குபேரன் பார்வைன்னு சொல்லுறது இதுதான் போல! லாட்டரியில் நடந்த மேஜிக்! சில நிமிடங்களில் கொட்டிய கோடிகள்
டெல்லி: குபேரன் பார்வைன்னு சொல்லுறது இது தான் போல என்ற சொல்லுக்கு இணங்க லாட்டரி மூலம் ஒரு மேஜிக் நடந்துள்ளது. சும்மா கடைக்கு போன போது நண்பர் வலியுறுத்தியதின் பேரில் லாட்டரி டிக்கெட்டை வாங்கியிருக்கிறார். லாட்டரி டிக்கெட் வாங்கிய அடுத்த 1 மணி நேரத்தில் அந்த நபருக்கு ரூ.2.5 கோடி பரிசாக கிடைந்துள்ளது. நாகலாந்தில் நடந்த இந்த சம்பவத்தின் முழு விவரத்தை இங்கு பார்க்கலாம்.
அதிர்ஷ்டம் யாருக்கு எப்போது அடிக்கும் என்று தெரியாது. அதிர்ஷ்டம் என்பது எந்த விஷயத்திற்கு பொருந்துகிறதோ, இந்த லாட்டரிக்கு 100 சதவீதம் பொருந்தும். குலுக்கலின் போது என்ன நம்பர் வரப்போகிறது என்பது கடவுளுக்கே வெளிச்சம். இதனால், எந்த எண் வரும் என்று யாருமே கணிக்க முடியாது.

வேண்டா வெறுப்பாக வாங்கிய டிக்கெட்
வாழ்நாளில் நமக்கும் அதிர்ஷ்டக்காற்று வீசி விடாதா என்ற எதிர்பார்ப்பில் பலரும் லாட்டரிகளை வாங்குவார்கள். இந்தியாவை பொறுத்தவரை கேரளா, பஞ்சாப், நாகலாந்து உள்ளிட்ட 13 மாநிலங்களில் மட்டுமே லாட்டரிக்கு சட்டப்பூர்வ அனுமதி இருக்கிறது. பிற மாநிலங்களில் லாட்டரி விற்பனை செய்வது சட்ட விரோதம் ஆகும். சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்..
கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்று சொல்வார்கள். அதேபோல, லாட்டரியே வாங்க விருப்பம் இல்லாத வேண்டா வெறுப்பாக டிக்கெட் வாங்கியவர்களுக்கு கூட சில நேரம் பல கோடி பரிசு மழை கொட்டி விடும். அதேநேரத்தில் பல ஆண்டுகளாக லாட்டரியே கதி என கிடந்து பல லட்சங்களை வீணடித்து, கடைசி வரை ஒரு ரூபாய் கூட பரிசு அடிக்காமல் போனவர்களும் உண்டு.
ரூ. 5 கோடிக்கு லாட்டரி வாங்கியும் ஏமாற்றம்
கேரளாவில் கூட கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அதாவது, கிட்டத்தட்ட ரூ.5 கோடிக்கு வாழ்நாள் முழுக்க லாட்டரி வாங்கிய முதியவர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ. 5 ஆயிரம் தான் பரிசு அடித்து இருந்தது. அவர் லாட்டரியை வாங்க செலவிட்ட தொகையை சேர்த்து வைத்து இருந்தால் கூட கோடீஸ்வரர் ஆகியிருக்கலாம் என்பதே நிதர்சனம் என்றாலும் கூட ஆசை யாரை விட்டது என்பார்களே அதேபோலத்தான்.
எப்படியாவது நமக்கு லக் அடித்துவிடாதா என பலரும் லாட்டரி மீது ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த லாட்டரிகளில் அவ்வப்போது சில சுவாரசிய தகவல்களும் வெளியாகி வருவதை பார்க்க முடிகிறது. நாகலாந்தில் நடைபெற்ற சுவாரசிய நிகழ்வு ஒன்றை இங்கே பார்க்கலாம். நாகலாந்து மாநிலத்தில் மாலவுட் பகுதியில் கார் பஜார் நடத்தி வருவர் திப்தி பன்சால். இவர் கடந்த வெள்ளிக்கிழமை தனது நண்பருடன் தனது கார் விற்பனை மையம் இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளார்.
1.5 மணி நேரத்தில் 2.5 கோடி பரிசு
லாட்டரியில் பெரிதாக ஆர்வம் இல்லாமல் இருந்துள்ளார் திப்தி. அவருடன் வந்த நண்பர்தான், திப்தியை லாட்டரியை வாங்க வலியுறுத்தியுள்ளார். நண்பர் சொல்கிறாரே என்று அங்குள்ள மார்க்கெட்டில் லாட்டரி விற்று கொண்டு இருந்தவரை கூப்பிட்டுள்ளனர். அவரும் இன்று இரவே குலுக்கல் நடைபெற உள்ளது. பரிசு விழுந்தால் சில மணிநேரங்களில் கோடிகள் உங்களுக்குதான் என்று கூறியுள்ளார்.
சரி முயற்சித்துதான் பார்ப்போமே என்று நினைத்த திப்தி, ஏதாவது ஒரு லாட்டரி டிக்கெட்டை எடுத்து தாங்க என கேட்டு இருக்கிறார். இப்படி எண்ணை கூட சரியாக பார்க்காமல் வாங்கிய லாட்டரிக்கு 1.5 நிமிடத்தில் 2.5 கோடி பரிசுத்தொகை விழுந்தது தெரியவந்தது. இதனைக் கேட்ட திப்தி சந்தோஷத்தில் துள்ளிகுதித்து உள்ளார். சில மணி நேரங்களில் தலைவிதியே மாறிவிட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பதாக சொல்லியிருக்கிறார்.
நெட்டிசன்களின் ஜாலியான கமெண்ட்ஸ்
தனது வீட்டில் பேசிவிட்டுதான் இந்த பணத்தை என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்ய இருப்பதாக திப்தி கூறினார். சமூக வலைத்தளங்களில் இந்த தகவல் வைரலாக பரவி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்களுக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக பதிவிட்டு வருகிறார்கள். கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்ச்சுட்டு கொடுக்கும் என்றும், நேரம் வரும் போது எல்லாம் தானாக நடக்கும் என்று சொல்வார்களே அதை இப்போது தான் நேரில் பார்க்கிறேன் என்றும் சில நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications