சென்னை கனமழையால் சோகம்.. மின்சாரம் தாக்கி 2 பேர் பலி.. மழை பெய்யும்போது ரொம்ப கவனம் மக்களே!
சென்னை: சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்து, பல இடங்களில் மழைநீர் தேங்கிய நிலையில், மின்சாரம் தாக்கி இருவேறு பகுதிகளில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு மழை வெளுத்து வாங்கியது. நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கிய கனமழை 3 மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 26 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னை, கொளத்தூர், திரு.வி.க நகர் பகுதிகளில் 15 செ.மீ. மழையும், அம்பத்தூரில் 14 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

தியாகராய நகர், அசோக் நகர், தேனாம்பேட்டை, அயனாவரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கே.கே. நகர் பர்னபி சாலை, அயனாவரம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால், மக்கள் அவதிக்கு உள்ளாகினர். இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சென்னையில் நேற்று மாலை முதல் பெய்து வரும் மழையால் பல்வேறு சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளன. இதனால் பொதுமக்கள் பலரும் கடும் அவதி அடைந்துள்ளனர். இந்நிலையில் பல்வேறு இடங்களில் சாலைகளில் இருக்கும் பள்ளங்கள் மற்றும் குழிகள் எங்கே இருக்கிறது என தெரியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த மழைக்கு இருவேறு இடங்களில் 2 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை தியாகராய நகரில் உள்ள பல்வேறு சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. இந்நிலையில் மழை காரணமாக தியாகராய நகர் வாணி மஹால் பகுதியில் மின்கம்பம் அருகே ஒதுங்கிய போது மின்சாரம் தாக்கி அசாம் மாநிலத்தை சேர்ந்த 35 வயது நபர் ஒருவர் உயிரிழந்து உள்ளார். அவரது பெயர் அப்பு ஹனிப்பு என தகவல் வெளியாகியுள்ளது. மின்கம்பத்தோடு ஒட்டிய நிலையில் இருந்த சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் மேற்கு மாம்பலம் பகுதியில் செல்போன் பேசியபடி சென்ற புதுபெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற 23 வயது இளைஞர் துடிதுடித்து விழுந்து உயிரிழந்துள்ளார். அவரது செல்போன் கருகி உள்ளது. இவர் மின்னல் தாக்கி உயிரிழந்தாரா அல்லது மின்சாரம் தாக்கி உயிரிழந்தாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் மழை தீவிரமடைந்துள்ள நிலையில், 2 பேர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தியாகராய நகர் மார்க்கெட் பகுதியில் மழைநீர் இன்னும் வெளியேறாமல் தேங்கி இருக்கும் நிலையில், மின்சாரம் தாக்கி பசுமாடு ஒன்று உயிரிழந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் சாலைகளில் செல்வதற்கு அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications