் 09.12.2023 வரை விடுமுறை அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுரைகளின்படி, 'மிக்ஜாம்' புயல் மழையினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி வளாகங்களை சுத்தம் செய்து, வரும் 11.12.2023 (திங்கட்கிழமை) அன்று பள்ளி திறக்கும் நாளில் நல்ல கற்றல் சூழலை உருவாக்கும் விதமாக பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.இவற்றைக் கண்காணிக்க பள்ளிக் கல்வித் துறையைச் சார்ந்த 17 அதிகாரிகள் 4 மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நிதி ஒதுக்கீடு: இப்பணிகளுக்காக சென்னை. செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தலா 50 இலட்சம் ரூபாயும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 40 இலட்சம் ரூபாயும், ஆக மொத்தம் ஒரு கோடியே 90 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இம்மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் தங்களது பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப்புத்தகம் உள்ளிட்ட இழந்த மாணவர்களுக்கு. பள்ளிகள் திறந்தவுடன் பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடை மற்றும் புத்தகப்பை போன்ற பொருட்களை வழங்க நாளை (திங்கள்கிழமை -11.12.2023) மாணவர்களின் தேவைகளைக் கண்டறிந்து, (செவ்வாய்க்கிழமை - 12.12.2023) அன்று பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப் புத்தகம் உள்ளிட்டவை வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கெனவே, 13.12.2023 அன்று அரையாண்டுத் தேர்வுகள் தொடங்க இருக்கும் நிலையில், புத்தகங்கள் இல்லாமல் மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக வேண்டும்.
தேர்வுகள் ஒத்திவைப்பு: புயல் காரணமாக தமிழ்நாட்டில் இன்று தொடங்க இருந்த அரையாண்டுத் தேர்வுகள் அனைத்து மாவட்டங்களிலும் 2 நாட்கள் ஒத்திவைக்கப்படுகின்றன. மழை வெள்ளத்தால் 4 மாவட்டங்களில் புத்தகங்கள் சேதமான நிலையில் மாணவர்கள் சிரமப்படுவார்கள் என்பதால் அரையாண்டுத் தேர்வுகளை, புதன்கிழமை (டிசம்பர்-13) தொடங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
வழிகாட்டு நெறிமுறை: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூவர் மாவட்டங்களில் வெள்ளத்திற்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டு இன்று தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளிகளுக்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. பள்ளிகளின் சுவர்கள் பாதுகாப்பாக உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
2. பள்ளிகளுக்கு உள்ளே வகுப்பறைகளில் மின்கசிவு உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இருக்கும் பட்சத்தில் அதை சரி செய்ய வேண்டும்.
3. ஈரமாகி சுவர்கள் இருந்தால் அங்கே வகுப்புகளை நடத்த கூடாது.
4. மொத்தத்தில் பள்ளிகள் சுத்தமாக உள்ளதா என்று பார்க்கக் வேண்டும்.
5. பள்ளிக்கு அருகே முட்புதர்கள் இருந்தால் அதை நீக்க வேண்டும்.
6. பள்ளிக்கு உள்ளே தண்ணீர் இருந்தாலும் அதை பற்றி புகார் அளிக்க வேண்டும், என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications